வியாழன், 15 நவம்பர், 2012

ஜேப்பியார்..உலகறிந்த சாராய ரவுடி.. கல்வி வள்ளள்

ஜேப்பியார்
ஜேப்பியார் கல்லூரியில் தொழிற்சங்கம் உருவான கதை! எம்ஜியார் கண்டெடுத்த கேடி முத்து ..  வினவு 

ஜேப்பியாரா? ஆகா உலக உத்தமர் என்று சொல்ல அவர் வீட்டிலேயே ஆள் கிடையாது. உலகறிந்த சாராய ரவுடி, முன்னாள் போலீசு ஏட்டு, முன்னாள் எம்.ஜி.ஆர். அடியாள், இன்னாள் கல்வி வள்ளள் என்று ஏகப்பட்ட முன்னாள், இந்நாள் பேர்வழி.
ஜேப்பியாரா? ஆகா உலக உத்தமர் என்று சொல்ல அவர் வீட்டிலேயே ஆள் கிடையாது. உலகறிந்த சாராய ரவுடி, முன்னாள் போலீசு ஏட்டு, முன்னாள் எம்.ஜி.ஆர். அடியாள், இன்னாள் சுயநிதிப் பொறியியல் கல்லூரி தாளாளர் சங்கத்தின் நுனியாள் (தலைவர்) என்று ஏகப்பட்ட முன்னாள், இந்நாள் பேர்வழி. சத்யபாமா, ஜேப்பியார், செயிண்ட் மேரிஸ், செயிண்ட் ஜோசப், SRR, மாமல்லன் போன்ற பொறியியல் கல்லூரிகள், ஜேப்பியார் ஸ்கூல், ஜேப்பியார் பால், ஜேப்பியார் சிமெண்ட், ஜேப்பியார் கான்கிரீட், ஜேப்பியார் ஸ்ட்ராங்க் ஸ்டீல், ஜேப்பியார் ஸ்வீட், ஜேப்பியார் குடிநீர், ஜேப்பியார் டிராவல்ஸ், மாட்டுப்பண்ணை, கல்யாண மண்டபம், முட்டத்தில் உருவாகும் மீன்பிடித் துறைமுகம் இப்படி பலான, பலான நிறுவனங்கள்.
இப்படி ஈரேழு சாராய லோகங்களையும் கட்டிக்காத்து, அண்ட சராசரக் கல்லூரிகளையும் கட்டி முடித்து ஆட்டிப்படைக்கும் “மாவீரன்” ஜேப்பியாருக்கு “என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?” என்பது போல ஒரு சோதனை! மாவீரன், மகா சன்னிதானம் என்று ஊதிப் பெருக்கப்பட்ட இந்தப் பலூனைத் தற்போது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற ஒரு ஊசியினுடைய முனை புஸ்ஸாக்கி விட்டது.
கடினமான பணிச்சூழல், எந்த உரிமையும் கிடையாது, ஜேப்பியார் கார் வருவதைப் பார்த்தவுடனே ஓடி ஒளிய வேண்டும், எதிரே வர நேரிடின் ஜேப்பியார் இறங்கி அடிப்பார். இந்த லட்சணத்தில் அப்பா என்றுதான் அவரை அழைக்க வேண்டுமாம். ஆனால் அப்பா வாயைத் திறந்தாலே ‘வாடா! போடா! என்ன மயிரு?’ என்ற வண்டமிழ்தான் வண்டை வண்டையாக வரும். இந்தக் காலத்தில் பெத்த அப்பனே இப்படிப் பேசினால், அடுத்த நொடி பாடை கட்ட வேண்டியதுதான்.
ஆனால் அனைத்தையும் தாங்கிக் கொண்டு ஜேப்பியாரின் சீமாட்டி கூறும் புளுக்கை வேலையையும், மரியாதைக் குறைவான வார்த்தைகளையும் வாங்கிக்கொண்டு வேலை செய்தாலும் பணி நிரந்தரமோ, ஊதிய உயர்வோ, ஈ.எஸ்.ஐ., பி.எஃப். பிடித்ததற்கான ஆதாரமாகச் சம்பள ரசீதோ கிடையாது. இதுதான் ஜேப்பியார் என்ற போக்கிரி வள்ளலின் சாம்ராஜ்யம்.

விஞ்சி நிற்கும் அடிமை தா.பா.வா? ஓ.பா.வா?

ம்மா விசுவாசத்தில் விஞ்சி நிற்பவர் தா.பா.-வா ஓ.ப.-வா?” என்று  பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு  ஜெயலலிதாவின்  அடிமையாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறார் வலது  கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன்.
தனது 80-வது பிறந்தநாளையொட்டி, வீட்டுக்‘கே’ வந்து வாழ்த்து  தெரிவித்த ஜெயலலிதாவின் மனிதப்பண்பு, தமிழர் பண்பாடு மற்றும்  இன்னபிற பண்பு நலன்கள் குறித்து அவர் வெளிப்படுத்தியிருக்கும்  புல்லரிப்பைக் காணும்போது, அது எத்தனை சொரிந்தாலும் அடங்காத  அரிப்பு என்று புரிகிறது. சில மாதங்களுக்கு முன் மகளின் திருமணத்துக்கு  வருவார் வருவாரென்று அம்மாவுக்காக மண்டப வாசலிலேயே தா.பா.  காத்திருந்த கதையை நினைவுபடுத்தி தா.பா. வைக் கேலி செதிருக்கிறது  விகடன் இதழ்.
இதற்கெல்லாம் கூச்சப்படுபவரல்ல தா.பா. அவரைக் கேட்டால், அது  போன மாசம்” என்பார்.
பார்ப்பன ஊடகங்களாலேயே நியாயப்படுத்த முடியாத, சட்டசபைக் கட்டிட  விவகாரம், செம்மொழி நூலகம், அண்ணா நூலகம், சமச்சீர் கல்வி  விவகாரம் ஆகியவை தொடர்பான ஜெ-வின் வக்கிரங்களை தா.பா.  நியாயப்படுத்துகிறார். நூறு கருணாநிதி வந்தாலும் ஒரு  ஜெயலலிதாவுக்கு சமமாக முடியாது” என்று கூவுகிறார். சோரம் போவதில் பாண்டியனுக்கு அடுத்த இடத்தை வைகோவும் பிடிக்க சான்ஸ் இருக்குலே 

தான் இறந்துவிட்டதாக தாயையே நம்ப வைத்த 'ரூ. 1,100 கோடி பிராடு' உல்லாஸ்!

 Stockguru Fraudster Made Mother Believe
டெல்லி: 7 மாநிலங்களில், சுமார் 2 லட்சம் முதலீட்டாளர்களிடம் ரூ. 1,100 கோடி வசூல் செய்து ஏமாற்றிய ஸ்டாக் குரு நிறுவனத்தின் அதிபர உல்லாஸ், தனது தாயையே தான் இறந்துவிட்டதாக நம்ப வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
முதலீடுகளுக்கு அதிக வருவாயை ஈட்டித் தருவதாகக் கூறி ஸ்டாக் குரு நிறுவனம் டெல்லி, உத்தர்கண்ட், ஹிமாச்சல் பிரதேஷ், சிக்கிம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் சுமார் 2 லட்சம் பேரிடம் பணம் வசூல் செய்தது. ஆனால், குறிப்பிட்ட காலத்தில் முதலீடுகளுக்கு வட்டியும் தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதையடுத்து இந்த நிறுவனம் மீது 14,303 பேர் புகார் தரவே, அதன் அதிபரான உல்லாஸ் பிரபாகர் கைரே (33), அவரது மனைவி ரக்ஷா உர்ஸ் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். ஓராண்டு தேடலுக்குப் பின் அவர்கள் சமீபத்தில் மகாராஷ்டிராவில் வைத்து பிடிபட்டனர்.
இந்த நிறுவனத்தில் 2,05,062 முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 10,000 வரை முதலீடு செய்துள்ளனர். மொத்தம் ரூ. 1,100 கோடி வரை (முதலில் ரூ. 493 கோடி என்று தகவல்கள் வந்தன) ஸ்டாக் குரு நிறுவனம் வசூலித்து ஸ்வாஹா செய்துள்ளது.   http://tamil.oneindia.in/

கடும் கோபத்தில் திமுக ! மறக்க முடியுமா ?

பா.ஜ.க. எதிர்ப்பு, உடையாத பானை! தி.மு.க. இந்த விவகாரத்தை தனது ட்ரம்ப் கார்டாக உபயோகிக்க போகிறது மதில் மேல் பூனை!! மமதா விடமாட்டார்!!
Viruvirupu
வெளிநாட்டு சில்லறை வர்த்தகம் நாட்டுக்குள் வரக்கூடிய அன்னிய நேரடி முதலீட்டை (எஃப்.டி.ஐ.) அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை, தனது கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து ‘கடுமையாக’ நோகாமல் எதிர்க்க முடிவு செய்துள்ளது பா.ஜ.க. இந்த திட்டம், சிறு வணிகர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்று கூறுகிறது அக்கட்சி.

தலித்துகளுக்கு எதிராக 'பெரும்பான்மை' ஜாதியினர் கை கோர்க்கும் அபாயம்!

