ஞாயிறு, 11 ஜனவரி, 2015

சுற்றுலா மற்றும் பயணக் கண்காட்சி : சென்னையில் தொடங்கியது


சென்னை,ஜன.09 (டி.என்.எஸ்)  இந்தியாவின் மிகப்பெரிய  டிடிஃப் (டிராவல் அன்டு டூரிஸம் கண்காட்சி) சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று தொடங்கியது. மிக அதிகளவிலான டிராவல் மற்றும் டூரிஸம் துறையில் ஈடுபட்டுள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களும் பங்குபெறும் இந்த கண்காட்சி  ஜனவரி 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த வர்த்தக கண்காட்சியில் இந்தியாவின் 17 மாநிலங்களிலுருந்தும் மற்றும் 9 வெளிநாடுகளிலுருந்தும் 160 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. வர்த்தக ரீதியான பயணப் பார்வையாளர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை பகுதிவரை பார்வையிட ஒதுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை பிற்பகல் முதல் இக்கண்காட்சியினை அனைவரும் பார்வையிடுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


வண்ணமயமான ஸ்டால்கள் அவர்கள் வழங்கும் சிறந்த விடுமுறைக்கான தொகுப்புகள் ஆகியவற்றை உணர கண்காட்சிக்கு வருகைதரும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் சுவையான அனுபவமாகும்.

தனியார் துறை ஆபரேட்டர்கள் உடன் கலந்து பங்கேற்பு மாநிலங்களாக இக்கண்காட்சியில் ஒரிசா மற்றும் குஜராத் மற்றும் சிறப்பம்சம் பொருந்திய ஹிமாச்சல் பிரதேஷ், கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் ஜம்மு காஷ்மீர் மற்றும் மற்ற மாநிலங்களான அந்தமான் மற்றும் நிக்கோபர், சண்டிகர், தில்லி, அரியானா, லட்சத்தீவுகள், மகாராஷ்டிரா, புதுச்சேரி, ராஜஸ்த்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலுருந்து பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறது. சென்னையில் இக்கண்காட்சி நடப்பதால் தமிழ்நாடு வலுவான பங்கேற்ப்பினை தருகிறது.

அழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கின் இடையிலும், தேர்தல் மற்றும் அரசியலின் நிச்சயமற்ற நிலையிலும் 10 தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இணைந்த ஜம்மு-காஷ்மீர் மாநில சுற்றுலாத்துறையின் குழு சுற்றுலா வளர்ச்சியின் அவசியத்தைக் காட்டுகிறது. டிடிஃப்ஃப் அமைப்பு சுற்றுலா பயன்பாட்டை விளம்பரம் செய்து அதன் வளர்ச்சிக்கு ஒரு தளமாக உள்ளது.

சுற்றுலா வளர்ச்சியில் உலக நாடுகள் அளவிலான ஈடுபாட்டில் இணத்து செயல்பட நியூசிலாண்டு, சீனா போன்ற நட்பு நாடுகளின் வழிகாட்டல் டிடிஃப் சென்னைக்கு உதவுகிறது. கம்போடியோ, ஹாங்காங், தாய்லாந்து, துருக்கி மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளின் தனிப்பட்ட பங்களிப்பும் டிடிஃப் சென்னைக்கு உண்டு. சுற்றுலாத் துறையின் மேல்மட்ட அதிகார மையத்தின் புதிய சுற்றுலாத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அரசு செயலர் ஆகியோரின் செயல்பாடுகளுடன் “ஸ்வாச் இன் கிரெடிபில் இந்தியா” எனும் வாசகத்துடன் இந்திய சுற்றுலாத்துறையின் பங்கேற்பும் இதில் உள்ளது.

இந்த பட்டியலில் பிரபலமான நிறுவங்களான டாட்டா மோட்டார்ஸ், மேக்மைடிரிப்.காம், ஐஆர்சிடிசி, யெடி ஹாலிடேய்ஸ், வைத்திரி விலேஜ், வைத்திரி ஹாலிடே லிங்க்ஸ், ஜர்னி டொ லடாக், சதர்ன் டிராவல்ஸ் அமைப்புகள் அங்கம் வைக்கின்றன.

டிடிஃப் –க்கு ஆதரவு தரும் அமைப்புகள்:

இந்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகம், ஆதரவு மாநிலமாக தமிழகம் மற்றும் சுற்றுலா பயண அமைப்புகளான இன்கிரெடிபில் இந்தியா, பசிபிக் ஏசியா டிராவல் சங்கம் (பிஏடிஏ), அஸோசியேஷன் ஆப் டொமஸ்டிக் டூர் ஆபரேடர்ஸ் ஆப் இந்தியா (எடிடிஓஐ), அவுட்பவுண்டு டூர் ஆபரேடர்ஸ் அமைப்பு, இந்திய சுற்றுலா முகவர்கள் சங்கம், டூர் ஆபரேட்டர்கள் இந்தியன் அசோசியேஷன் ஆப் எக்ஸிபிஷன்ஸ் அன்டு ஈவன்ட்ஸ்.

டிராவல்ஸ் நியூஸ் டைஜஸ்ட் என்பது சுற்றுலாவின் அலுவல் ரீதியிலான செய்தி வெளியீடு.

இந்தியா மற்றும் உலகம் முழுதும் இருந்து சுற்றுலாத்தளமாக நூற்றுக்கனக்கான கவர்ச்சிகரமான இடங்களை டிடிஃப் சென்னை வழங்குகின்றது. மாநில மற்றும் தேசிய சுற்றுலா நிறுவனங்கள் தவிர ஹோட்டல்கள், ரிசார்ட்கள், பயண முகவர்கள், சுற்றுலா ஆபரேட்டர்கள், கப்பல் நிறுவனங்கள், இரயில்வே மற்றும் இணையதளங்கள் போனறன மிகஅதிகளவில் கலந்து கொள்கின்றனர்.

1989 ஆம் ஆண்டே சுற்றுலாவிற்கான கண்காட்சியினை தொடங்கிவைத்த பெருமை இதன் அமைப்பளர் ஃபேர்ஃபெஸ்ட் மீடியா லிமிடெட் ஆகும். அதுமுதற்கொண்டு இத்துறையில் முன்னணியில் இருந்து வருகின்றனர். அகமதாபாத், பெங்களூரு, சென்னை, தில்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே, சூரத் போன்ற 10 நகரங்களில் டிராவல் அன்டு டூரிஸம் கண்காட்சி நடத்தியுள்ளது. இது தவிர குவஹாத்தியில் 2014 ஆம் ஆண்டு கண்காட்சியில் பங்குபெற்றது. வரும் 2015 ஆம் ஆண்டின் கண்காட்சியில் எல்லைதாண்டி காத்மண்டு நாடும் கண்காட்சியில் இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  tamil.chennaionline.com/news

கருத்துகள் இல்லை: