வெள்ளி, 26 அக்டோபர், 2012

விஜய் மல்லையாவின் நரிதந்திரம்! கார் பந்தயத்தில் தலை உருளாமல் தப்பித்தார்!


Viruvirupu
கிங்பிஷர் உரிமையாளர் விஜய் மல்லையா, ட்ரிக்கியாக ஒரு காரியம் செய்திருக்கிறார். அதையடுத்து, கிங்பிஷர் விமான நிறுவன ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்று முடிவுக்கு வந்தது. நிர்வாகத்திற்கும் ஊழியர் தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வேலைநிறுத்தத்தை கைவிட ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
டெல்லியில் கிராண்ட் ப்ரீ கார் பந்தயம் நடைபெற உள்ள நிலையில், சஹாரா ஃபோர்ஸ் கார் பந்தய டீம் உரிமையாளர் விஜய் மல்லையாவின், மற்றொரு உரிமை நிறுவனம் கிங்பிஷர் விமான நிறுவன ஊழியர்கள் நரி வேலைநிறுத்தத்தை கைவிட முடிவு செய்திருப்பது, (அல்லது முடிவு செய்ய வைத்திருப்பது) விஜய் மல்லையாவுக்கு, சந்தேகத்துக்கு இடமில்லாத வெற்றி.

மறுபடியும் மாளவிகா! மஞ்சள் புடவைக்கு ரெடி!

வாளமீனுக்கும் வெளாங்குமீனுக்கும் பாடலை விட மாளவிகாவின் மஞ்சள் புடவை தான் பெரிய ஹிட்டானது. மஞ்சள் புடவை கட்டி ஆடிய மாளவிகாவிற்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் வந்தன.  ‘திருட்டுப் பயலே’படத்தில் மாளவிகாவின் நடிப்பிற்கு பாராட்டுக்கள் கிடைத்தன. 
வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடாததால், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் குத்து பாடல்களுக்கு நடனமாடிய மாளவிகா திருமணமானதும் மும்பையில் செட்டில் ஆனார். இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்ட மாளவிகா இப்போது மறுபடியும் தமிழ் படங்களின் மூலம் திரைக்கு வரும் ஐடியாவில் இருக்கிறார்.

ஜெயம் ரவி கண்ணீர்! கார்த்தி: அமீர் இயக்கத்தில் இனி நடிக்க மாட்டேன்

அமீர் அண்ணனின் கழுத்தை நெரித்து... ஜெயம் ரவி கண்ணீர்!

       ஆதிபகவன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. இந்த படத்தை அமீர் இயக்க ஜெயம் ரவி நடிக்கிறார் என்பதும், இந்தப்படத்தை ஜெ.அன்பழகன் தயாரிக்கிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஜெயம் ரவி கண்கலங்கியது அனைவரையும் அதிரவைத்தது. மிகவும் சோர்வுடனும் உணர்வுபூர்வமாக பேசிய ஜெயம் ரவி, இந்தப் படத்துக்காக நான் ரொம்ப கஷ்டப்பட்டுடேன். இரண்டு வருடங்களாக வேதனையை அனுபவித்தேன். எங்க ஷூட்டிங், எப்போ ஷூட்டிங், எந்த சீன் எடுக்கப்போறாங்க, எதுவுமே தெரியாது. ஷூட்டிங் ஸ்பாடுக்கு போன பிறகு தான் என்ன நடக்கப்போகுதுன்னு தெரியவரும். 
மிகவும் சிரமப்பட்டு பல சண்டைகாட்சிகளில் நடித்திருக்கிறேன். என் உடம்பெல்லாம் அடிபட்டது. வீட்டிற்கு போனால், என்னடா டைரக்டர் அவர் என்று அமீர் அண்ணனை திட்டுவார்கள். அமீர் அண்ணனின் கழுத்தை நெரித்து கொன்றுவிட எனக்கு பல நேரங்களில் தோன்றி இருக்கிறது. இரண்டு வருடங்களாக இந்தப் படத்தையும் முடிக்கமுடியாமல், அடுத்தப் படத்திற்கும் போக முடியாமல் அவஸ்தைப்பட்டேன். 

மாணவர்களே இல்லாத பள்ளிகளில் ஆசிரியர்கள் ஜாலியாக ...வேலை ?

கிருஷ்நகர்:மேற்கு வங்கத்தில், ஒரு மாணவர் கூட படிக்காத, இரண்டு பள்ளிகளில், 12 ஆசிரியர்களும், இரண்டு ஊழியர்களும், மாதம்தோறும் தவறாமல் சம்பளம் வாங்கி வருகின்றனர்.கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் இருந்த, மேற்கு வங்கத்தில், அடிப்படை வசதிகள் கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது, தற்போது தெரிய வந்துள்ளது.
நாதியா மாவட்டத்தில், இரண்டு பள்ளிகள் உள்ளன. உமா ஷாஷி நிம்னதரோ உச்சா பாலிகே வித்யாலயா என்ற பெண்கள் பள்ளியும், தாரக் தாஸ் சிக்ஷா சதன் என்ற உயர்நிலைப் பள்ளியும், அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன.நல்ல கட்டடம், மின் வசதி, கழிவறை வசதி, காம்பவுண்ட் சுவர், ஆசிரியர்கள், அவர்களுக்கு, ஆயிரக்கணக்கில் மாதச் சம்பளம் என, அனைத்தும் இருக்கிறது. ஆனால், மாணவர்கள் தான், ஒருவர் கூட கிடையாது. பெண்கள் பள்ளியில், ஏழு ஆசிரியைகளும், இரண்டு உதவியாளர்களும் உள்ளனர்.அதுபோல, உயர்நிலைப் பள்ளியில், ஐந்து ஆசிரியர்கள் உள்ளனர்.

எனது பரிந்துரைகளை ஏற்கவில்லை:அமைச்சர் அழகிரி குற்றச்சாட்டு

மதுரை:""இளைஞரணி நிர்வாகிகள் தேர்வில், நான் அளித்த பரிந்துரைகளை ஏற்கவில்லை,'' என, மத்திய அமைச்சர் அழகிரி, நேரடியாக குற்றம்சாட்டினார்.மதுரையில், அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
தி.மு.க., தென் மாவட்ட அமைப்பு செயலர் என்ற முறையில், இளைஞரணியில் தேர்வு செய்யப்பட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், என்னை சந்தித்தனர். இத்தேர்வில், மதுரை நகர் மற்றும் மாவட்டத்துக்கு, நான் அளித்த பரிந்துரைகள், ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. மாணவரணி உட்பட, பதவிகளுக்கு, நான் பரிந்துரைத்தவர்களுக்கு, பதவி கிடைக்கவில்லை. பிற மாவட்டங்களிலும், என் பரிந்துரைகள், ஏற்றுக் கொள்ளப்பட வில்லை.தி.மு.க., கட்சி நிலவரம் குறித்து, எனக்கு எதுவும் தெரியாது. தி.மு.க., நிர்வாகிகள் மீது, தொடர்ந்து பொய் வழக்குகளை பதிவு செய்வதை தவிர, அ.தி.மு.க., வேறு எதுவும் செய்யவில்லை.

மீண்டும் குமுதம் தன் கைவரிசையை காட்டிவிட்டது!


குமுதம் தொடரும் அநாகரீகம் ;என்னுடைய டி.எஸ்.பாலையா பதிவிலிருந்து முதல் பாராவை சுனில் கேள்வி பதிலில் எடுத்துப்போடப்பட்டுள்ளது. இதோ என் செப்டம்பர் 17ந்தேதி பதிவில் முதல் பாரா!;டி.எஸ்.பாலையாசதி லீலாவதி’(1936) எம்.ஜி.ஆருக்கு மட்டும் முதல் படம் என்று நினைத்துவிடாதீர்கள் அந்தப் படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா,என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு ஆகியோருக்கும் கூட முதல் படம் ’சதிலீலாவதி’ தான்.;இன்று கடைக்கு வந்திருக்கும் 31-10-2012 தேதியிட்ட குமுதத்தில் சுனில் கேள்வி  பதிலில் கீழ்கண்டவாறு டி.எஸ் பாலையா நடித்த முதல் படம் எது?

சதி லீலாவதி தான் அவர் நடித்த முதல் படம்.டி.எஸ்.பாலையாவிற்கு மட்டுமல்ல.எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஏ.தங்கவேலு, எம்.கே.ராதா ஆகியோருக்கும் சதிலீலாவதி தான் முதல் படம்.

சுந்தர ராமசாமி சொல்வார்.
காண்டாமிருகத்தை ஈர்க்குச்சியால் காயப்படுத்த முடியாது.
இந்த வார்த்தைகள் தான் இங்கே நானும் வேதனையோடு குறிப்பிட வேண்டியிருக்கிறது.முரட்டுத்தோல்!என்ன ஒரு சுரணையற்ற தன்மை.
காண்டாமிருகம் சைவம் தான்.ஆனா ஆளக்கொன்னுடும்!

ஏழை சொல் அம்பலம் ஏறாது என்ற தைரியம் தான் குமுதம் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்ளக்காரணம்.

என்ன ஒரு பூர்ஷ்வாத்தனம். என்ன ஒரு பேட்டை ரௌடித்தனம்.

நிதின் கட்கரி.. பாஜகவின் அகில இந்தியத் தலைவர்

 இந்த பால்வடியும் குழந்தை முகத்தை பாருங்கள் இது ஏதாவது தப்பு செய்திருக்குமா?  இதுதாண்டா பா ஜா கா !  
( நீதாண்டா லூசு )
நிதின் கட்கரி, கடந்த சில நாட்களில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவுக்குப் போட்டியாக மீடியாவில் அடிபடும் பெயர், பாஜகவின் அகில இந்தியத் தலைவர். பாஜகவின் தலைவராக இவரை அறிந்தவர்களை விட, இப்போது சமூக ஆர்வலர் (?) அர்விந்த் கெஜரிவால் இவர் மீது அடுக்கியிருக்கும் குற்றச்சாட்டுகளால் இவரை அறிந்து கொண்டிருப்பவர்கள் அநேகம். இவர் மீது கேஜரிவால் வைத்திருக்கும் பிரதானக் குற்றச்சாட்டு, இவர் நிர்வாகத் தலைவராக இருக்கும் பூர்த்தி பவர் & ஷுகர் நிறுவனத்திற்கு முறைகேடாக வந்துள்ள முதலீடுகள் பற்றியது. 2001 இல் துவங்கப்பட்ட பூர்த்தி க்ரூப் நிறுவனங்களில் சுமார் பத்தாயிரம் பங்கு முதலீட்டாளர்கள். இவற்றில் 19 நிறுவன்ங்கள் பூர்த்தி நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வைத்திருப்பதன் மூலம் இயக்குனர்களாக இருக்கின்றன (Share Directors). சிக்கல் துவங்குவது இங்கிருந்துதான்; இந்த பத்தொன்பது கம்பெனிகளில் சுமார் 16 கம்பெனிகள் “ஷெல் கம்பெனிகள்” என்பது கெஜரிவாலின் குற்றச்சாட்டு; அதாவது அந்நிறுவனங்களுக்கு வேறு எவ்விதமான வர்த்தகப் பரிவர்த்தனைகளோ, நடவடிக்கைகளோ கிடையாது, பெயருக்கு ஒரு நிறுவனம், அதன் பெயரில் முதலீடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த 16 நிறுவன்ங்களில் பெரும்பான்மையானவை கல்கத்தாவிலும், பம்பாயிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்டுள்ள முகவரியில் அம்மாதிரியான நிறுவன்ங்கள் செயல்படுவதற்கான சுவடே தெரியாத வகையில், பம்பாயின் சேரிகளிலும், கல்கத்தாவின் பின்தங்கிய பகுதிகளிலும் அம்முகவரிகள் இருக்கின்றன. அம்முகவரியில் பல்லாண்டுகளாக வசிப்பவர்களுக்கு அது போன்ற ஒரு நிறுவனம் அம்முகவரியில் பதிவு செய்யப்பட்டிருப்பதே புதிய தகவலாக இருக்கிறது (இவ்விவரங்கள் NDTV மற்றும் Times Of India போன்றவற்றில் வெளியாயின). தவிர இந்நிறுவன இயக்குனர்களில் கட்கரியின் கார் ஓட்டுனர் மற்றும் தனிச் செயலர் ஆகியோரும் அடங்குவர். 

வியாழன், 25 அக்டோபர், 2012

JayaTV நூற்றுக்கணக்கான நாயகிகளை ஒரே நிகழ்ச்சியில்

தென்னிந்திய திரை தேவதைகள் நிகழ்ச்சியில் ரேவதி, சுகாசினி, பானுப்பிரியா உள்ளிட்ட நூற்றுக்கான திரைப்பட நடிகைகள் பங்கேற்று தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நடிகர்கள் ஆர்யாவும், மாதவனும் இந்த தேவதைகள் ஒவ்வொருவரையும் அழகாய் வரவேற்று அவர்களின் அனுபவங்களை கேட்டது சுவாரஸ்யமாக அமைந்திருந்தது.
ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் எல்லோரும் சினிமாவில் மூழ்கியிருக்க ஜெயாடிவியில் தென்னிந்திய திரை தேவதைகள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பெயருக்கு ஏற்றார்போல திரைப்பட நட்சத்திரங்கள் குவிந்திருந்த இந்த நிகழ்ச்சியை நடிகர்கள் ஆர்யா, மாதவன் தொகுத்து வழங்கினர்.
ரேவதி, சுகாசினி, பானுப்பிரியா, ராதா, உள்ளிட்ட 1980,1990களில் நடித்த நூற்றுக்கணக்கான திரைநட்சத்திரங்களுடன் தற்போதைய நடிகைகளும் பங்கேற்று தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்
இயக்குநர் கே.பாலசந்தர் நடிகை ரேவதிக்கு பரிசுகளை வழங்கி பாரட்டினார். பின்னர் வழக்கம் போல மாதவன், ஆர்யாவின் கேள்விக்கணை தொடங்கியது. இப்போதைய சூழ்நிலையில் நீங்கள் ஹீரோயினாக நடித்தால் யாரை ஹீரோவாக தேர்வு செய்வீர்கள் என்று இருவரும் கேட்டனர்.
அதற்கு சிரித்த ரேவதி, இந்தப்பக்கம் மாதவன், இந்தப்பக்கம் ஆர்யா என்று கூறி இருவரையும் ஹீரோவாகத் தேர்ந்தெடுப்பேன் என்று கூறி கலகலப்பூட்டினார். பானுப்பிரியாவைப் பற்றிய நினைவுகளை ரேவதி மேடையில் பகிர்ந்து கொண்டபோது கீழே அமர்ந்திருந்த பானுப்பிரியாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் எட்டிப்பார்த்தது.

ஒரே குடும்பத்தில் 6 பேர் விஷம் குடித்து தற்கொலை


பாளையில் இன்று ஒரே குடும்பத்தில் 6 பேர் விஷம் குடித்து தற்கொலை பாளை கிருஷ்ணன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 42). தச்சு தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 37). இவர்களுக்கு மணிகண்டன் (10), மகாலட்சுமி (8), மகாராஜன்(6), மகாதேவன்(4), மலர்வனம் (2)ஆகிய 5 குழந்தைகள் உள்ளனர்.
மணிகண்டன் பாளையில் உள்ள பள்ளியில் 5-ம்வகுப்பும், மகாலட்சுமி 3-ம்வகுப்பும், மகாராஜன் 1-ம் வகுப்பும் படித்து வந்தனர். இன்று காலை ரவிசங்கரின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்கு சென்று கதவை தட்டி ரவி சங்கரை அழைத்தனர். ஆனால் வீட்டில் இருந்து எந்தவித சத்தமும் வரவில்லை. இதனால் பொதுமக்கள் வீட்டின் ஜன்னல் கதவை திறந்து பார்த்தனர்.
அப்போது வீட்டிற்குள் ரவிசங்கர், அவரது மனைவி மாரியம்மாள் மற்றும் 5 குழந்தைகள் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த நிலையில் கிடந்தனர். 

“பாடகி சின்மயி மீது மானநஷ்ட வழக்கு போடுவேன்!” லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் ஆவேசம்!

 Viruvirupu இணையத்தளத்தில் பாடகி சின்மயி செக்ஸ் அர்ச்சனை புகாரில், தமது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து கோபம் கொண்டுள்ளார், நகைச்சுவை எழுத்தாளர். “பாடகி சின்மயி என்மீது கொடுத்துள்ள புகார் தவறானது; அதை வாபஸ் பெற்றுக் கொள்ளவேண்டும், இல்லாவிடில் மான நஷ்ட வழக்கு தொடுக்க வேண்டிவரும்” என்று என்று எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் தெரிவித்துள்ளார்.
“பாடகி சின்மயி கொடுத்துள்ள போலீஸ் புகாரில் என்னுடைய ட்விட்டர் ஐடியும் சேர்த்து அளிக்கப்பட்டிருப்பதாக அறிந்து மிகுந்த மனவேதனையும் பெரும் மன உளைச்சலும் அடைகிறேன்.
கடந்த இரண்டு நாட்களாக என்னை ட்விட்டர், தனி மெயில், தொலைபேசி என்று பல விதங்களிலும் ரசிகர்களும், நல்லிதயங்களும் தொடர்பு கொண்டு தங்கள் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்து வருகின்றனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாக எழுத்து, நாடகம், சினிமா என்று பல்வேறு மீடியா தளங்களிலும், சமீப காலங்களில் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற வர்ச்சுவல் தளங்களிலும் நான் பிரபலமாக இருந்து வருகிறேன். கலக்கல் கபாலி, பாத்ரூம் பாகவதர், ரிக்சா முன்சாமி, தமிழ்ப் புலவர் ஆதிமந்தி போன்ற நான் உருவாக்கிய கதாபாத்திரங்களும் புகழ்பெற்றவையே.  இதில் குறிப்பிட்ட விபரங்கள் http://365ttt.blogspot.com/2012/10/tnfishermen-tamil-twitter-conversation.html

ரெயில்களில் இனி நவீன தொழில்நுட்ப கழிவறை

ரெயில்களில் தற்போது உள்ள கழிவறைகளும் அவற்றை பராமரிக்கும் முறைகளில் ஏற்படும் பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. சாக்கடை, கழிவு நீர் கால்வாய்களில் இறங்கி தொழிலாளர்கள் கழிவுகளை சுத்தம் செய்யக்கூடாது என்பதால் எந்திரம் மூலம் அடைப்புகள் சரி செய்யப்படுகின்றன. ரெயில்வே துறையில் இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. ரெயில் பெட்டிகளில் கழிவறை முறையாக சுத்தம் செய்வது இல்லை. அதனால் பெட்டிக்குள் துர்நாற்றம் வீசும்.

ஹைதராபாத் ஐபிஎல் அணியை சன் டிவி குழுமம் வாங்கியுள்ளது.

மும்பை: ஐபிஎல் குழுவில் இருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணி நீக்கப்பட்ட நிலையில், ஹைதராபாத் நகரை அடிப்படையாக கொண்ட புதிய அணியை சன் டிவி குழுமம் வாங்கியுள்ளது.
ஐபிஎல் குழுவில் இருந்து ஹைதராபாத் நகரை அடிப்படையாக கொண்ட டெக்கான் சார்ஜர்ஸ் அணி செயல்பட்டு வந்தது. ஆனால் வீரர்களுக்கு சம்பள பாக்கி வைத்தது தொடர்பான பிரச்சனையில், விதிமுறைகளை மீறியதாக அந்த அணி ஐபிஎல் குழுவில் இருந்து நீக்கப்பட்டது.
இதையடுத்து புதிய ஐபிஎல் அணிக்கான ஏலம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் பல முன்னணி தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். இதில் சன் டிவி குழுமமும் கலந்து கொண்டது. பல்வேறு நகரங்களை கொண்ட அணிகள் ஏலம் விடப்பட்டன. அதில், ஹைதராபாத்தை அடிப்படையாக கொண்ட புதிய ஐபிஎல் அணியை, சன் டிவி குழுமம் ரூ.85.05 கோடிக்கு வாங்கியது.

ஏ.ஆர்.முருகதாஸ்: உதவி இயக்குனராக பல சிரமங்களை அனுபவித்திருக்கிறேன்,

ரொம்ப சிரமப்பட்டோம்! துப்பாக்கி பற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ;துப்பாக்கி படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க பம்பாய் நகரில் நடந்தது. இது குறித்து சில சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துகொண்டார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.
துப்பாக்கி படத்தின் கதையை இந்தியில் அக்‌ஷய் குமார் நடிப்பில் இயக்குவதாக இருந்தேன். கஜினி ரீமேக்கிற்கு பிறகு எந்த படத்தையும் ரீமேக் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. அதனால் இந்தியில் நேரடி படமாக இது இருக்கும் என்றும் நான் நினைத்தேன். 
அந்த சமயத்தில் தான் விஜய்யின் அப்பா இயக்குனர் சந்திரசேகர் என்னை அழைத்து, விஜய்க்கு ஒரு படம் இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனால் தான் விஜய்யை வைத்து தமிழில் இயக்கிவிட்டு அதன் பிறகு இந்தியில் இயக்கலாம் என்று முடிவெடுத்தேன். 

டெல்லியில் அரசு மருத்துவமனையில் 5 ஆண்டுகளில் 10,000 குழந்தைகள் பலி

டெல்லியில் அரசு சார்பில் கலாவதி சரண் மருத்துவமனை நடத்தப்படுகிறது. இந்த மருத்துவமனையில் குழந்தைகள் சாவு குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு ராஜ்ஹன்ஸ் பன்சால் என்பவர் மருத்துவமனை நிர்வாகத்துக்கு மனு தாக்கல் செய்தார். மனுவுக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுப்பியுள்ள பதிலில், ‘கலாவதி சரண் மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில் 10.081 குழந்தைகள் இறந்துள்ளன. இந்த ஆண்டு இதுவரை 943 குழந்தைகள் இறந்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.இதுபற்றி மருத்துவமனை நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘பெரும்பாலான குழந்தைகள், உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில்தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. மேலும், இயற்கை சுவாச கருவி சரியாக செயல்படாததால் எந்த குழந்தையும் இறக்கவில்லை’ என்றனர். இது தொடர்பாக தேசிய மனித உரிமை கமிஷனிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி அமைச்சர் ஆகிறார் 28ம் தேதி அமைச்சரவை மாற்றம்


 வரும் 28ம் தேதி ஞாயிறு அன்று மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து திருணாமுல் காங்கிரஸ் விலகியதால் அக்கட்சியின் பிரதிநிதிகளாக இருந்த 6 பேர் விலகினார்கள். திமுக அமைச்சர்கள் இருவர் ராஜினாமா செய்தனர். தேசியவாத காங்கிரஸ் பிரதிநிதியாக இருந்த அகதா சங்மா, அவரது தந்தை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதால் விலக நேர்ந்தது. ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருந்த மேற்கு வங்கத்தின் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதால் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

புதிய சட்ட திருத்தம்! முறைகேடு செய்யும் ஊராட்சித் தலைவர்களின் பதவிகளுக்கும் சிக்கல்

பெண்கள் தலைவர்களாக உள்ள ஊராட்சிகளில், அவர்களின் கணவர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் நிழல் தலைவர்களாக செயல்படுகின்றனர். இவர்களின் முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை தடுக்க, உள்ளாட்சி துறையில் அரசு புதிய சட்ட திருத்தம் கொண்டு வருகிறது.

கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில், உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில், கடந்த ஆண்டு, அக்டோபர், 17,19ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் நீங்கலாக, 12 ஆயிரத்து 534 ஊராட்சிகள், 31 மாவட்ட பஞ்சாயத்துகளின் தலைவர்கள், 99 ஆயிரத்து, 333 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உட்பட, ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 399 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால், 4,289 ஊராட்சிகளில் தலைவர்களாக பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு பெண்கள் தலைவர்களாக உள்ள ஊராட்சிகளில், அவர்களின் கணவர் அல்லது உறவினர்களின் சாம்ராஜ்யம்தான் நடக்கிறது.

Unlucky சோழ மன்னன் ராஜராஜன் விழாவில் பங்கேற்றால் பதவி பறிபோய் விடும்! வி.ஐ.பி.க்கள் புறக்கணிப்பு

தஞ்சாவூர் : சோழ மன்னன் ராஜராஜன், 1,027வது சதய விழா அழைப்பிதழில் பெயர் போடப்பட்டும், தி.மு.க., மத்திய நிதித் துறை இணையமைச்சர் பழனி மாணிக்கம் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். மேலும், அ.தி.மு.க., வி.ஐ.பி.,க்களும், நகர மக்களும் பங்கேற்காததால், சதய விழா களையிழந்தது.
தஞ்சை பெரிய கோவிலை, சோழ மன்னன் ராஜராஜன், 1,000 ஆண்டுகளுக்கு முன் நிர்மாணித்தார். இந்த கோவில், ஆட்சித் துறை மட்டுமின்றி கட்டடக்கலை, சிற்பம், ஓவியம், கல்வெட்டியல் என, பல துறைகளில் அம்மன்னன் சிறந்து விளங்கியதுக்கு சான்றாக விளங்குகிறது.ராஜராஜன், ஐப்பசி சதய நட்சத்திரத்தில் பிறந்ததையொட்டி, அம்மன்னன் ஆட்சிக்காலம் முதல், இன்று வரை, ஆண்டுதோறும் சதய விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா, தஞ்சை பெரிய கோவிலில் நேற்று காலை, 10 மணிக்கு துவங்கியது. சதய விழா குழு தலைவர் தங்கமுத்து வரவேற்றார். கலெக்டர் பாஸ்கரன் தலைமை வகித்தார். kalaignar piriyan பார் போற்றும் வகையில் ஆட்சி புரியும் புரட்சி தலைவி, தங்க தாரகை, காவேரி தாய், அம்மா அவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு இந்த வீணா போன நம்பிக்கையை உடைத்தெறிய வேண்டும், தனி பெரும்பான்மையுடன் ஆட்சி புரியும் அம்மா இதை செய்வாரா?

ஊழல் புகாரில் சிக்கியுள்ள கட்காரிக்கு அத்வானி வக்காலத்து

புதுடில்லி :""காங்கிரஸ் கட்சியினர், தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்புவதற்காகவே, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரிக்கு எதிராக புகார் கூறுகின்றனர். இது திட்டமிட்ட சதி,'' என, பா.ஜ., தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
ஆனால், பா.ஜ., - எம்.பி.,யும் பிரபல சட்ட நிபுணருமான, ராம் ஜெத்மலானியோ, "ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான கட்காரி, உடனடியாக, தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, கோரியுள்ளார்.பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரிக்கு எதிராக, சமூக ஆர்வலரும், புதிதாக அரசியல் கட்சியை துவக்கியுள்ளவருமான, அரவிந்த் கெஜ்ரிவால், ஏற்கனவே ஒரு புகாரை கூறியிருந்தார். தேசியவாத காங்., தலைவர் அஜீத் பவார் உதவியுடன், பல ஏக்கர் விவசாய நிலத்தை, கட்காரி அபகரித்ததாக, அவர் கூறியிருந்தார்.இந்நிலையில், கட்காரிக்கு எதிராக, மேலும் ஒரு ஊழல் குற்றச்சாட்டு, மீடியாக்களில் நேற்று முன்தினம் வெளியானது. அத்வானி தான் பிரதமாராக வரவேண்டும் என்பதற்காக விட்டால் கத்காரி காலில் விழுந்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை.

புதன், 24 அக்டோபர், 2012

உலக அளவில் பிசினெஸ் இலங்கை 81. பாகிஸ்தான் 107. பங்களாதேஷ் 129,இந்தியா 132

உலக அளவில், பிசினெஸ் செய்வதற்கு இந்தியா 132-வது இடத்தில்! இலங்கை 81, பாகிஸ்தான் 107,  பங்களாதேஷ் 129

