புதன், 25 மே, 2011

யாழ் கைதிகளுக்கு இருவார காலத்துக்குள் தீர்வு

யாழ் சிறைச்சாலை கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்னும் இருவார காலத்துக்குள் ஆவண பரிசோதனைகளுடன் கூடிய தீர்வு ஒன்று முன்வைக்கப்படும் என யாழ் இந்து பௌத்த கலாசார பேரவையின் தலைவரும், ஜனாதிபதியின் இணைப்பாளரும் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் ஆலோசகருமான எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், கைதிகள் தொடர்பில் நீதி அமைச்சரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அவர் வெளிநாட்டுக்கு சுற்றுபயணம் மேற்க்கொண்டுள்ளமையால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கைதிகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அதனை அடிப்படையாகக் கொண்டு நீதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Kalaignar: அதிமுகவை வெற்றி பெறச் செய்தவர்கள் வருத்தப்பட வேண்டும்

சென்னை: சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதால் தமிழகத்தின் எதிர்கால மாணவர் சமுதாயம் பாதிப்புக்குள்ளாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்குப் பின் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: சமச்சீர் கல்வியை அரசு நிறுத்தி வைத்திருக்கிறதே?

பதில்: சமச்சீர் கல்விக்கு தடை விதித்துள்ளது அதிமுக அரசு. சமச்சீர் கல்வித் திட்டம் மாணவர்கள், பெற்றோர்கள் என எல்லா தரப்பினரிடமும் ஆராய்ந்து, பல்வேறு குழுவினரிடம் கருத்து கேட்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை ரத்து செய்வதால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும்.

கேள்வி: டெல்லி சென்ற நீங்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவில்லையே?

பதில்: டெல்லியில் என்னை மத்திய மந்திரிகள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம் ஆகியோர் சந்தித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது முறையாக இருக்காது என்பதால் சந்திக்கவில்லை.

கேள்வி: சட்ட மேலவை வராது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறாரே?

பதில்: தலைமை செயலகத்தை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியதும், மேலவை வராது என்பதும் எதிர்பார்த்ததுதான்.

கேள்வி: திமுக ஆட்சியின் போது சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதாகவும், அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் ஜெயலலிதா கூறி இருக்கிறாரே?

பதில்: அதில் ஆட்சேபனை எதுவும் இல்லை. அப்படி சொத்து அபகரிக்கப்பட்டிருந்தால், அதை உரியவர்களிடம் ஒப்படைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.

கேள்வி: திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படுமா?

பதில்: இப்போது என்ன அவசரம்.

கேள்வி: திமுக தொண்டர்கள் விரக்தியில் இருக்கிறார்களா?

பதில்: தொண்டர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே முரசொலியில் நானும் அன்பழகனும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

கேள்வி: பள்ளிக் கட்டண விவகாரத்தில் அரசு நேரடியாக தலையிடாது என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?

பதில்: பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தலையிடுங்கள்.

கேள்வி: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக ஆட்சி ரத்து செய்துள்ளதே?

பதில்: தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தவர்கள் இதற்காக வருத்தப்பட வேண்டும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டரீதியாக நீதி நிலைநாட்டப்படும் என்ற உறுதியுடனும், துணிவுடனும் இருக்கிறார்.

சபாநாயகர் என்று தேதியை முடிவு செய்கிறாரோ அன்று நான் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொள்வேன்.

அரசின் நல்ல திட்டங்களுக்கு திமுகநிச்சயம் ஒத்துழைப்பு நல்கும். புதிதாக பதவியேற்ற அமைச்சர் மரியம் பிச்‌சை விபத்தில் இறந்தததற்கு திமுக தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என்றார்.
  

English summary
Talking to newspersons, DMK president Karunanidhi said he would be sworn in as Member of the Assembly at a date fixed by the Speaker of the Assembly. He could not be sworn in as member on May 23, when pro tem Speaker C K Tamizharasan administered the oath of office to the new members as he was away in Delhi to meet his daughter K Kanimozhi, arrested in connection with 2G spectrum allocation case.

தமிழ் செல்வனின் மனைவி, பிள்ளைகள் நிபந்தனையுடன் விடுதலை!

இலங்கை பாதுகாப்பு படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனின் மனைவி சசிரேகாவும் அவரின் இரு பிள்ளைகளும் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்செல்வன் 02.11.2007 அன்று இலங்கை விமானப்படையினரின் குண்டு தாக்குதலில் பலியானார். அவரின் மனைவியும் பிள்ளைகளும் யுத்தத்தின் இறுதிகட்டத்தில் வவுனியா அகதி முகாமுக்கு இடம் பெயர்ந்திருந்தனர்.
அப்போது குற்றத்தடுப்பு பிரினரால் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட இவர்களை விடுவிப்பதற்கான முயற்சியினை முன்னாள் விடுதலை புலிகளின் தளபதிகளில் ஒருவரும் தற்போதைய அரச அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) ஈடுபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாண்டலின் ராஜேசுடன் திருமணம்: மீரா ஜாஸ்மின் சினிமாவுக்கு குட்பை!

மாண்டலின் ராஜேஷை திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக உள்ளதால், இனி சினிமாவில் நடிப்பதில்லை என நடிகை மீரா ஜாஸ்மின் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரன் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழின் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் மீரா ஜாஸ்மின். சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். கடைசியாக அவர் நடித்த தமிழ்ப் படம் இளைஞன்.

மீரா ஜாஸ்மினும் மாண்டலின் இசை கலைஞர் ராஜேசும் நீண்ட நாள்களாக காதலித்து வருகின்றனர். படங்களில் நடித்ததால் திருமணத்தை தள்ளிப் போட்டு வந்தார்.

ஆனால் தற்போது அனுஷ்கா, ஹன்சிகா மோட்வானி உள்ளிட்ட புது நாயகிகள் வரத்தால் மீரா ஜாஸ்மினுக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. சமீபத்தில் ரிலீசான படங்களும் நன்றாக ஓடவில்லை. எனவே மாண்டலின் ராஜேஷை விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவு செய்துள்ளாராம்.

திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக மலையாள பட உலகில் தகவல் பரவியுள்ளது. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டாராம் மீரா ஜாஸ்மின்.

சமீபத்தில் நடந்த மலையாள சினிமா நடிகர்கள் சங்கம் 'அம்மா'வின் நிகழ்ச்சியில் மீரா பங்கேற்கவில்லை. இதுகுறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "இனி யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. காரணம் இனி சினிமாவில் நடிப்பதாகவும் இல்லை," என்றார்.

English summary
Meera Jasmine the National award winning actress is saying good bye to movies due to her marriage with her long time lover Mandalin Rajesh.

உலக வங்கியிடம் உதவி கோருகிறார் இமெல்டா

வலி.வடக்கில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் 130 கிலோமீற்றர் நீளமான வீதிகள் முழுமையாகத் திருத்தப்பட வேண்டியுள்ளது. இதற்கு உலக வங்கி உதவவேண்டும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் உலக வங்கிக் குழுவினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மையில் வலி.வடக்குப் பகுதிக்குச் சென்ற உலக வங்கிக்குழு அங்கு மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்ந்தது. இதன்போது யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், வலி.வடக்குப் பிரதேச செயலாளர் எஸ்.முரளிதரன் ஆகியோரும் அங்கு பிரசன்னமாயிருந்தனர்.

அப்போது வலி.வடக்கு வீதிகளின் மோசமான நிலையை அரச அதிபர் உலக வங்கிக் குழுவிடம் தெளிவாக விளக்கினார். வலி.வடக்கில் 130 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும். பிரதான வீதிகள், உள்ளக வீதிகள் என அனைத்துமே முழுமையாகச் சேதமடைந்துள்ளன.

இவற்றைப் புனரமைக்கப் பல மில்லியன் ரூபா நிதி தேவைப்படுகின்றது. இதற்கு உலகவங்கி நிதியுதவிகளை வழங்கவேண்டும் என்று அரச அதிபர் உலக வங்கிக் குழுவிடம் கேட்டுக்கொண்டார். வீதிகளின் அபிவிருத்தி தொடர்பான திட்ட மதிப்பீடு அடங்கிய விவரங்களையும் அரச அதிபர் உலக வங்கிக் குழுவிடம் கையளித்தார்.

புலிகள் இயக்கதின் முக்கியஸ்தர் எஸ்.ராமச்சந்திரன் நெதர்லாந்தில் கைது

நெதர்லாந்தில் செயற்பட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கதின் முக்கியஸ்தர் எனக் கருதப்படும் எஸ்.ராமச்சந்திரன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக நெதர்லாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் பிரிவொன்றின் தலைவராகவும், முக்கிய தளபதிகளில் ஒருவராகவும் செயற்பட்டு வந்த நெடியவன் எனப்படும் சிவரூபன் நோர்வேயில் கைது செய்யப்பட்டதன் பின் நெதர்லாந்தில் ராமச்சந்திரனின் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ராமச்சந்திரனின் வீட்டை சோதனையிட்ட பொலிசார் பென் டிரைவில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 136 மில்லியன் பணம் தொடர்பான விபரங்களையும் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பணம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் ஆயுதக் கொள்வனவுக்காக ஐரோப்பிய வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்யும் நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய நெதர்லாந்து அலுவலகத்தில் பிரதானியாக செயற்பட்ட ஞானம் என்பவரும் நெதர்லாந்தின் இரகசியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இவர்களுடன் தொடர்பைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் ஹேக், ட்ராசெய்ஸ்ட், அம்ஸ்டர்டாம், ரல்டே மற்றும் அமசோடம் ஆகிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளையடுத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக நெதர்லாந்து ஊடகம் தெரிவிக்கின்றது.

துக்ளக் தர்பார் ஆரம்பம்,சமச்சீர் கல்வி Stop - ஜெயலலிதாவின் தான்தோன்றி தனம்

கருணாநிதியின் அனைத்துச் செயல்களையும் எப்படியேனும் மாற்றியே தீருவது என்ற முடிவுடன்தான் ஜெயலலிதா தேர்தலுக்கு முன்பிருந்தே இருந்தார். ஆனால் அவற்றைச் செயல்படுத்தும்போது பொதுமக்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வார் என்று யாரேனும் நினைத்திருந்தால், அந்த நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள். பொதுமக்கள் எல்லாம் இந்த இடத்தில் collateral damage-தான்.

தலைமைச் செயலகமும் சட்டமன்றமும் இனி மீண்டும் கோட்டையில்தான் - என்பதில் தொடங்கியது இது. இதற்குச் சொன்ன காரணங்களை ஓரளவாவது ஏற்றுக்கொள்ளலாம். புதுக் கட்டடம் இன்னமும் கட்டி முடிக்கப்படவில்லை. சரி, கட்டி முடிப்பது தீவிரப்படுத்தப்படுமா? கட்டி முடித்தபின்னாவது தலைமைச் செயலகமும் சட்டமன்றக் கூட்டங்களும் ஓமாந்தூரார் மாளிகையின் புதுக் கட்டடத்துக்கு மாற்றப்படுமா? தெரியாது.

அடுத்து சமச்சீர் கல்வி. மூன்றாண்டுகள் கூட்டம் கூடி, தேவை என்று சொல்லி, கொண்டுவந்த புதிய பாடத்திட்டம். புதிய புத்தகங்கள். அவற்றை அச்சடிக்க 200 கோடி ரூபாய் செலவு. புத்தக விநியோகமே ஆரம்பித்தாயிற்று. முதலில் தமிழ் பாடப் புத்தகத்தை நிறுத்தி, அதில் செம்மொழி மாநாடு பற்றிய பகுதிகளை நீக்குவார்கள் என்று அறிவித்தது, அடுத்து சமச்சீர் கல்விக்கே தடா என்று முடிந்துள்ளது. இதனால் ஏற்கெனவே அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் பாழ். புதிதாக அச்சடிக்க மேலும் 110 கோடி ரூபாய். பள்ளிகள் திறக்க 15 நாள்கள் தாமதம். ஏற்கெனவே 10-ம் வகுப்புப் பிள்ளைகளை படிக்கத் தொடங்கியிருப்பர்; அவர்களுக்கெல்லாம் திண்டாட்டம். இது தவிர, தனியார் பதிப்பகங்கள் பலவும் இந்த சமச்சீர் பாடப் புத்தகங்களுக்கு அச்சிட்டிருக்கும் கோனார் தமிழ் உரை, கைடுகள், நோட்ஸுகள் எல்லாம் பாழ். அரசுப் பணம் பாழ் என்பதே கொடுமை. இதில் தனியார் பணம் பாழாவது கடுமையான கண்டனத்துக்கு உரியது!

ஆனால் இரண்டு பிரச்னைகளிலும் கருணாநிதிமீதும் குற்றம் சாட்டவேண்டியுள்ளது.

புதிய கட்டடம் என்று தன் ஆட்சியின் முதல் நாளே தீர்மானித்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் பேசாமல் இருந்திருக்கவேண்டும். ஆட்சி எப்போதும் நிரந்தரம் என்று நினைத்துக்கொண்டு நான்காம் வருடம் ஆரம்பித்தால் இப்படித்தான் பொதுமக்கள் பணம் பாழ். ஏனெனில் தமிழ்நாட்டில் மட்டும்தான் புதுவிதமான மாநில ஆட்சி நடைபெறுகிறது. இங்குமட்டும்தான் இரண்டு தனி நபர் பகை, கொள்கையாகவும் திட்டங்களாகவும் மாற்றம் பெறுகிறது. எம்.ஜி.ஆருக்கு கருணாநிதியைப் பிடிக்கவில்லை என்றால் மேலவை கலைக்கப்படும். எனவே கருணாநிதி அதை மீண்டும் கொண்டுவருவார். எனவே ஜெயலலிதா அதை அழிப்பார்.

அடுத்து சமச்சீர் கல்வி. சமச்சீர் கல்வி வேண்டும் வேண்டும் என்று அலைந்தது ஒருசில தன்னார்வலர்கள். அவர்கள் எல்லாம் இன்று எங்கே? எந்தப் பள்ளிக்கூடமும் இதை வேண்டும் என்று கேட்கவில்லை. மெட்ரிக் பள்ளிகள் இதைக் கடுமையாக எதிர்த்தன. ஆனால் இதைக் கொள்கை முடிவாக ஆக்கி, சட்டத்திருத்தம் கொண்டுவந்து, நீதிமன்றங்களில் கடுமையாகப் போராடி, இறுதியில் நடைமுறைப்படுத்த வந்தபோது கருணாநிதிக்கு ஆட்சி போயிற்று. இந்தப் புத்தகங்களில் செம்மொழி பாடலைப் புகுத்தவேண்டுமென்று யார் அழுதார்கள்? அதுதானே இந்தப் புத்தகங்களைக் கிடப்பில் போட ஒரு உந்துதல் ஆயிற்று? மெட்ரிக் பள்ளிகளை அரவணைத்துச் சென்றிருக்கலாம் அல்லவா? ஆனால் அரசியல் ஈகோ களத்தில் அப்படியெல்லாம் செய்வது ஏற்கமுடியாததே? எனவே மெட்ரிக் பள்ளிகள் சங்கம் என்னவெல்லாம் செய்தார்களோ, இன்று சமச்சீர் திட்டம் காலி. ஏகப்பட்ட பணம் நஷ்டம்.

வலுவான எதிர்க்கட்சியாக கருணாநிதியின் திமுக இவற்றை எதிர்கொள்ளவேண்டும். ஆனால் அப்படிச் செய்யமுடியாமல், துக்கத்தில் இருக்கிறார் தலைவர். அவரது இன்றைய கவலை, தன் பெண்ணைச் சிறையிலிருந்து மீட்கவேண்டும் என்பதே. எனவே எந்தவிதமான whimpering protest கூட இல்லாமல், ஜெயலலிதா தான் விரும்பியதைச் செய்துமுடிப்பார்.

விரைவில் மேலவைக்கு முட்டுக்கட்டை போன்ற இன்னபிற மிக முக்கியமான, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லக்கூடிய திட்டங்களை ஜெயலலிதா அறிவிப்பதை நாம் வரவேற்போம்.

[Disclaimer: சமச்சீர் கல்வி 10-ம் வகுப்பு பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு NHM நிறுவனம் கைடுகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனால் இதுவரையில் எதையும் அச்சிட்டு கையைக் கடித்துக்கொள்ளவில்லை. சுரா புக்ஸ், பழனியப்பா பிரதர்ஸ் போன்ற பல நிறுவனங்கள் ஏற்கெனவே கைடுகளை அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். அவர்களுக்குக் கட்டாயம் நஷ்டம்தான்.]

செய்யாத தவறுக்கு அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி மகள் கைது!

வாஷிங்டன் : அமெரிக்காவில் இந்திய தூதரகத்தில் துணை கவுன்சலாக இருப்பவர் தேபாசிஷ் பிஸ்வாஸ். இவரது மகள் கிருத்திகா பிஸ்வாஸ். இவர் மேற்பட்டிப்புக்காக அமெரிக்காவுக்கு அண்மையில் வந்தார். அங்கிருக்கும் ஒரு பிரபல பள்ளியில் அட்வான்ஸ்ட் கணிதம் பாடப்பிரிவில் சேர்ந்தார். ஆனால் கிருத்திகா பிஸ்வாஸ், அவரது பள்ளி ஆசிரியர்கள் பற்றி தரக்குறைவான, ஆபாசமாக இ மெயில் அனுப்பியதாக புகார் எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து கிருத்திகா பிஸ்வாஸ் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து பள்ளிக்கூடத்தில் நடந்த விசாரணைக்குப் பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக ஒரு நாள் லாக்கப்பில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். லாக்கப்பில் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் கிருத்திகாவுக்கு பள்ளிக்கூடத்தில் இருந்து ஒரு இ மெயில் வந்தது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் , அவர் வழக்கம் போல் பள்ளிக்கு வரலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் உண்மையான குற்றவாளி பற்றி எந்த ஒரு தகவலும் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் தன் மீது குற்றம் இல்லாத போது தன்னை பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்த குற்றத்துக்காகவும், தவறு செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை அளித்தும், முறையான விசாரணை மேற்கொள்ளாமல் லாக்கப்பில் வைத்து இழிவு படுத்தியதற்காக நியூயார்க் போலீசார் மீதும் வழக்கு தொடரப் போவ‌தாக இளம் பெண் கிருத்திகா தெரிவித்துள்ளார்.

தாயகம் திரும்ப திட்டம் : பாதிக்கப்பட்ட மாணவி விரைவில் தான் தாயகம் திரும்ப இருப்பதாகவும், தனது மேற்படிப்பை இந்தியாவிலேயே தொடர விரும்புவதாகவும் கூறியுள்ளார். வெளிநாட்டில் கல்வி, வெளிநாட்டு வேலை என்ற மோகத்தால் அயல் நாடுகளுக்கு படை எடுக்கும் இந்தியர்கள் பலர் இவ்வாறான இன்னல்களுக்கு அவ்வப்போது ஆளாகி வருகின்றனர். தனக்கு நேர்ந்த சோக சம்பவம் குறித்து கூறிய கிருத்திகா : ஏராளமான கனவுகளுடன் அமெரிக்காவில் கல்வி பயில வந்தேன், ஆனால் எனக்கு கசப்பான அனுபவங்களே வாய்த்தன. செய்யாத குற்றத்துக்காக பெற்ற தண்டனைக்கு வழக்கு தொடர்ந்துள்ளேன், நீதி கிடைத்தவுடன் ‌தாயகம் திரும்புவேன். இவ்வாறு கிருத்திகா கூறினார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக சமச்சீர் கல்வியை நிறுத்தக் கூடாது: கல்வியாளர்கள் வேண்டுகோள்


அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக சமச்சீர் கல்வியை நிறுத்தக் கூடாது: கல்வியாளர்கள் வேண்டுகோள்விருத்தாசலத்தில் இலவச கல்வி உரிமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சமச்சீர் கல்வியை தடை செய்யாமல் உடனடியாக அமல்படுத்தக் கோரியும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கல்வியாளர் ராஜகோபாலன், நல்ல கல்வியை அரசினால் தரமுடியும். சமச்சீர் கல்வி திட்டம் பல வல்லுநர்களால் ஆய்வு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சமச்சீர் கல்வித் திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தி வைக்கக் கூடாது.
8ஆம் வகுப்பு பாடத்தில் குடும்ப பட்ஜெட் என்ற பாடம் உள்ளது. அதில் ஒரு குடும்ப தலைவனின் வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு என்ற விபரங்கள் இருக்கின்றன. ஒரு குடுத்துக்கு ஆகும் செலவுகளை 8ஆம் வகுப்பிலேயே ஒரு மாணவன் தெரிந்துகொண்டால், அவன் தன்னுடைய எதிர்காலத்தை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிடுவான். சமச்சீர் கல்வி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பயன்படும் என்பதால் அதனை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக நிறுத்தி வைக்கக் கூடாது என மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.
இதேபோல் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த செந்தாமரைக் கண்ணன், வெங்கடேசன், ராஜு ஆகியோரும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.

தொல்காப்பியம், உலகத்தில் எந்த ஒரு மொழிக்கும் இலக்கண நூல் கிடையாது

தொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை எழுத அடிகளாசிரியருக்கு ரூ. 2.50 லட்சம் வழங்கல்

ஆத்தூர்: மத்திய அரசின் உயரிய விருதான, "தொல்காப்பியர்' விருது பெற்ற அடிகளாசிரியரின் தமிழ் ஆர்வத்துக்கு மேலும் ஒரு மணி மகுடமாக, மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையம், "தொல்காப்பியம்' குறித்த ஆய்வு கட்டுரை எழுத, 2.50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.
கடந்த, 2005-06ம் ஆண்டுக்கான, "தொல்காப்பியர்' தேசிய விருதுக்கு, ஆத்தூர் அடுத்த தலைவாசல், கூகையூரில் வசிக்கும், 102 வயது பேராசிரியர் அடிகளாசிரியர் தேர்வு செய்யப்பட்டார். கடந்த, 6ம் தேதி, டில்லியில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் ஆகியோர் அவ்விருதை வழங்கினர்.
அடிகளாசிரியரின், 102வது பிறந்த நாள் விழாவை, குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி கூகையூர் கிராம மக்கள் நேற்று(மே-11)விழா எடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர். அதில், ஆத்தூர், தலைவாசல் பகுதி தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு அடிகளாசிரியரிடம் ஆசீர்வாதம் பெற்றனர்.
தொடர்ந்து, அடிகளாசிரியரின் தமிழ் ஆர்வத்துக்கு மேலும் ஒரு மணி மகுடமாக, மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையம், "தொல்காப்பியம்' குறித்து எளிதான முறையில் ஆய்வு கட்டுரை எழுதுவதற்கு, 2.50 லட்சம் ரூபாய் வழங்கி கவுரவித்துள்ளது.
இதுகுறித்து, "தொல்காப்பியர்' தேசிய விருது பெற்ற அடிகளாசிரியர் கூறியதாவது:
உலகத்தில் தமிழ் மொழியை தவிர வேறு எந்த ஒரு மொழிக்கும் இலக்கண நூல் கிடையாது. எந்த மொழிக்கும் கிடைக்காத இலக்கண நூல், தமிழ் மொழிக்கு தொல்காப்பியம் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு மொழி அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தொல்காப்பிய இலக்கண நூலை ஆய்வு செய்து, எளிமையான முறையில் கட்டுரைகள் எழுதி கொடுக்கும்படி, மத்திய உயர்கல்வி மற்றும் மனிதவள மேட்டுத்துறையின் கீழ் சென்னையில் அமைந்துள்ள மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையம் தெரிவித்தது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் தொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை பணிகளைமுடித்துகொடுக்க உள்ளேன்.
இவ்வாறு அடிகளாசிரியர் கூறினார்.

சிறுநீரகங்கள் பாதிப்பு-5 முறை டயாலிசிஸ்: சிகிச்சைக்காக லண்டன் கொண்டு செல்லப்படும் ரஜினி

: சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக நடிகர் ரஜினி அடுத்த சில நாட்களில் லண்டன் கொண்டு செல்லப்படவுள்ளார்.

முன்னதாக அவரை அமெரிக்கா அழைத்துச் செல்ல திட்டமிட்டனர். பின்னர் அமெரிக்க டாக்டர் குழுவை சென்னைக்கு வரவழைக்கப்பட்டது. இந் நிலையில் அவரை லண்டனுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29ம் தேதி ராணா படப்பிடிப்பில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது.ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்பதைச் சொல்லாமல் மூடி மறைத்தனர் அவரது குடும்பத்தினர்.

இதையடுத்து முதலில் இசபெல்லா மருத்துவமனையிலும் இப்போது ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையிலும் ரஜினி சிகிச்சை பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 1 மாத காலமாகவே ரஜினி உடல்நலக் குறைவுடன் உள்ளார்.

மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கு முன்பே, ரஜினிகாந்துக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை, ஆரம்ப நிலை சர்க்கரை நோய் ஆகியவை இருந்துள்ளன. இவற்றுக்கு உரிய சிகிச்சையை எடுக்காமல் இருந்ததால், சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டன.

சிறுநீரகச் செயல்பாடு பாதிப்பு காரணமாக அவருக்கு ஹீமோ-டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அவருக்கு 5 முறை ஹீமோ-டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் சிறுநீரக பாதிப்புக்கு உயர் சிகிச்சை அளிக்க அவரை லண்டன் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரம் அவர் லண்டன் பயணமாவார் என ரஜினி குடும்பத்துக்கு வேண்டியவர்கள் தெரிவித்தனர். பயண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ராஜீவ் படுகொலையை அரசியல் ஆக்க வேண்டாம்: ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கண்டனம்




ராஜீவ் காந்தி படுகொலையை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம் என்று ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 24.05.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா, ராஜீவ்காந்தி கொலையில் திமுகவை தொடர்பு படுத்திப் பேசியதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி, ராஜீவ்காந்தி கொலை மிகவும் உணர்வு பூர்வமான நிகழ்வு. இந்த சம்பவம் நாடு முழுவதும் மட்டுமின்றி உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வு.
மிகவும் உணர்ச்சிகரமான அந்த துயரச் சம்பவத்தை யாரும் அரசியலாக்க முயற்சி செய்ய வேண்டாம். இதனை யாரும் அரசியலாக்க முயற்சிப்பதை காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது. இவ்வளவு பெயரி துயரச்சம்பவத்தை அரசியலாக்க முயற்சிப்பது கண்டனத்துக்குறியது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அச்சம்பவம் அரசியலாக்கப்படுவதில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

நாக்கை அறுத்து காணிக்கை செலுத்திய பெண்ணுக்கு அரசு வேலை!


ஜெயலலிதா ஆட்சி அமைய நாக்கை அறுத்து காணிக்கை செலுத்திய பெண்ணுக்கு அரசு வேலை!

அதிமுக ஆட்சி அமைய வேண்டி நாக்கை அறுத்து காணிக்கை செலுத்திய திருவாடனை தாலுகா தொண்டியை சேர்ந்த சரிதாவுக்கு சத்துணவு உதவியாளர் வேலை வழங்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவையும், எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பில் ஒரு லட்சம் ரூபாய் காசோலையையும் தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா மீண்டும் தமிழ்நாடு முதல் அமைச்சராக வரவேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா, தொண்டியைச் சேர்ந்த கே.சரிதா, தேனி மாவட்டம வீரபாண்டியில் உள்ள கவுரியம்மன் கோவிலில் 13ந் தேதி அன்று தனது நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளார்.

இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர் கணவனால் கைவிடப்பட்டு ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகிறார்.  இவர் தனது நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தியதை அறிந்ததும் ஆண்டிப்பட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவியும், அதனைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

முதல் அமைச்சர் ஜெயலலிதா இந்த நிகழ்வு குறித்து அறிந்ததும் பாதிக்கப்பட்ட கே.சரிதாவை உடனடியாக சென்னைக்கு வரவழைத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கே.சரிதாவுக்கு தேவையான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

சரிதா கணவனால் கைவிடப்பட்ட நிலையில் அவரின் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதல்  அமைச்சர் ஜெயலலிதா 24ந் தேதி தலைமை செயலகத்தில் சரிதாவின் எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சத்துணவுத் துறையில் சத்துணவு உதவியாளர் வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.

இதன் மூலம் சரிதா மாத ஊதியமாக ரூ.2077 பெறுவார். மேலும் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையின் மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சரிதாவின் சிகிச்சைக்கான முழுக்கட்டணத் தொகை 36,195 ரூபாய் செலுத்தவும் உத்தரவிட்டார்.


எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலம் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். இதைத்தவிர அவர் வசிப்பதற்கு சொந்த கிராமமான தொண்டியில் வாடகை வீடு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான மாத வாடகையாக எம்.ஜி.ஆர். அறக்கட்டளையின் மூலம் தொடர்ந்து வழங்கிடவும் ஆணையிட்டார்.

முதல் அமைச்சரிடம் பணி ஆணையையும், நிதி உதவியையும் பெற்றுக் கொண்ட சரிதா, தான் நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தியதை அறிந்ததும் உடனடியாக மேல் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்து தனக்கு தேவையான சிகிச்சையை அளித்ததற்கும், சத்துணவு உதவியாளர் பணி மற்றும் நிதி உதவிகளையும் வழங்கியதற்கு ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் அந்த பெண்ணுக்கு நல்ல டிவி கவரேஜும் கிடைக்குமாறு பார்த்துக்கொண்டார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

உங்களின் அந்தக் கால ரசிகன்: 
அதாகப்பட்டது அம்மாவின் விசுவாசிகளே இனி அம்மாவின் கவனத்தை பெறவேண்டுமாயின் உங்கள் அவயவங்களை அறுத்து கொள்ளுங்கள் என்று ஜெயலலிதா எனப்படுகின்ற அம்மா உங்கள் அனைவருக்கும் சிக்னல் கொடுத்துள்ளார். ஏற்கனவே அடிமை தனத்தில் ஊறிய தமிழ் மக்கள் இது போன்ற பறவை காவடி கலாச்சாரத்தில் சளைத்தவர்கள் அல்ல என்பதை இனி அமோகமாக காணலாம். ஜெயாம்மா தமிழ் மக்களை கேவலப்படுத்துவது உங்களுக்கு ஒன்றும் புதிதல்லவே. அய்யங்கார் ஆத்து பெண்ணான உங்களிடம் இந்த வஞ்சனை இருப்பது வரலாற்று உண்மை அல்லவா?

மதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பை 75 சதவீதம் மக்கள் வரவேற்று உள்ளனர்: வைகோ

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடாமல் புறக்கணித்ததை 75 சதவீதம் மக்கள் வரவேற்று உள்ளனர் என, வைகோ பேசினார்.

ம.தி.மு.க. 18ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிவகாசி பகுதியில் ம.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது. விழாவில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். பின்னர் ஆலங்குளம் டி.என்.சி. முக்குரோட்டில் ம.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வைகோ,

வெற்றி, தோல்விகளை சமமாக கருதுபவன் நான். என் அரசியல் பயணம் ஒளி மண்டலமாகவும், இருள் சூழ்ந்ததாகவும் இருந்து வருகிறது. 18 ஆண்டுகளுக்கு முன்பு கொலைப் பழி சுமத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட நாள் முதல் இன்று வரை எனக்கு மக்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இதுவரை நாங்கள் யாரையும் பகைத்து கொண்டதில்லை. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறேன். ஏனெனில் இதனால் அங்குள்ள மக்களுக்கு நோய்கள் ஏற்பட்டு வருவதோடு இயற்கை வளமும் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்கால தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் இந்த போராட்டங்களை நடத்தி வருகின்றேன்.

இதுதொடர்பாக கோர்ட்டில் வாதாடும் போது, இந்த போராட்டத்தில் மக்கள் உங்களோடு சேர்ந்து ஏன் ஆதரவாக போராடவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினர். அதற்கு நான், சுதந்திரம் வேண்டும் என்பதற்காக 1000 பேர் தான் போராட்டம் நடத்தினார்கள். அதில் வெற்றியும் கண்டார்கள். உடன் சேர்ந்து போராடவில்லை என்பதற்காக அவர்கள் எனக்கு ஆதரவு தரவில்லை என்பதாக எடுத்துகொள்ள கூடாது என்றேன். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

ம.தி.மு.க. விடுதலைபுலிகளுக்கு ஆதரவான கட்சி என விமர்சனம் உள்ளது. நாங்கள் ஈழ மக்களுக்கு என்றும் ஆதரவாக இருப்போம். தமிழ்நாட்டில் வன்முறை இருக்ககூடாது என நினைப்பவர்கள் நாங்கள். இதனால் பல சந்தர்ப்பங்களில் நான் கைது செய்யப்பட்டபோது ம.தி.மு.க. வினர் எந்த வன்முறையிலும் ஈடுபட்டதில்லை. 

மக்கள் நலனுக்காக ம.தி.மு.க. தொடர்ந்து போராடும். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடாமல் புறக்கணித்ததை 75 சதவீதம் மக்கள் வரவேற்று உள்ளனர். அதேநேரத்தில் இந்த தேர்தலில் பணம் மூலம் ஜனநாயகத்தை விலைக்கு வாங்க முடியாது என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர். இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
என்னை வருங்கால முதல் அமைச்சர் என சிலர் வரும்போது வாழ்த்தி கோஷம் போட்டனர். இது என் மீது உள்ள அன்பால், பாசத்தால் கூறுகிறார்கள் என்பதை உணர முடிகிறது. ஆனால் அதே நேரத்தில் புகழ் போதை பள்ளத்தில் தள்ளிவிட்டு விடும் என்பதால் அந்த வார்த்தையை நான் கவனத்தில் கொள்வது இல்லை.

ராமன் ராவணன் இடையே நடந்த யுத்தம் 18 மாதம் நடந்தது. குருஷேத்திர போர் 18 நாட்கள் நடந்தது. அதேபோல் ம.தி.மு.க. 18 ம் ஆண்டுவிழா தொடங்க விழாவை கொண்டாடி வருகிறோம். நேர்மையான, ஊழலற்ற, சுயநலமற்ற அரசியல் நடத்தி தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவோம். இவ்வாறு வைகோ பேசினார்
ஒரு அவதானி: அய்யா உங்களின் தேர்தல் புறக்கணிப்பு புல்லரிக்க வைக்கிறது. இதையே ஒரு நிரந்தர கொள்கையாக வைத்துக்கொள்ளலாம். அடிக்கடி தேவை இல்லாமல் உணர்ச்சி வசப்படும் தாங்கள் வேறு நல்ல துறைகளை தேர்ந்து எடுத்தால் தமிழ் நாட்டுக்கு மிகவும் நல்லது. உணர்ச்சி வசப்பட்டு உசுப்பு ஏத்தி நட்டாற்றில் விடும் கொள்கையை இனியாவது கைவிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

சோர்ந்துள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்த தி.மு.க., திட்டம்

சட்டசபை தேர்தல் தோல்வியில் சோர்வுற்று இருந்த, தி.மு.க.,வினருக்கு, கனிமொழி கைது, கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. "அடுத்து என்ன செய்யப் போகிறோம்' என, யோசிக்க முடியாத அளவுக்கு திண்டாடிப் போய் நிற்கின்றனர்.

தேர்தல் தோல்விக்கு, குடும்ப ஆட்சியும், ஊழலும் தான் காரணம் என, மக்கள், பரவலாகப் பேசத் தொடங்கி விட்டனர். கூட்டணியாக உள்ள காங்கிரஸ், அதைக் குற்றச்சாட்டாக சொல்லி வருகிறது. இதற்கு, என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் தி.மு.க., தொண்டர்கள் விழிக்கின்றனர்.புதிய அரசின் மின்னல் வேக செயல்பாடுகள் கண்டும், அதிர்ந்து போய் உள்ளனர். கட்சித் தலைமை என்ன செய்யப் போகிறதோ என்ற தவிப்பும் அவர்கள் மத்தியில் உள்ளது.கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், தொடர்ந்து அவர்களை கட்சிப் பணியில் ஈடுபடுத்தவும், தி.மு.க., தலைமை திட்டமிட்டு வருகிறது. கட்சியின் மாவட்ட கூட்டங்களை நடத்த பணித்துள்ளது. மாவட்ட கூட்டங்களில், கட்சியின் ஒன்றிய கிளை கூட்டங்களை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இக்கூட்டங்களில், கட்சித் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை, ஜூன் 3ம் தேதி பிரமாண்டமாக கொண்டாட தீர்மானங்கள் நிறைவேற்ற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தீர்மானத்தின் படி, ஒவ்வொரு கிளையிலும், கட்சியின் கொடியை ஏற்றி, கருணாநிதியின் உருவப்படம் பொறித்த பேனர்களை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், அன்னதானம் செய்யவும் ஏற்பாடு செய்யுமாறு கட்சி நிர்வாகிகள் பணிக்கப்பட்டுள்ளனர்.கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை, ஜூன் 3ம் தேதியோடு நிறுத்தி விடாமல், மாதம் முழுவதும் கொண்டாடுவதற்கு ஏதுவாக ஏற்பாடுகளை செய்யுமாறு, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கருணாநிதியின் பிறந்த நாளன்று, கட்சித் தலைவருக்கு வாழ்த்து சொல்ல அறிவாலயத்திற்கு திரண்டு வருமாறும் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தேர்தல் தோல்வி, கனிமொழி கைது ஆகியவற்றிலிருந்து தொண்டர்களை வெளிக்கொண்டு வந்து, உற்சாகம் ஊட்டுவதற்கு கருணாநிதியின் பிறந்தநாளை பயன்படுத்த, தி.மு.க., நிர்வாகிகள் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் கருணாநிதி பங்கேற்கும் பொதுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்கின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவை போக்கும் வகையில், கருணாநிதியின் பிறந்தநாள் உரை இருக்கும் என எதிர்பார்க்கின்றனர். தோல்விக்கான காரணம், கனிமொழி கைது போன்ற விவகாரங்கள் குறித்து கட்சித் தலைவர் விரிவாக பேசுவார் எனவும் கட்சி நிர்வாகிகள் நம்பிக்கையில் உள்ளனர். கருணாநிதியின் உரை, புது தெம்பை ஊட்டி, அடுத்தகட்ட பணிகளுக்கு அழைத்துச் செல்லும் என்பது, தி.மு.க.,வினர் எதிர்பார்ப்பு.தோல்வியில் இருந்து மீள்வதோடு, கட்சியிலிருந்து தொண்டன் வெளியேறிவிடாமல் தக்கவைத்துக் கொள்ளவும், கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை, தி.மு.க., கையில் எடுக்கிறது.

- நமது சிறப்பு நிருபர் -
kunjumani - Chennai ,இந்தியா
2011-05-25 02:46:08 IST Report Abuse
தி.மு.க வினரை ஜே செய்யும் முட்டாள்தனமான காரியங்கள் அனைத்தும் உற்சாகபடுத்தும் , அவர் தினமும் தி.மு.க வினரை உற்சாகப்படுத்திகொண்டுதான் இருக்கிறார் குறிப்பாக அமைச்சர் சாலை விபத்தில் இறந்ததுக்கு சி.பி .சி.ஐ டி விசாரணை போட்டதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் , அப்படி விசாரணை போட்டாதான் இடைதேர்தலில் தி.மு.க வை வில்லன் போல் சித்தரித்து ஜெயிக்க முடியும் என்ற கீழ்த்தரமான அரசியலை மக்கள் ரசிக்கவில்லை
kalaignar piriyan - denver,யூ.எஸ்.ஏ
2011-05-25 01:54:25 IST Report Abuse
கண்ணா வாழ்க்கை ஒரு வட்டம் மாறி தோற்கிறவன் ஜெயிப்பான் ஜெயிக்கிறவன் தோற்பான். வெளில பாக்கறதுக்கு தி மு க தோல்வி அடைஞ்ச மாறி தெரியும் ஆனா போக போக தெரியும் பாரு தோல்வி அடைஞ்சது தி மு க வா இல்லாட்டி உங்கள மாறி மாத்தி ஒட்டு போட்ட மக்களான்னு
Thennavan - Chennai,இந்தியா
2011-05-25 01:25:40 IST Report Abuse
சென்ற வருடம் நடந்த இடைதேர்தலில் டிபோசிசிட் இழந்த ஒரு கட்சி ஆட்சிய பிடிக்கும்பொது இன்றைக்கு தோல்வி அடைந்த அணி நாளை வெற்றி பெரும்...அதற்க்கு எல்லாம் திமுக ஒன்றும் செய்யவேண்டியது இல்லை...அதை ஜெயலலிதா அவர்களே செய்து விடுவார்...ஏற்கனவே எல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டார்.....ஆட்சிக்கு வந்த ஒரே வாரத்தில் மக்கள் வரி பணம் ஆய்ரித்தி எழுனொரு கோடி வினாடிக்க பட்டு உள்ளது.....இவர் ஒவ்வொரு திட்டமாக தடை செய்வதன் முலம் கடந்த ஆட்சியில் நடைபெற்ற எல்லா நல்ல திட்டங்களுக்கும் இவரே விளம்பரம்தேடி தருகிறார்....புதிய சட்டசபைக்கு தடை , சமச்சீர் கல்விக்கு தடை, கலைஞர் காப்பிட்டு திட்ட்டம் பெயர் மாற்றம்(என் இதையும் தடை செய்ய வேன்ய்டியது தானே).......அடுத்து மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தடை.....சென்னை மேம்பாலங்களை பயன்படுத்த தடைவிதிக்கமால் இருந்தால் சரிதான்......இப்பேடி இவர் செய்யும் ஒவ்வொன்றும் கடந்த ஆட்சியில்..... எதோ வெறும் இலவசம் என்று ஏளனம் பேசியவர்களுக்கு என்னன்னா மக்கள் நல பணிகள் நடந்தது என்பதை எடுத்து காட்டும்....

செவ்வாய், 24 மே, 2011

இம்புட்டு வருஷமும் அம்மாதான் கூட்டணி தர்மங்களை சூப்பராகக் காப்பாற்றி வந்தார்.

ரத்து ராணி

மரியம் பிச்சை
எம்.எல்.ஏ. பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள திருச்சியிலிருந்து காரில் கிளம்பிய அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் பலியாகியிருக்கிறார். ஆழ்ந்த அனுதாபங்கள்.
படம்-நன்றி: தினமலர்போன கட்டுரையில் சொன்ன மாதிரி கட்சிக் கொடியை எடுத்து காரில் பறக்க விட்டாலே அது கார் இல்லை, ராக்கெட் என்ற நினைப்பு அனைவருக்கும் வந்து விடுகிறது. கார்களில் கட்சிக் கொடியோ, கட்சி சம்பந்தப்பட்ட ஸ்டிக்கர்களோ இருக்கக்கூடாது என்ற சட்டத்தை உடனடியாகக் கொண்டுவர வேண்டும். அவர்கள் காரில் எப்படி வேண்டுமானாலும் பறக்கட்டும், எக்கேடு கெடட்டும். சாதாரண பொது ஜனங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறார்கள். வேண்டுமானால் ஆளுக்கொரு ஹெலிகாப்டர் வாங்கிக் கொண்டு அதில் ஆளுயரக் கொடியைக் கட்டிக் கொண்டு கடல் மார்க்கமாகப் பயணிக்கட்டுமே. யார் வேண்டாம் என்றது?!O
ஓ. பன்னீர் செல்வத்தின் அண்ணன் மாதிரியான தோற்றத்தில் இருக்கும் புதுவை முதல்வர் ரங்கசாமி ‘அம்மா’வுக்காக சுண்டக் காய்ச்சிய பாண்டிச்சேரி சரக்கு ரெடி செய்து அதையும் கொடுக்காமல் அப்படியே தானே முழுங்கி விட்டார்.
இம்புட்டு வருஷமும் அம்மாதான் கூட்டணி தர்மங்களை சூப்பராகக் காப்பாற்றி வந்தார். அடல் பிஹாரி வாஜ்பாயியிலிருந்து அண்ணன் வைக்கோ வரை பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட அம்மாவிடமே ஒருவர் ஆட்டம் காட்டியிருக்கிறார் என்றால் அவர் எப்படிப் பட்ட சூராதி சூரராக இருக்க வேண்டும்?!
பாண்டிச்சேரியில் (இருக்கிற ஆச்சரியங்கள் பத்தாது என்று) இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன!
தமிழகத்தில் சுழன்றடித்த சூறாவளியின் எஃபெக்டில்தான் ரங்கசாமிக்கு சான்ஸ் அடித்தது என்பது தான் உண்மை. ஜெ.வை அவமானப்படுத்தியதன் மூலம் ரங்கசாமிக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது என்று சொன்னால் சிரிப்பீர்கள். ஆனால் பொறுத்திருந்து பாருங்கள்!O

தலைமைச் செயலக மாற்றத்திற்கு நிறுத்தி நிதானமாக முதல்வர் ஒரு பெரிய விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆனால் நாம் ஏற்கெனவே கேட்ட நூலக நிலைமை குறித்து இது வரை தகவலில்லை! நூல்கள் பத்திரமாக இருந்தால் சரி! [எடைக்குப் போட்டால்கூட ஏழெட்டு லட்சங்களுக்குக் குறையாது.]
O
எதிர்பார்த்தபடியே சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்திருக்கிறது அரசு. ‘தற்போதைய சமச்சீர் கல்வி பாடத்திட்டம் ஒட்டுமொத்த கல்வித் தரத்தை உயர்த்த வழிவகை செய்யாது என்பதால் அதை உயர்த்துவது குறித்து ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது’ என்றும் அரசு அறிவித்துள்ளது. புதிதாக (பழைய) பாடப் புத்தகங்களை அச்சடிக்க வேண்டும் என்பதால் பள்ளிக்கூடங்களை ஜூன் 15-ம் தேதி திறக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பசங்களுக்குக் கொண்டாட்டம்! இன்னும் ஒரு நாள் கழித்து ஜூன் 16-ம் தேதி திறந்தால் அம்மாவின் (சமீபத்திய) ராசிப்படி கூட்டுத் தொகை 7 கிட்டும்!
பாடப்புத்தகங்களில் அரசியல் தலைவர்களின் கருத்துகளைத் திணிப்பது உச்சக்கட்ட அநாகரிகம். தயவு தாட்சண்யமின்றி அது போன்ற எதையும் இப்போதும், எப்போதும் பாடப்புத்தகங்களில் திணிக்காமலிருக்க முதல்வர் வழிவகை செய்ய வேண்டும்.
அரசின் வரிப்பணம் மட்டுமின்றி சமச்சீர் கல்வியை எதிர்பார்த்து நோட்ஸுகள் அடித்து வைத்திருந்த பல தனியார் நிறுவனங்களுக்கும் பலத்த அடி! இந்த நோட்ஸ் சித்தாந்தத்தையே அடியோடு ஒழிக்க வேண்டும். புரியாத அளவில் பாடத் திட்டத்தை வைத்து அதை புரிய வைக்காத அளவிற்கு ஆசிரியர்களை வைத்துக் கொண்டு அதற்கு தனியா(ரா)க நோட்ஸ் வேறு எதற்கு? இதற்குப் பேசாமல் நோட்ஸை மட்டும் பாடப் புத்தகமாக வைத்துப் பாடம் நடத்தி விட்டுப் போகலாமே!
சமச்சீர் கல்வி முறையே அள்ளித் தெளித்த அவசர கதியில் கொண்டு வரப்பட்டது தான்! எல்லாருக்கும் சமமாக எல்லாமே வழங்கி முடித்தாகி விட்டது. கல்வி ஒண்ணு தான் பாக்கி! அடிப்படை சாலை வசதிகளை தமிழகமெங்கும் சமச்சீராக வழங்கியாகி விட்டதா? அடிப்படை மின்சார வசதிகளை தமிழகமெங்கும் சமச்சீராக வழங்கியாகி விட்டதா? அடிப்படை குடிநீர் வசதிகளை தமிழகமெங்கும் சமச்சீராக வழங்கியாகி விட்டதா?
உண்மையிலேயே கல்வியின் மீது அக்கறையிருந்தால் மத்திய அரசின் CBSE பாடத்திட்டத்துக்கு இணையான கல்வியாக சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்திருக்க வேண்டும். செய்தார்களா முந்தைய ஆட்சியினர்?
10 மாடிக் கட்டடத்தில் 5 படி கூட ஏற முடியாதவனை 10 மாடியும் ஏற்றுவதற்கு முற்படுவதற்கு பதிலாக 10 படியையும் ஏற முடிந்தவனை, 5 படிகள் தான் ஏற வேண்டும் என்று சொல்வது அபத்தத்திலும் அபத்தம். இதற்குக் கல்வியாளர்கள் ஒப்புகை அளித்தார்கள் என்று சப்பைக்கட்டு வேறு! ஏசி ரூமில் முந்திரி பக்கோடா கொறித்துக்கொண்டு நீட்டிய இடத்தில் கும்பிட்டுக் கையெழுத்துப் போடும் கல்வியாளர்களால்தான் தமிழ்நாட்டில் கல்வித்தரம் பாதாளத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது. இந்தக் கல்வியாளர்களுக்கெல்லாம் ஒரு பரீட்சை வைத்து யார் யார் நிஜமான கல்வியாளர் என்று கண்டுபிடிக்க ஏதாவது சட்டம் கொண்டுவந்தால்கூடத் தேவலை.
அனைத்து சமூகத்தினருக்கும், அனைத்து பொருளாதாரத் தளங்களிலிருந்து வருவோருக்கும் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஒரே மாதிரி தான் என்று கொண்டு வாருங்கள். வரவேற்கலாம்! அதை விட்டு விட்டு மெட்ரிகுலேஷன் கல்வி அளவிற்கு அரசுப் பள்ளிகளில் இல்லையாம், அதனால்தான் சமச்சீர் கல்வி என்பது கேலிக்குரிய விஷயம்!
ஐந்தாறு வகை ஆப்பிள் பழங்கள் கடையில் கிடைக்கின்றன. ஏழை மக்களால் விலை உயர்ந்த ஆப்பிளை வாங்கிச் சாப்பிட முடியவில்லை. எனவே இனிமேல் ஒரே விலையாக விலை குறைந்த ஆப்பிள்கள் மட்டும் தான் விற்பனை செய்யலாம் என்றால் எப்படி?!
திமுக ஆட்சியின் கொள்கை, கோட்பாடுகளைப் பிடிக்காமல்தான் மக்கள் ஒட்டு மொத்தமாக அவர்களை நிராகரித்தார்கள். எனவே புதிய தலைமைச் செயலகம், சமச்சீர் கல்வி போன்ற அவர்களின் திட்டங்களை அப்படியே செயல்படுத்த வேண்டும் என்பதில்லை. முந்தைய திமுக அரசின் அனைத்துத் திட்டங்களையும் அலசி ஆராய்ந்து அவற்றில் மக்கள் நலனுக்கு உகந்தது என்பதை விருப்பு வெறுப்பின்றி செயல் படுத்த வேண்டும்.
அதே நேரத்தில் கடந்த அரசு செயல்படுத்திய திட்டம் எதையாவது மாற்றினால், ரத்து செய்தால் அந்த அறிவிப்பிலேயே அதற்கான முழு விளக்கத்தையும் கொடுத்தால் மக்கள் மத்தியில் வீணான குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

மணல் குவாரிகளில் மணல் அள்ளத் தாற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் நாடெங்கும் கட்டுமானப் பணிகள் இதனால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. போன முறை ஆட்சியில் இருந்த போது ஜெயலலிதாதான் மணல் குவாரிகளை அரசுடமையாக்கினார். அப்படியும் கூட அளவுக்கு மீறி மணல் அள்ளுதல், அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்துதல் என்று ஏகப்பட்ட குளறுபடிகள். அம்மா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தடை அமுலுக்கு வந்து விட்டது! மணல் குவாரிகள் மீதான அரசின் தெளிவான பார்வையை உடனடியாக அறிவிக்க வேண்டும். தடை விலக்கப்பட வேண்டும்.
O
சென்னை உட்பட பல இடங்களில் கோடை மழை இரண்டு நாட்களுக்கு முன் பொழிந்தது. ‘அம்மா ஆட்சிக்கு வந்தால் மழை நிச்சயம்’ என்று புளகாங்கிதம் அடைந்தார்கள் அடிப்பொடிகள். தொடர்ந்து புளகாங்கிதம் அடைந்து கொண்டேயிருக்க எல்லாம் வல்ல மழை பகவானை இறைஞ்சுவோம்!
O
மாயவரத்தான்

Pranab Mukerji “காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலை உருவாக்கவும் தெரியும்; சிக்கலைத் தீர்க்க வழிகளும் தெரியும்

கனிமொழி, காங்கிரஸ், கருணாநிதி!


காங்கிரஸ் கட்சியுடன் சுமூக உறவு நீடிக்கிறது.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளியே வந்து, திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான உறவில் புயலைக் கிளப்பியபோது கருணாநிதி சொன்ன வார்த்தைகள் இவை. விவகாரம் மெல்ல அடங்கிவிடும் என்றுதான் திமுக தரப்பு நினைத்தது. ஆனால் நிலைமை அத்தனை சுமுகமானதாக இருக்கவில்லை. மேன்மேலும் வலுக்கத் தொடங்கியது.
ஒரு கட்டத்தில் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ. ராசா ராஜினாமா செய்யவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. நாடாளுமன்றம் கொந்தளித்தது. இனி வேறு வழியில்லை என்ற சூழல் வந்தபோது ஆ. ராசா ராஜினாமா செய்தார். பிறகு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதும் அதே வார்த்தைகளைத்தான் திரும்பவும் சொன்னார் கருணாநிதி. சுமூக உறவு.
ஒரு பக்கம், கலைஞர் தொலைக்காட்சிக்குப் பணம் வந்தது தொடர்பாக திமுகவின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்துக்குள் சிபிஐ அதிகாரிகள் நுழைந்து விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர். இன்னொருபக்கம், திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம். தர்மசங்கடத்தின் உச்சத்தில் இருந்தபோதும் கருணாநிதியின் வார்த்தைகளில் மாற்றம் இல்லை. சுமூக உறவு.
கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது அதிக தொகுதிகள் கேட்டு காங்கிரஸ் கட்சி மிரட்டியது; திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிந்தன; இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. காங்கிரஸ் கட்சி பட்ட மரம் அல்ல; பச்சை மரம்! ஒரு இலை உதிர்ந்தால் இரட்டை இலை துளிர்க்கும் என்று வெடித்தார் ப. சிதம்பரம். அப்போதும் கருணாநிதி ஆத்திரப்படவில்லை. சுமூக உறவு.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. அதற்கான முக்கியக் காரணம், காங்கிரஸ் கட்சி தனது சக்திக்கு மீறிய எண்ணிக்கையில் தொகுதிகளை வாங்கிக்கொண்டதும், திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள பல தொகுதிகளை காங்கிரஸ் கட்சி வலுக்கட்டாயமாக வாங்கிக் கொண்டதும்தான் என்பது அரசியல் அரிச்சுவடி தெரிந்த அத்தனை பேருக்கும் தெரிந்த ஒன்று. கருணாநிதியின் மனச்சாட்சி அதை ஒப்புக்கொண்டாலும் அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை. சுமூக உறவு.
எல்லாவற்றுக்கும் சிகரம் வைப்பது போல, ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கருணாநிதியின் மகள் கனிமொழி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மாநில அளவிலும் தேசிய அளவிலும் திமுகவுக்கு பலத்த நெருக்கடி உருவாகியிருக்கும் இந்தச் சூழலிலும் கருணாநிதியின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. சுமுக உறவு.
சுமூக உறவு என்று கருணாநிதி தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருக்க, “காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலை உருவாக்கவும் தெரியும்; சிக்கலைத் தீர்க்க வழிகளும் தெரியும்’ என்று பேசினார் காங்கிரஸ் மூத்த தலைவரான மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி. அதுவும், தொகுதிப்பங்கீட்டுச் சிக்கல் உச்சத்தில் இருந்தபோது. மாநிலக் கட்சிகளை தேசியக் கட்சி எப்படி அணுகும் என்பதற்கு திமுக – காங்கிரஸ் உறவும் அதில் உருவான சிக்கல்களும் பொருத்தமான உதாரணங்கள்.
ஆட்சி பறிபோய்விட்டது; கட்சியின் மீதான நன்மதிப்பு சரிந்துகொண்டிருக்கிறது; தொண்டர்கள் அதிருப்தியில் கிடக்கிறார்கள். இனியும் கருணாநிதியால் சுமூக உறவு என்று சொல்லிக்கொண்டிருக்க முடியாது. காங்கிரஸ் கட்சியுடன் உறவு வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவெடுத்தே தீரவேண்டிய நிர்பந்தம் உருவாகியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடனான உறவு குறித்து கருணாநிதியின் மனத்தில் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. எண்பத்தியேழு வயதில் கருணாநிதிக்கு உருவாகியிருக்கும் இதே நிர்பந்தம்தான் பள்ளி மாணவனாக இருந்தபோதும் ஒருமுறை உருவாகியிருக்கிறது. அதுவும் காங்கிரஸ் உறவு தொடர்பானதுதான்.
மாணவர் சம்மேளனம் என்ற அமைப்பில் கருணாநிதி தீவிரமாக இருந்தார் என்று கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். அதன் உறுப்பினராக இருந்தபோதுதான் மொழிப்போராட்டத்திலும் ஆர்வத்துடன் பங்கேற்றார். அப்போது கருணாநிதியின் மனத்தில் ஒரு சந்தேகம் அல்லது உறுத்தல். சம்மேளனத்தில் காங்கிரஸ்காரர்கள்
அதிகம் இருக்கிறார்கள். ஏற்கெனவே அவர்களுடைய கொள்கையும் நம்முடைய சிந்தனையும் ஒத்துப்போகவில்லை. இந்தித் திணிப்பு கூடவே கூடாது என்று நாம் விடாப்பிடியாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மாணவர் சம்மேளனத்தில் இருக்கும் காங்கிரஸ்காரர்களோ, “தமிழ் வாழ்க! இந்தி வளர்க!’ என்று சொல்கிறார்கள். இது சாத்தியமில்லை. இனியும் காங்கிரஸ்காரர்களுடன் ஒத்துப்போவதில் அர்த்தமில்லை; பலனும் இல்லை. விலகிக்கொள்வதுதான் எதிர்காலத்துக்கு நல்லது என்று முடிவெடுத்தார் கருணாநிதி. விளைவு, தமிழ் மாணவர் மன்றம் உருவானது. தலைமை, கருணாநிதி. இதன்மூலம் காங்கிரஸ்காரர்களிடம் இருந்து தன்னை முற்றிலுமாக விடுவித்துக்கொண்டார் கருணாநிதி.
கிட்டத்தட்ட இதே சமயத்தில்தான் சேலத்தில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்று உருவாகியிருந்தது. கொள்கை, சிந்தனை, நோக்கம், இலக்கு எல்லாம் கருணாநிதி தலைமையிலான மன்றத்துடன் ஒத்திருந்தது. உடனடியாக அந்த மன்றத்தின் நிர்வாகிகளுடன் தொடர்புகொண்டார் கருணாநிதி. விளைவு, தமிழ் மாணவர் மன்றம், தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் ஓர் அங்கமாக இணைந்துகொண்டது.

மும்பை தாக்குதலில் ஐ.எஸ்.ஐ., கூட்டுச்சதி : பயங்கரவாதி ஹெட்லி வாக்குமூலம்

: மும்பை தாக்குதல் சதியில் தொடர்புடைய பயங்கரவாதிகள் டேவிட் கோல்மேன் ஹெட்லி, தகாவூர் ராணா ஆகியோர் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ.,ஆல் கைது செய்யப்பட்டு சிகாகோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை நேற்று சி‌காகோ கோர்ட்டில் தொடங்கியது. வழக்கில் அரசு தரப்பு சாட்சியான ஹெட்லியின் வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஹெட்லி தெரிவித்த பல திடுக் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.,- லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்துக்கு உதவியதாகவும் ஹெட்லி தெரிவித்துள்ளான். மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிக் கொடுத்ததை ஒப்புக் கொண்ட ஹெட்லி தற்போது அதில் ஐ.எஸ்.ஐ.,ன் பங்கையும் அம்பலமாக்கியுள்ளான். மும்பை தாக்குதலுக்கு முன்னர் ஐ.எஸ்.ஐ., மேஜர்கள் இக்பால் மற்றும் சமீரை சந்தித்ததாகவும், இந்தியாவில் தாக்குதல் நடத்த தேர்வு செய்த இடங்கள் குறித்து எடுத்துரைத்ததாகவும் தெரிவித்துள்ளான்.
ஹபீசுடன் சந்திப்பு : மும்பை தாக்குதலுக்கு முளையாக செயல்பட்டவர் என ஹபீஸ் சையத் மீது இந்தியா தொடர்ந்து குற்றஞ் சாட்டி வருகிறது. இந்நிலையில் கோர்ட்டில் வாக்குமூலம் அளித்துள்ள ஹெட்லி, மும்பை தாக்குதலுக்கு முன்னர் லஷ்கர் இயக்கத் தலைவர் ஹபீஸ் சையத்தை சந்தித்ததாகவும், லஷ்கர் இயக்கத்தினரிடம் இருந்து ஆயுதப் பயிற்ச்சி பெற்றதாகவும் ஒப்புக் கொண்டுள்ளான். ஷபீஸ் சையத்தின் பேச்சுகளால் தான் மிகவும் கவரப்பட்டதாகவும், அதன் காரணமாகவே மும்பை தாக்குதலுக்கு உதவியதாகவும் கூறியுள்ளான்.
ஐ.எஸ்.ஐ., உதவி : பாகிஸ்தான் மண்ணில் இருந்து சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கும் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்‌கங்களுக்கு, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., நிதி உதவி, ஆயுதப் பயிற்சி ஆகியனவற்றை அளித்து வருவதாகவும். கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த தாக்குதலுக்கும் ஐ.எஸ்.ஐ., பெரும் அளவில் உதவியதாகவும் ஹெட்லியின் வாக்குமூலம் தெரிவிக்கின்றது.

எம்.ஜி.ஆர்., மருத்துவ காப்பீட்டு திட்டமாக பெயர் மாறுது கலைஞர் காப்பீட்டு திட்டம்

ஆட்சி மாற்றத்தால், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், எம்.ஜி.ஆர்., மருத்துவ காப்பீட்டுத் திட்டமாக பெயர் மாற்றம் செய்யவும், அந்த திட்டத்தை செயல்படுத்தும் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றம் செய்யவும், தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்புகள், இன்னும் சில தினங்களில் வெளியாகும் என, மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த தி.மு.க., ஆட்சியில், கடைசி இரண்டு ஆண்டுகளில், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டம் துவக்கப்பட்ட காலத்தில், தமிழகத்தில் உள்ள, 17 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மட்டுமின்றி முக்கிய நகரங்கள், தாலுகாக்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்கப்பட்டது.திட்டத்தை செயல்படுத்தும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பல்வேறு கெடுபிடிகளை அமல்படுத்தியதால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளில் பலருக்கு, சிகிச்சைக்கான தொகைகளில், குறிப்பிட்ட சதவீதம் வரை பிடித்தம் செய்யப்பட்டது. அதனால், தனியார் மருத்துவமனைகள், இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கிய தொகை போக, மீதி தொகையை நோயாளிகளிடம் இருந்து வசூலிக்கத் துவங்கின. இது, மருத்துவமனைகளின் நிர்வாகத்துக்கும், நோயாளிகளின் உறவினர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக, பல்வேறு தனியார் மருத்துவமனைகள் இத்திட்டத்தில் இருந்து விலகின. அரசின் கொள்கை முடிவு திட்டம் என்பதோடு, தேர்தல் நெருங்கியதால் இத்திட்டத்தில் இருந்து விலகிய தனியார் மருத்துவமனைகளின் விவரங்களை மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் மக்களுக்கு தெளிவு படுத்த வில்லை. இதன் காரணமாக, இத்திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகள் சிகிச்சை பெற முடியால் அவதிப்பட்டனர். அரசு மருத்துவமனைகளில், இத்திட்டத்தில் செய்யப்பட்ட ஆபரேஷன்களுக்கு, டாக்டர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு சேர வேண்டிய ஊக்கத் தொகையும் நிறுத்தி வைக்கப்பட்டதால், அவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.
தமிழக தேர்தலின் போது, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், "மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மேம்படுத்தப்படும்' என தெரிவிக்கப்பட்டது. தற்போது அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, மருத்துவத் துறையில் உள்ள மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முதல் கட்டமாக, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்துக்கு நெருக்கமான ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தை, இத்திட்டத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளனர். அதற்கு மாற்றாக, புதிய இன்சூரன்ஸ் நிறுவனத்தை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், "கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' என்ற இத்திட்டத்தை விரைவில் "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஏழைகள் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்' என, பெயர் மாற்றம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக, குழு அமைக்கப்படுகிறது.இக்குழு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கும் அறிக்கையின் அடிப்படையில், மேம்படுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளதாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Kamal vs Selvaragavan. செல்வராகவன் அதிரடி நீக்கம்: விஸ்வரூபத்தை கமல் ஹாஸனே இயக்குகிறார்!!

கமல் - செல்வராகவன் இடையே கடுமையான கருத்துவேறுபாடு இருப்பது குறித்து ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். தன்னைப் பார்க்க வந்த செல்வராகவனை இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்து சந்திக்காமலே கமல் திருப்பி அனுப்பியதைப் பற்றியும் கூறியிருந்தோம்.

ஆனால் இதை மறுத்து வந்த தயாரிப்பாளர், கமல் - செல்வராகவன் குழு லண்டனில் படப்பிடிப்பு நடத்துவதாக நேற்று கூறியிருந்தாரம. ஆனால் இன்று அந்த செய்தி புஸ்வாணமாகிவிட்டது.

விஸ்வரூபம் படத்துக்காக கமல்-சோனாக்ஷி சின்ஹா லண்டன் போவது மட்டுமே உண்மை. ஆனால் படத்தை இயக்குபவர் செல்வராகவன் அல்ல. கமல்ஹாஸன்!!

டெலி போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை கதை-திரைக்கதை-வசனம்- எழுதி இயக்குகிறார் கமல்ஹாஸன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர்.

செல்வராகவன் தூக்கப்பட்டது ஏன்?

கடந்த பல வாரங்களாகவே இந்தப் படம் தொடர்பாக கமல்-செல்வராகவன் இடையே கடும் பனிப்போர் நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

செல்வராகவன் இப்போது, அவருடைய தம்பி தனுஷ் நடிக்கும் இரண்டாம் உலகம் என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை முடிப்பதற்கு இன்னும் 2 மாதங்கள் ஆகும் என்று செல்வராகவன் உறுதியாக கூறிவிட்டாராம்.

காத்திருக்க முடியாது...

அதுவரை காத்திருக்க முடியாது என கமல் கூறியதை தயாரிப்பாளரும் ஏற்றுக் கொண்டாராம். நேற்று கமல்ஹாசனும் தயாரிப்பாளரும் நேரில் சந்தித்து இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில் புதிய உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.

இதன்படி இயக்குநராக இருந்த செல்வராகவன் தூக்கப்பட்டார். ஜுன் முதல் வாரத்திலிருந்து கமல்ஹாஸன் இயக்கத்தில் இந்தப் படம் ஆரம்பமாகிறது.

லண்டனில் படப்பிடிப்பு

படப்பிடிப்பு லண்டன், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. 'தசாவதாரம்' படத்தை விட, பத்து மடங்கு பிரமாண்டமான முறையில், 'விஸ்வரூபம்' உருவாகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில், ரூ.150 கோடி செலவில் இந்த படம் தயாராகிறது. 'ஹாலிவுட்'டின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், படத்தில் பணிபுரிகிறார்கள்.

சோனாக்ஷி சின்ஹா

இளமையான புதிய தோற்றத்தில் கமல்ஹாசன் இந்த படத்தில் தோன்றுவார். அவருடைய தோற்றத்தை 'ஹாலிவுட்' தொழில்நுட்ப கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர். படத்தின் உடையலங்காரத்தை நடிகை கவுதமி கவனிக்கிறார்.

கதாநாயகியாக, பிரபல இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். சங்கர் எசான் லாய் இசையமைக்கிறார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், ரெட் காமிரா மூலம் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

கமல்ஹாசனின் பிறந்தநாளான, வரும் நவம்பர் 7-ம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். ஹே ராம், விருமாண்டிக்குப் பிறகு கமல் நேரடி இயக்குநராகப் பணியாற்றும் மூன்றாவது படம் இது.
 
English summary
Kamal turned director for his yet to be launched magnum opus Viswaroopam. Initially the film has to be directed by Selvaragavan. But due to some differences, the producer sacked Selvan and rquested Kamal to direct the Rs 150 cr budget film. Now Kamal will be directing the film in addition to handling the story, screenplay, dialogue and lyrics.

சாய்பாபா நினைவாலயப் பணிகள் மே 27-ல் ஆரம்பம்!