Posted by:  Kongu Vellala Goundars Rally Caste
கோவை: தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள கொங்கு வேளாளர்கள், வன்னியர்கள், தேவர்கள், நாடார் சமுதாயத்தினரை சாதி வெறியர்கள் போல சித்தரித்துப் பேசுவது கண்டனத்துக்குரியது என்று கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை என்ற அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் பெரும்பான்மை சமுதாயத்தினர் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் இந்த பேரவை கூறியுள்ளது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. ஏற்கனவே சாதி அமைப்புகளை ஒருங்கிணைத்து லோக்சபா தேர்தலை சந்திக்கப் போவதாக வன்னிய சமுதாயத்தை பெரிதும் நம்பியுள்ள பாமகவின் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து கூறி வரும் நிலையில் இந்த கவுண்டர் பேரவையின் அறிக்கை பல விஷயங்களை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. http://tamil.oneindia.in/

மோடிக்கு எதிராக RSS தலைவர்? கூடாரத்துக்குள் குத்து, வெட்டு?


பார தீய ஜனதாவில் தற் போது கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்ட நிதின் கட்காரி பாரதீய ஜனதா தலைவர் பதவி யில் இருந்து விலக வேண் டும் என்று எல்.கே. அத்வானி, ராம்ஜெத் மலானி வற்புறுத்தினார் கள். என்றாலும் கட்சி மேலிடம் கட்காரிக்கு ஆதரவாக இருந்தது. தலை வர் பதவியில் இருந்து அவர் விலகமாட்டார் என்று திட்டவட்டமாக அறிவித்தது.
இந்த நிலையில் நிதின் கட்காரிக்கு எதிரான பிரச்சாரத்தில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி செயல்படுகிறார் என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலை வர் வைத்யா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனி யார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- நிதின் கட்காரிக்கு எதிரான பிரசாரம் குஜ ராத்தில் இருந்துதான் தொடங்கி இருக்கிறது. ஏனென்றால் ராம்ஜெத் மலானிதான் நிதின்கட் காரி பதவி விலக வேண்டும் என்றார்.

வீதியில் சென்ற காரில் இருந்த தளபதியை குறிவைத்து விமான ஏவுகணை வந்து தாக்கியது!

Viruvirupu
விமான ஏவுகணை தாக்குதல் ஒன்றில், ஹமாஸ் ராணுவத் தளபதி ஒருவரை கொலை செய்துள்ளது இஸ்ரேலிய விமானப்படை. காசா பகுதியில் நடைபெற்ற இந்தக் கொலை, இரு தரப்பையும் யுத்தம் ஒன்றுக்கு மிக அருகே கொண்டு வந்திருக்கிறது.
ஹாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவின் தளபதி அஹ்மத் அல்-ஜாபரி, இஸ்ரேவிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இவரும் மற்றொருவரும் பயணம் செய்த காரை துல்லியமாக குறிவைத்து ஏவுகணை ஏவியது இஸ்ரேலிய விமானம். காரும், அதில் இருந்த இருவரும் சுக்குநூறாக சிதறிப் போயினர்.

Sri Rangam பிராமணாளும்ஒழிந்தது கிருஷ்ண அய்யரும் ஒழிந்தது!


பிராமணாள்  என்றும், அய்யர் என்றும் இடம்பெற்றிருந்த பழைய நிலை!
 சிறீரங்கத்தில் பிராமணாள் என்று உணவு விடுதி விளம்பரத்தில் எழுதி வைத் திருந்த வருணாசிரம ஆதிக்க உணர்வை எதிர்த்து திராவிடர் கழகம் மேற்கொண்ட நட வடிக்கையால் அந்த உணவு விடுதி அந்த இடத்தில் மூடப்பட்ட துடன் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலை யில் அந்த உணவு விடுதியின் பெயர்ப் பலகையில் பிராமணாள் என்பதும் கிருஷ்ண அய்யர் என்பதில் உள்ள அய்யரும் நீக்கப்பட்டு விட்டன.
திராவிடர் கழகத்திற்குக் கிடைத்த அடுத்த கட்ட வெற்றியாகும் இது.

பிராமணாளும், அய்யரும் நீக்கப்பட்ட நிலையில் இப்போது...
சிறீரங்கம் ரங்கநகர் சாலையில் கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே (ஓட்டல்) என்ற பெயரில் மணி கண்டன் என்ற பார்ப்பனர்  நடத்தி வந்தார்.  திடீ ரென்று பிராமணாள் என்ற சொல்லை விளம்பரப் பலகையில் புகுத்தினார். அந்த உணவு விடுதியின் பெயர்ப் பலகையில் உள்ள பிராமணாள் என்ற பெயரை அகற்றுமாறு திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி அந்த உணவு விடுதியின் உரிமையாளர் மணிகண்டன் பார்ப்பனரிடம் வலி யுறுத்தப்பட்டது.