Viruvirupu
இன்னும் சீக்கிரம் பண்ண முடியாதுங்களா?
வணிகம் செய்வதற்கு உகந்த சூழ்நிலை உள்ள 185 நாடுகள் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா 132-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சிங்கப்பூர் உள்ளது.
ஒருகாலத்தில் வணிகம் செய்வதற்கு மிகவும் சிரமமான நாடாக இந்தியா இருந்த நிலைமை, 7 ஆண்டுகளுக்கு முன்புதான் மாறியது. 2005-ம் ஆண்டு முதல் வணிகம் செய்வதற்கு தேவையான ஒப்புதல் முறைகளை இந்தியா எளிமையாக்கியுள்ளது. அத்துடன், வணிகம் செய்வதற்கான செலவையும் இந்தியா குறைத்துள்ளது என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
BRIC எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா (BRAZIL, RUSSIA, INDIA, CHINA) நாடுகளை பொறுத்தவரை, 2005-ம் ஆண்டு முதல் வணிகத்துக்கு ஏதுவான சூழ்நிலை உருவாக்குவதில் முதல் 50 இடங்களில், இந்தியாவும், சீனாவும் இடம் பெற்றுள்ளன. கவனிக்கவும், இங்கு குறிப்பிடப்படுவது, புதிய பிசினெஸ் ஒன்றை தொடங்குவதற்கு எடுக்கப்படும் அவகாசம்.
ஒரு புதிய பிசினெஸ் தொடங்குவதற்கு, இந்தியாவில் 27 நாட்களாவது தேவை. சீனாவில் 33 நாட்கள் ஆகின்றன என உலக வங்கி அறிக்கை கூறுகிறது. மேலும் புதிய பிசினெஸூக்கு மின்சார வசதி பெறுவதற்கு இந்தியாவில் 67 நாட்கள் ஆகிறது என்றும், இந்த பிரிவில், இந்தியா 105-வது இடத்தை பிடிக்கிறது என்றும் இந்த உலக வங்கி அறிக்கை கூறுகிறது.

ஜெயாவின் இருட்டாட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர்


கோவில்களில் அன்னதானம், ஆடு மாடுகள் மீது அக்கறை, யானைகளை சுற்றுலாவுக்கு அனுப்புவது என்று ஜீவராசிகள் மீது பாசம் காட்டும் பாசிச  ஜெயாவின் ஆட்சி என்றாலே தமிழகம் எப்போதும் பின்னோக்கி இருண்டகாலத்திற்கு சென்று விடும். தமிழகம் முழுவதும் தற்போது 16, 17 மணி நேரத்திற்கு விட்டு விட்டு மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
கல்வி, மருத்துவம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட சேவைகளை வழங்குவதிலிருந்து அரசு விலகிக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற மறுகாலனியக்க கொள்கைகளை அமல்படுத்தத்துவங்கிய பிறகு நாடு முழுவதும் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் எதுவும் பெரிய அளவுக்கு துவக்கப்படவில்லை.  மின்சாரம் வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக்கொண்டு தனியார் கொள்ளையர்களை மின் உற்பத்தி துறைக்குள் நுழைப்பது அரசின் திட்டம். அற்கான பல சதி வேலைகளும். சதி ஆலோசனைகளும் நடக்கின்றன.

ஜெயலலிதாவுக்கும் பி.ஆர்.பி அன் கோ வுக்கும் இடையே ரகசிய பேரம் ?

பல லட்சம் கோடி கிரானைட் ஊழல் !
மலைகளை விழுங்கிய மகாதேவர்களுக்கு 50 ஆயிரம் ஏக்கர் சொத்துக்கள் !
ஆமை வேகத்தில் நகரும் அரசின் கண் துடைப்பு நடவடிக்கை !
ந்தாண்டு மே மாதத்தில் சந்தி சிரிக்கத் தொடங்கிய கிரானைட் ஊழல் கடந்த 5 மாதங்களாக ஊடகங்களுக்குத் தீனியாகவும், வாசகர்களுக்குப் பசியாற்றிக் கொண்டும் ஓடிக் கொண்டிருக்கிறது. ராணித் தேனீயைப் பிடித்துக் கொண்டு போய் கூண்டில் அடைத்து தேன் கூடு கட்டுவது போல் மலை விழுங்கி மகாதேவன் பி.ஆர்.பி.ஐப் பிடித்து உள்ளே வைத்துக் கொண்டு, சிலரைப் பட்டியிலடைத்து விட்டுப் பலரைத் தேடிக் கொண்டிருக்கிறது அரசு.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இதைக் கண்டு கொள்ளாத அரசுகள், அதிகாரிகள் இப்போது அவர்களாகவே அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டே கிரானைட் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களை அரசு-காவல்துறை-மாவட்ட நிர்வாகம் அடங்கிய கூட்டணி தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தாங்கள் விரும்புகிற அளவுக்குச் செய்திகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். தங்களுக்கு வேண்டிய செய்தியாளர்களுக்கு புள்ளி விப‌ரங்களைக் கொடுத்து விலாவாரியாக வெளியிடச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

உருக்கமான கடிதம்! 7 வயது மகனை கொன்ற காதல் தம்பதி தற்கொலை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
பெ.நா.பாளையம்: கோவையில் விஷ பிஸ்கட் கொடுத்து 7 வயது மகனை கொன்ற காதல் தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். கோவை கவுண்டம்பாளையம் வைகோ நகரை சேர்ந்தவர் பரமசிவம்(36). கால்டாக்சி டிரைவர். மனைவி கோமளவல்லி(26). தனியார் நிறுவன ஊழியர். மகன் நவீன்குமார்(7) அருகில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு மாணவன். ஊட்டி அடுத்த புலிசேரியை சேர்ந்த இந்த தம்பதி, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வேலை தேடி கோவை வந்த இவர்களுக்குள் குடும்பத் தகராறு இருந்து வந்தது. கடன் தொல்லையும் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு தம்பதிக்குள் மீண்டும் சண்டை ஏற்படவே அருகே வசித்து வரும் கோமளவல்லியின் அண்ணன் குமார் இருவரையும் சமாதானப்படுத்தி சென்றுள்ளார்.