இந்து-முஸ்லிம் மோதல்கள் ஏற்படுவது ஏன்?


மார்கண்டேய கட்ஜு எழுதி தி ஹிந்துவில் அக்டோபர் 11 அன்று வெளியான Rid our body politic of communal poison என்னும் கட்டுரையை அவருடைய அனுமதி பெற்று தமிழில் மொழிபெயர்த்திருப்பவர்  மருதன். ஆங்கில வடிவத்தில் இடம்பெறாத சில குறிப்புகளையும் ஆழம் இதழுக்காக மார்கண்டேய கட்ஜு நம்மிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஆழம் நவம்பர் இதழில் வெளியான கட்டுரை தமிழ்பேப்பர் வாசகர்களுக்காக இங்கே. பிற கட்டுரைகளை வாசிக்க : http://www.aazham.in/
இன்று இந்தியாவில் பல இந்துக்களும் முஸ்லிம்களும் வகுப்புவாதம் என்னும் விஷக்கிருமியால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். 1857ம் ஆண்டுக்கு முன்பு, அநேகமாக இந்தியர்களிடம் வகுப்புவாதக் கண்ணோட்டம் இருந்திருக்கவில்லை என்றே சொல்லலாம்.  முஸ்லிம்களின் ஈத் பெருநாள் கொண்டாட்டங்களில் இந்துக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். தீபாவளி, ஹோலி விழாக்களில் முஸ்லிம்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இருவரும் சகோதரர், சகோதரிகளாக ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள்.
150 ஆண்டுகளில் நிலைமை ஏன் மாறிப்போனது?  http://www.tamilpaper.net/?p=7121

நேருவுக்கு சம்பத் எழுதிய கடிதம் மொழிப்போர் / அத்தியாயம் 12

ஆர். முத்துக்குமார்

7 ஏப்ரல் 1960 அன்று இந்திய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்திடம் இருந்து புதிய ஆணை ஒன்று வெளியானது. 1965 ஆம் ஆண்டு முதல் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆகிவிடும். அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதுதான் அதன் உள்ளடக்கம்.
இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலமே இருக்கும் என்ற பிரதமர் நேருவின் வாக்குறுதியை அடித்து நொறுக்கும் வகையில் வெளியான இந்த அறிவிப்பு இந்தி பேசாத மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, தமிழ்நாட்டு முக்கிய அரசியல் அமைப்புகளான திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன குடியரசுத் தலைவரின் இந்தித் திணிப்பு அறிவிப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்குத் தயாராகின.
இந்தி என்னும் விஷ விருட்சத்தின் ஆணிவேரைக் கெல்லி எறிய ஒரே வழிதான் இருக்கிறது. அது, நாட்டுப் பிரிவினை. இந்திய யூனியன் வரைபடத்தில் தமிழ்நாடு தவிர்த்த மற்ற பகுதிகளுக்குத் தீவைத்து எரிக்கும் போராட்டத்தை நடத்தவேண்டும் என்று அழைப்பு விடுத்தார் திராவிடர் கழகத் தலைவர் பெரியார். திராவிடர் கழகத்தைப் பின்பற்றி திமுகவும் போராட்டத்தில் இறங்கத் தயாரானது.

நான் தற்கொலை செய்ய போலீஸ் விரும்புகிறது

Pinky Pramanik arrested1
Pinky retired from athletics after she suffered a road accident three years ago.  கொல்கத்தா: நான் தற்கொலை செய்து கொள்ள போலீஸ் விரும்புகிறது என்று தடகள வீராங்கனை பிங்கி பரமனி தெரிவித்துள்ளார்.ஆசிய சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கமும் காமன்வெல்த் போட்டியில் வெள்ளியும் வென்ற தடகள வீராங்கனை பிங்கி பரமனி, ஆணாக இருந்து தன்னுடன் குடும்பம் நடத்தி பின்னர், பெண்ணாக மாறி தன்னை ஏமாற்றி விட்டார் என்று கொல்கத்தாவை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். கைதாகி ஜாமீனில் விடுதலையான பிங்கியிடம் நடந்த குரோமசோம் சோதனை அறிக்கையில் அவர் ஆண் என்று குறிப்பிடப்பட்டது.