அமெரிக்காவில் ஆந்திர பெண்ணை கொன்று 10 மாத குழந்தை கடத்தல்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperவாஷிங்டன்: அமெரிக்காவில் ஆந்திர பெண்ணை சுட்டுக் கொன்று விட்டு அவரது 10 மாத பேத்தியை மர்ம நபர்கள் கடத்தி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாயமான குழந்தையை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் குடுமுலகுண்ட்லா கிராமத்தை சேர்ந்தவர் வேலுகொண்டா ரெட்டி. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி சத்யவதி (61). இந்த தம்பதிக்கு சிவபிரசாத் ரெட்டி, கிருஷ்ணா ரெட்டி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இருவரும் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக உள்ளனர். பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள கிங் ஆப் பிரஷ்யா பகுதியில் சிவபிரசாத் ரெட்டி வசித்து வருகிறார்.


இவரது மனைவி லதா. இவரும் சாப்ட்வேர் இன்ஜினியர். இவர்களது 10 மாத பெண் குழந்தை சாவ்னி. சிவபிரசாத், லதா இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையை கவனித்து கொள்ள 6 மாதங்களுக்கு முன்பு சத்யவதி மகன் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார். நேற்று மகனும் மருமகளும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் பேத்தியுடன் இருந்தார் சத்யவதி. அப்போது வீட்டுக்குள் மர்ம நபர்கள் 3 பேர் திடீரென நுழைந்தனர். குழந்தையை தூக்கினர்.

15 புதிய முகங்கள்? பிரதமர் மன்மோகன் சிங் முடிவு

வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு விடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 6 அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியதை அடுத்து பல்வேறு முக்கியத் துறைகளுக்கு அமைச்சர்களை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் மரணம் அடைந்ததால் மேலும் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது.இதற்கிடையே, கூட்டணிக் கட்சிகள் முக்கிய அமைச்சர்கள் பதவியைக் கேட்டு நிர்பந்திப்பதால், எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாமல் மத்திய அரசு குழம்பியுள்ளது.இதற்கிடையே, சரியாக செயல்படாத அமைச்சர்களை கட்சிப் பணியாற்ற அனுப்பிவிட்டு புதிய நபர்களை அமைச்சரவையில் சேர்க்க சோனியா தரப்பு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.<

சூர்யா-கௌதம் லடாய்: இமிடியட் ரிலீஃப் கேட்டால், இடியாப்பத்தில் பங்கு கேட்கிறார்!


Viruvirupu
மாற்றான், “மாட்டேன்.. போ” என்று சொல்லிவிட்டதில் அப்செட்டாகியிருக்கும் சூர்யா, அவசரகதியில் ஒரு வெற்றிப்படம் கொடுக்கும் ஆவலில் இருக்க வேண்டும். அதையடுத்து, சுற்றும் முற்றும் பார்த்ததில், சறுக்க விடாத வேட்பாளராக தெரிந்திருக்கிறார் கௌதம் மேனன்.
இதையடுத்து, மற்றொரு ‘காக்க காக்க’ உருவாக்கலாமா என்று ஒரு ரவுண்ட் பேச்சுக்கள் நடந்தன.
கௌதம், எதற்கும் தயாரான ஆள். சூர்யாவுக்கு என்ன, சூர்யா அப்பா சிவகுமாருக்கே கதை வைத்திருக்கிறார். உற்சாகமாக பேச்சுக்கள் தொடங்கின.
ஆச்சரியமாக, தனது சம்பளத்தில் சில ‘சி’களை தள்ளுபடி செய்யவும் சூர்யா தயாராக இருந்திருக்கிறார். அந்தளவுக்கு மாற்றான் புரட்டி எடுத்துவிட்டது. சூர்யாவுக்கு தேவை இமிடியட் ரிலீஃப்!
எல்லாம் சுமுகமாக போய்க்கொண்டிருந்த இந்த ப்ராஜெக்ட் இப்போது, ட்ராப்பாம்! காரணம், ஒரு படத்தை முடிக்க கௌதம் கேட்ட கால்ஷீட் நாட்களின் எண்ணிக்கையில், சூர்யா இரண்டு படமும் முடித்து, இடியாப்ப விளம்பரங்கள் இரண்டிலும் நடித்து முடித்து, மூக்குப்பொடி டப்பா விளம்பரத்துக்கும் மூன்று நாள் மீதமிருக்குமாம்!
“என்னங்க இவர், இமிடியட் ரிலீஃப் தேடிப் போனால், இடியாடிக்காக டேட்ஸ் கேட்கிறார்?” என்ற காமெண்டோடு சூர்யா கதையை முடித்துக் கொண்டார் என்கிறார்கள்!