Laurie Baker இயற்கையுடன் சேர்ந்து வீடு கட்டியவர்


Laurence Wilfred "Laurie" Baker (2 March 1917 – 1 April 2007) was a British-born Indian architect, renowned for his initiatives in cost-effective energy-efficient architecture and for his unique space utilisation and simple but aesthetic sensibility. Influenced by Mahatma Gandhi, he sought to incorporate simple designs with local materials and achieved fame with his approach to sustainable architecture as well as in organic architecture. He has been called the "Gandhi of architecture".
 லாரிபேக்கரிடம் காந்தி சொன்னார், எது குறைவான சரக்குப்போக்குவரத்துச் செலவுடன் அமைந்துள்ளதோ அதுவே நல்ல வீடு என்று. அந்த ஒற்றைவரியிலிருந்து பேக்கர் பாணி இல்லங்கள் உருவாயின. பேக்கர் கண்ட கனவு என்பது இந்தியாவின் சாதாரண மக்கள் அவரது பாணியில் இல்லங்களை உருவக்கிக்கொண்டு அதன் வழியாக இங்கே குடியிருப்புகளில் ஒரு தன்னிறைவு உருவாகும் என்று
ஆனால் காந்தியம் பேக்கரின் கண்முன்னாலேயே இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தால் கைவிடப்பட்டது. பேக்கரின் குரலை நேருயுக இந்தியா செவிமடுக்கவில்லை. குமரப்பா போல, வினோபா பாவே போல அவரும் ஒதுக்கப்பட்டார். ஆனால் பேக்கர் ஒரு நடைமுறை அறிவியலாளர். ஆகவே தன் வீடுகளை அவர் அறிவியல்பூர்வமாகவும் நிரூபித்துக்கொண்டே இருந்தார். இருந்தும் அவரது சோதனை வீடுகளை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

காரணம் இந்தியாவில் வீட்டுவசதியைப் பெருக்க முயன்ற அரசுகள் அந்தப்பொறுப்பை காண்டிராக்டர்களிடமும் அதிகாரிகளிடமும்தான் கொடுத்தன.  http://www.jeyamohan.in 

விஜய் எனக்கு தங்க மகன்தான் : ஷோபா சந்திரசேகர்

Thanga Magan Vijay Shoba Chandrasekar விஜய் எனக்கு தங்கமகன்தான் என்று அவருடைய தாயார் ஷோபா சந்திரசேகர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தீபாவளி தினத்தில் ஒளிபரப்பான தங்கமகன் விஜய் சிறப்பு நிகழ்ச்சியில் விஜய் பற்றிய தன்னுடைய சொந்தக் கருத்துக்களை ரசிகர்களிடையே பகிர்ந்து கொண்டார் ஷோபா.
விஜய் ஒரு நடிகர் என்பது தெரியும். அவருடைய பெர்சனல் பக்கங்களை அவருடைய நண்பர்கள், அவரை இயக்கிய இயக்குநர்கள் கூறுவதை விட விஜய்யின் அம்மாவே சொன்னால் எப்படி இருக்கும் என்று விஜய் டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் யோசித்திருப்பார்கள் போல அதுதான் தங்க மகன் விஜய்' ஆக மாறியது. விஜய் சிறுவயதில் செய்த குறும்புகள். தங்கையின் மறைவிற்குப் பின்னர் அதற்கு நேர் எதிராக அமைதியாக மாறியது என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டார்.

புதன், 14 நவம்பர், 2012

தனிநாடு கோரும் டெக்ஸாஸ் மாநில அமெரிக்கர்கள்

தனிநாடு கோரும் அமெரிக்கர்கள்
அமெரிக்காவிலிருந்து பிரிந்து செல்ல பல மாநிலங்களும் வெள்ளை மாளிகைக்கு மனு
ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பிரிந்து செல்ல பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100,000க்கும் மேற்பட்டோர் வெள்ளை மாளிகைக்கு மனுச்செய்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா மீண்டும் தெரிவானதைத் தொடர்ந்தே பலர் இவ்வாறு மனுச்செய்துள்ளனர். வெள்ளை மாளிகை இணையதளத்தின் மக்கள் முறைப்பாட்டைத் தெரிவிக்கும் பக்கத்திலேயே அமெரிக்காவில் இருந்து பிரிந்து செல்லும் மனுக்கள் குவிந்துள்ளன.

நிஜமாகவே கலைஞர் காங்கிரசோடு Divorce? சிதம்பரம் சாதிப்பாரா?

  Chidambaram Meets Karunanidhi Ahead 2ஜி Vs சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு: கருணாநிதியை சமாதானப்படுத்த வந்த ப.சிதம்பரம்!

மகாராஷ்டிரா: கரும்பு விவசாயிகள் மீது போலீசு கொலைவெறித் தாக்குதல்!

மகாராஷ்டிரா கரும்பு விவசாயிகள் மீது போலீசு தாக்குதல்!வினவு
மகாராஷ்டிராவின் சர்க்கரை ஆலைகள் அனைத்தும் மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் அவரது கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

    மகாராஷ்டிரா கரும்பு விவசாயிகள் மீது போலீசு தாக்குதல்! – படம் நன்றி: தி இந்து
    ரும்புக்கு நியாயமான விலை கொடுக்க வேண்டும் என்று மேற்கு மகாராஷ்டிராவில் போராடிய கரும்பு விவசாயிகள் மீது போலீசார் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ள‌னர்.
    விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஸ்வபிமான் ஷெட்காரி சங்கட்னாவின் தலைவர் ராஜூ ஷெட்டியை கைது செய்து விவசாயிகள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது போலீஸ்.
    சாங்லி மாவட்டத்தில் போலீசார் சுட்டதில் சந்திரகாந்த் நலவாடே என்ற விவசாயி துப்பாக்கிக் குண்டு காயங்களினால் உயிரிழந்தார். கோலாப்பூரில் புந்தாலிக் கோகடே என்ற விவசாயி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார்.

    பார்ப்பனர்களின் குத்தாட்டத்தில் பழனி!


    பழனியில் முருகன் மட்டும் தான் ஆண்டி – அந்த ஆண்டிக்குச் சேவை செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் பண்டாரங்களெல்லாம் ஃபாரின் ரிட்டர்ன் மாப்பிள்ளைகள் போல ஆடும் ஆட்டம் சொல்லி மாளாது.
     இந்த ஆண்டியின் கோவணத்தை அவிழ்த்த பார்ப்பனப் புரோகிதர்கள், முருகப்பெருமானின் பின்புறத்தை கொஞ்சம் கொஞ்சமாகச் சுரண்டி எடுத்து  அரசியல்வாதிகளுக்கு படையல் வைத்து விட்டதாகவும்,  அவ்வாறு முருகனைக் கூறு போட்டதில் ஆர்.எம்.வீ.க்கு கொஞ்சம் பெரிய ‘பீசாக’ கிடைத்தது என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

    மீபத்தில் சொந்த வேலையாக பழனி செல்ல வேண்டியிருந்தது. வேலை முடிந்து ஊர் திரும்புமுன் கொஞ்சம் நேரம் இருந்ததால், நம்ம தண்டபாணி எப்படி இருக்கிறான் என்று ஒரு எட்டு பார்த்து விட்டு வரலாமே என்று தோன்றியது. தண்டபாணியின் ‘பின்புறத்தை’ வெகு வேகமாக வெட்டிச் சுரண்டி விற்று வருகிறார்கள் என்றும், கூடிய சீக்கிரம் விடைப்பாக நின்று கொண்டிருக்கும் முருகன் விழுந்து விடக்கூடும் என்றும் வெகு நாட்களாகவே ஒரு செய்தி உலவியதால், ‘தரிசனத்தை’ நான் தள்ளிப்போட விரும்பவில்லை.  மலையையே சுரண்டி விற்கும் காலத்தில் சிலை எம்மாத்திரம்? http://www.vinavu.com/

    அகதிகளுக்கு 2,500 வீடுகள் முதல்வர் அறிவித்துள்ளார்

    அகதி முகாம்களுக்கு ரூ.25 கோடியில் 2,500 வீடுகள் : ஜெயலலிதா அறிவிப்பு

    சென்னை: தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு 2,500 புதிய வீடுகள் கட்டுவதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழும் தமிழர்களின் நலனுக்காக, அந்த முகாம்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் வசதியை மேம்படுத்துதல், வீடுகளை பழுது பார்த்தல், சாலைகள் சீரமைத்தல், நூலக கட்டிடம் கட்டுதல், நியாயவிலை கடை அமைத்தல், கூடுதல் கழிப்பறை மற்றும் குளியலறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.

    Ottawa கடுகு எண்ணெயில் பறந்த விமானம்

    The NRC’s (National Research Council) Falcon 20 aircraft is a testing vehicle for bio jet fuel. The 100 per cent bio jet fuel will son be tested in flight for engine performance and emissions. Brassica Carinata (Ethiopian mustard, Abyssinian mustard) is the raw agricultural product that is refined into bio jet fuel."
    விமானம் இன்னும் மூன்று மணி நேரத்தில் கிளம்பணும். ஆயிரம் லிட்டர் கடுகு எண்ணெய் போடு” என்று  விமான  நிறுவன மேலதிகாரி சொல்வதாக வைத்துக் கொண்டால் அது வேடிக்கையாக இருக்கும். ஆனால் வருகிற நாட்களில் விமானத்தை ஓட்ட கடுகு எண்ணெய் தாராளமாகப் பயன்படுத்தப்ப்டலாம். விமான நிறுவனங்கள் இப்போது விமானங்களைத் தாவர எண்ணெய் மூலம் ஓட்டுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. போகிற போக்கைப் பார்த்தால் விமானங்கள் வடை சுட்ட எண்ணெயிலும் ஓட்டப்படலாம். விமான நிறுவனங்கள் இப்போது தாவர எண்ணெய்கள் மீது குறி வைக்கத் தொடங்கியுள்ளன. http://www.ariviyal.in/

    ஒன்பதுல குரு லட்சுமிராய் ரீ என்ட்ரி ஆகும் மந்த்ரா

    இரண்டு கெட்டப்பில் நடிக்கிறார் லட்சுமிராய். ‘ஒன்பதுல குருÕ படத்தை எழுதி இயக்கும் பி.டி.செல்வகுமார் கூறியதாவது:
    கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்கும் 4 இளைஞர்கள் அதன்பிறகு இன்னொரு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்போது அந்த சூழல் அவர்களை எப்படி மாற்றுகிறது என்பதை நகைச்சுவை ததும்ப கதை கூறுகிறது. வினய், சத்யன், பிரேம்ஜி, அரவிந்த் நண்பர்களாக நடிக்கின்றனர். இதில் இருவித கெட்டப்பில் நடிக்கிறார் லட்சுமி ராய். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார் மந்த்ரா. கீதா சிங், ரூபாஸ்ரீ, சோனா, மனோபாலா, ஷாம்ஸ், சித்ரா லட்சுமணன், சாமிநாதன், லட்சுமணன், கிருஷ்ணமூர்த்தி, படவா கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முக்கிய வேடமொன்றில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கிறார்.
    இப்படம் மூலம் ரீ என்ட்ரி ஆகும் மந்த்ராவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதை கூறியபோது உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். http://www.tamilmurasu.org/Tamil_News.asp?id=7

    கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ஆப்ரிகாவில் வடிவேலு

    இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் ஹீரோவாக ரீ என்ட்ரி ஆகிறார் வடிவேலு. நகைச்சுவை நடிகர் வடிவேலு தனக்கென ஒரு பாணி வகுத்துக்கொண்டு கோலிவுட்டில் வலம் வந்தார்.  இப்போது 1 வருட ஓய்வுக்கு பிறகு கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது பற்றி வடிவேலு கூறியதாவது: இன்னும் சினிமா களத்தில்தான் இருக்கிறேன். இண்டஸ்ரியைவிட்டு எங்கும் போய்விடவில்லை. படங்களில் நடிக்காமல் இருந்த ஓய்வு நாட்களில் எனது குடும்பத்தினர், நண்பர்களுடன் பொழுதை கழித்தேன். சினிமாவில் பிஸியாக இருந்தபோது பார்க்க முடியாமல்போன படங்களை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தேன். அப்போது என்னை சந்தித்து ரசிகர்கள் படங்களில் என்னை பார்க்காதது பற்றி தனது வருத்தத்தை தெரிவித்தார்கள். இப்போது நிலைமை சீரடைந்துவிட்டது. சினிமாவை நன்கு புரிந்துகொண்டிருக்கிறேன். இயக்குனர்களிடம் எப்போதும் தொடர்பிலேயே இருந்தேன்.http://www.tamilmurasu.org

    கோவை 10 நாளில் 50 கோடி தங்கம் விற்பனை

     India's fundamental role in global gold market

    APETITE FOR GOLD: People buying the gold jewellery ornaments on the occasion of Diwali – Dhanteras, at jewellery shop in Hyderabad. Photo: Nagara Gopal
    APETITE FOR GOLD: People buying the gold jewellery ornaments on the occasion of Diwali – Dhanteras, at jewellery shop
    கோவை தங்கத்தின் விலை நாளுக்கு நாள் எகிறிக்கொண்டிருந்தாலும், தீபாவளி முன்னிட்டு, கடந்த பத்து நாட்களில் மட்டும், கோவை நகரில் உள்ள தங்க நகைக்கடைகளில் சுமார் 50 கோடி ரூபாய்க்கும் மேல், வர்த்தகம் நடந்துள்ளது.
    பண்டிகை காலத்தில், தங்க நகை வாங்குவதையும், கழுத்தில் அணிந்து மகிழ்வதையும் பெண்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். சமீபகாலமாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த போதும், தங்கத்தின் மீதான மோகம் மக்களுக்கு குறையவில்லை. தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கோவை நகரில் உள்ள 350க்கும் மேற்பட்ட தங்க நகைக்கடைகளில், கடந்த பத்து நாட்களில் மட்டும் 50 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்திருப்பதே இதற்கு ஆதாரம்.   http://www.dinamalar.com/
    அது தானே எவ்வளவு ஏத்தினாலும் உங்களுக்கு வாங்குகிற சக்தி இருக்கும் வரை தயங்க மாட்டீங்க? நீங்க திருந்துவீங்கன்னு நினைச்சா அது எங்க முட்டாள் தனம்.

    கனிமொழி விவகாரத்தில் காங்கிரஸ் பின்னணி? கலைஞர் சிதம்பரம் சந்திப்பு

    காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய நடவடிக்கைகளால், கோபம் அடைந்துள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, சமாதானப்படுத்துவதற்காகவே, மத்திய நிதியமைச்சர், சிதம்பரம் அவரை சந்தித்துப் பேசியுள்ளார் என, கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பால், தி.மு.க., - காங்., வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

    சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீடு பிரச்னையில், மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் கட்சி வெளியேறி விட்டது; அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் விலக்கிக் கொண்டது.   http://www.dinamalar.com/ 
     
    s.maria alphonse pandian - chennai ,இந்தியா
    வழக்கம் போல முழுக்க முழக்க கற்பனையினால் ஆன ஒரு தலைப்பு முக்கிய செய்தி....கடைசியில் கூறப்பட்டுள்ள கலைஞரின் வார்த்தை மட்டுமே உண்மை..அதாவது அந்நிய முதலீட்டு பிரச்சனையில் திமுகவின் நிலை கூட்டதொடரின்போது அறிவிக்கப்படும் என்பது மட்டும்...ஆட்சி கவிழ்வது நிச்சயம் என்னும் சூழ்நிலை வந்தால் மட்டுமே திமுக ஆதரவை வாபஸ் வாங்கும்..அரசுக்கு எதிராக வாக்களிக்கும்..இல்லையெனில் ஐந்தாண்டுகாலமும் ஆட்சிக்கு ஆதரவே அளிக்கும்...திமுகவால் ஆட்சி கவிழ்ந்தது என்னும் நிலை உருவாகாது....ஐந்தாண்டுகாலம் உறுதியான ஆட்சியை அளிப்போம் என மக்களுக்கு தேர்தலின் பொது வாக்குறுதி அளித்துள்ளது நினைவுகூறத்தக்கது..... 

    France பரிதி கொலை மூன்றாவதாக ஒரு ஊடகவியலாளர் கைது

    கடந்த வியாழக்கிழமை புலிகளின் உள்வீட்டு பிணக்கு காரணமாக அவ்வியக்கத்தின் முக்கியஸ்தன் எனக்கூறப்படுகின்ற பரிதி என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார். இவரது கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் மேலுமொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மூன்றாவதாக கைது செய்யப்பட்டுள்ளவர் ஒரு ஊடகவியலாளர். மேற்படி இருவரிடமும் மேற்கொண்ட விசாரணைகளின்போது சிறிலங்கா அரசிடம் 50000 ஐரோக்களை பெற்றுக்கொண்டு கொலையை மேற்கொண்டதாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர் என்ற செய்தியை பரப்பியமைக்காக இவ்ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டள்ளார். பிராண்ஸ் அரசு மீது அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக இச்செய்தியை வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஊடகவியலாளரை கைது செய்துள்ள பிரண்ஸ் பொலிஸார் சம்பவத்தை திசை திருப்ப முயற்சிகள் மேற்கொண்டாரா என்ற கோணத்திலும் விசாரிக்கலாம் என நம்பப்படுகின்றது.

    செவ்வாய், 13 நவம்பர், 2012

    Viswaroopam அமீர் ஓகே சொல்லிவிட்டால் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும்

    கமல் இயக்கி நடித்துள்ள படம் விஸ்வரூபம். மேலும் மேலும் பல தொழில்நுட்பங்களை சேர்த்து உலகத்தர படமாக உருவாகிக்கொண்டிருப்பதால் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் விஸ்வரூபம் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. கமலின் பிறந்தநாளன்று ரிலீஸ் செய்யப்பட்ட டிரெய்லர்(AURO 3D) ரசிகர்களிடையே பரபரப்பையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துவிட்ட அதே சமயத்தில் சில சந்தேகங்களையும் எழுப்பிவிட்டது. விஸ்வரூபம் படத்தின் பெரும்பகுதி ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டிருப்பதாலும், டிரெய்லரில் இஸ்லாமியர்கள் துப்பாக்கியுடன் அதிகம் காணப்படுவதாலும், இந்த படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படமாக இருக்குமோ என்ற சந்தேகம் இஸ்லாமியர்களுக்கிடையே எழுந்துள்ளது.