புட்டபர்த்தி: பல கோடிப் பேரின் வணங்குதலுக்குரிய ஆன்மீக குருவாகத் திகழ்ந்த ஸ்ரீசத்ய சாய்பாபாவுக்கு புட்டபர்த்தியில் பிரமாண்ட நினைவாலயம் எழுப்பப் படுகிறது. இதற்கான பணிகள் வரும் 27-ம் தேதி தொடங்கப்படுகின்றன.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஆசிரமம் அமைத்து ஆன்மீக சமூகப் பணியில் ஈடுபட்டு வந்த சத்யசாய்பாபா கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அவரது உடல் சாய்பாபா ஆசிரமத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் பிரமாண்டமான நினைவில்லம் அமைக்க சத்யசாய் அறக்கட்டளை உறுப்பினர்கள் முடிவு செய்தனர்.

இதுபற்றி புட்டபர்த்தியில் சத்யசாய் அறக்கட்டளை உறுப்பினரும் பாபாவின் உறவினருமான ரத்னாகர் நிருபர்களிடம் கூறியதாவது:

"சத்யசாய் பாபாவுக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் சாய்பாபாவுக்கு பிரமாண்டமான நினைவாலயம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று சாய்பாபாவுக்கு நினைவாலயம் அமைக்கும் பணி தொடங்குகிறது.

வருகிற 27-ந் தேதி நினைவாலயம் கட்டும் பணி தொடங்கப்படுகிறது. சமாதியின் முன்புறம் பாதபீடம் வைக்கப்படும். இப்பணியை 6 வாரத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அதுவரை பக்தர்கள் யாரும் சமாதி கட்டும் இடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் ஆசிரமத்தில் வழக்கமாக நடைபெறும் சாய்பஜன்கள் பாடப்படும். வேதங்கள் வாசிக்கப்படும்.

ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை சிறந்த முறையில் செய்து கொடுக்கப்படும். புட்டபர்த்தி நகரம் உலகின் சிறந்த புனித தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
 

English summary
Sri Sathya Sai Baba trust will start the memorial construction work on May 27th at Sai Kulvanth Hall where Baba's body cremated last month.

ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!


சென்னை: ரஜினியின் உடல் நிலை நன்கு முன்னேற் வருகிறது. அவருக்கான சிகிச்சை குறித்து இதுவரை வீடியோ கான்பரன்சிங் முறையில் அமெரிக்காவிலிருந்து ஆலோசனைகள் கூறி வந்த டாக்டர்கள் குழு, நேற்று சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கே வந்தது.

ரஜினியின் உடல்நிலை பற்றி நேரில் ஆய்வு செய்து, தேவைப்படும் சிகிச்சைகளைச் செய்ய இவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தான் நலமாக உள்ளதை ரசிகர்களுக்குத் தெரிவிக்கவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தோன்றி பேசும் வீடியோ, விரைவில் வெளிவர உள்ளது.

மூச்சுக்குழாய் தொற்று மற்றும் குடல் நோய் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரஜினி சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அவருடைய உடல்நிலையை டாக்டர்கள் முழுமையாக பரிசோதனை செய்து, நுரையீரலில் இருந்த நீர்க்கோர்ப்பை அகற்றினார்கள். சிறுநீரகத்திலும் பாதிப்பு இருந்ததால், அவருக்கு `டயாலிசிஸ்' செய்யப்பட்டது.

இதற்காக, கடந்த 18-ந் தேதி நள்ளிரவில் தனி வார்டில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதனால் ரஜினி பற்றி மோசமான வதந்திகளைப் பரப்பினர் விஷமிகள். ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களிலிருந்து ரஜினி ரசிகர்கள் போரூர் மருத்துவமனை எதிரில் திரண்டனர்.

தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள், கோவில்களில் விசேஷ பூஜைகளும், பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பல ரசிகர்கள் கோவிலில் அங்கபிரதட்சணம் செய்தார்கள். அக்கினி குண்டம் வளர்த்து தீ மிதித்தார்கள்.

கூட்டுப் பிரார்த்தனை

நேற்று சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் கோவிலில், ரஜினிகாந்த் பூரண குணம் அடைய வேண்டி, அவருடைய ரசிகர்கள் விசேஷ பிரார்த்தனை நடத்தி, 500 பேர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி திரைப்பட இயக்குனர்கள் 500 பேர்களும், உதவி இயக்குனர்கள் 1000 பேரும் சென்னையில் நேற்று கூட்டு பிரார்த்தனை நடத்தினார்கள். இந்த கூட்டு பிரார்த்தனைக்கு இயக்குநர் பாரதிராஜா தலைமை தாங்கினார். இயக்குநர்கள் பாலுமகேந்திரா, எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.கே.செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

ரஜினிகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மீண்டும் வார்டுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அமெரிக்க டாக்டர்கள் வருகை

இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அமெரிக்காவில் இருந்து 4 டாக்டர்கள் அடங்கிய குழு, நேற்று சென்னை வந்தார்கள். விமான நிலையத்தில் இருந்து அவர்கள் நேராக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார்கள். ரஜினிகாந்த் உடல்நிலை பற்றிய மருத்துவ அறிக்கைகள், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய குறிப்புகளை பார்த்தார்கள்.

அமெரிக்க டாக்டர்கள் சென்னையில் 3 நாட்கள் தங்கியிருந்து, ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். அதில் ஏற்படும் முன்னேற்றத்தை பார்த்த பிறகே அவர்கள் அமெரிக்கா திரும்ப இருக்கிறார்கள்.

ரசிகர்களுக்காக வெளிவருகிறது 'ரஜினி வீடியோ'!

இதற்கிடையில், ரஜினிகாந்த் பற்றி அடிக்கடி வதந்திகள் பரவுவதால், அதை தவிர்க்கவும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் ரஜினியே தோன்றிப் பேசும் வீடியோ படத்தை வெளியிட அவர் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இன்னும் மூன்று நாட்களுக்குள் அந்த வீடியோ வெளியாகும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

English summary
A team of medical experts arrived Chennai to study the health condition of Rajini and give necessary treatment to him. Meanwhile, to avoid rumours, Rajini family arranged for a video shoot in which Rajini himself appears and speaks with the fans.

புலிகளின் தலைவர்களை மேற்குலக நாடொன்று காப்பாற்ற முயன்றது: கே.பி

2009ம் ஆண்டு மே மாதம் 16, 17ஆம் திகதிகளில் அல்லது 15ஆம் திகதியாகவும் இருக்கலாம் அவர்கள் (புலிகளின் தலைவர்கள்) நாட்டைவிட்டு வெளியேறத் தயாராக இருந்தால் தாங்கள் (ஐ.நா. மற்றும் மேற்குலக நாடொன்று) கப்பல் ஒன்றை அனுப்பி வைப்பதாகவும் எங்காவது போகுமாறும் கூறினார்கள் என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதத் தரகரும் பின்னர் தன்னைத் தலைவர் என்று அறிவித்துக் கொண்டவருமான குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இந்தியத் பத்திரிகை ஒன்றுக்கு இந்த மாத ஆரம்பத்தில் வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னைக் கொன்றுவிட்ட பின்னர்தான் இலங்கையில் இனியொரு கிளர்ச்சியை புலம்பெயர் தமிழர்களால் ஏற்படுத்த முடியும் என்று அவர் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்

அவரது பேட்டியில் தெரிவிக்கப்பட்ட சில விடயங்கள் வருமாறு:

கே: இலங்கைப் படையினர் மீது போர்க் குற்றச் சாட்டுக்களைச் சுமத்தும் ஐ.நா. அறிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ப: நாம் புதிய சகாப்தம் ஒன்றின் ஆரம்பத்தில் இருக்கிறோம். நடந்தெல்லாம் நடந்ததுதான். ஐ.நா. அறிக்கையின்படி இரு தரப்புகளுமே தவறிழைத்துள்ளன. இந்த அறிக்கை எந்தவொரு நல்லிணக்கத்துக்கும் உதவப்போவதில்லை. இது ஒரு இடைஞ்சல்தான். யாருக்கும் இந்த அறிக்கையால் பயனில்லை. அது ஒரு தகவல் அறியும் நடவடிக்கை; ஒரு அறிக்கை, அவ்வளவுதான். இந்த அறிக்கையுடன் வன்னிக்குப் போனால் ஆயிரம் அல்லது லட்சம் மக்கள் இதனால் பயனடைவார்களாக இருந்தால்... அப்போது அது வேறு கதையாக இருக்கும். ஆனால் இந்த அறிக்கையால் எவருமே நன்மையடையப் போவதில்லை என்பதுதான் உண்மை. முழு நாடும் இந்த அறிக்கைக்கு எதிராக இருக்கிறது. கள யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். முடிந்தது முடிந்ததுதான். போரின் முதல் அர்த்தமே சாவுதான். போரில் எது முதலில் சாகிறது? உண்மைதான். எல்லா இடத்திலுமே போருக்கு ஒரே பொருள்தான். நல்ல போர் கெட்ட போர் என்று ஒன்றுமில்லை. போர் எப்போதும் எங்கேயும் போர்தான். இங்கே வெற்றி பெறுவதற்காக இரு தரப்புகளும் முடிந்தளவுக்கு முயற்சித்தன. நடக்கிற எல்லாப் போர்கள் தொடர்பிலும் ஐ.நா. அறிக்கை வேண்டும் என்றால் எங்கு போய் முடியும்?போர் முடிந்து விட்டதாகவே கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நான் உணர்கிறேன். இதுதான் மிக முக்கியமான புள்ளி. இந்தப் போரில் அரசுதான் வெற்றியாளர்; புலிகள் தோல்வியாளர்கள். ஆனால் தோற்றவர்களின் பக்கம் இன்னும் கொஞ்சம் பேர் மிச்சம் இருக்கிறார்கள். இப்போதும் அவர்கள் இங்கேதான் வாழ்கிறார்கள், நான் உட்பட. எந்தவொரு போரிலோ தாக்குதலிலோ பங்கெடுக்கவில்லை என்றாலும் நானும்கூட ஒரு விடுதலைப் புலி உறுப்பினன்தான். இந்தப் போரால் யாருக்கு என்ன பயன்? ஒருத்தருக்கும் கிடையாது. மக்களுக்கு வேண்டியதெல்லாம் உணவும் உடுப்புகளும்தான். தங்கள் வாழ்வை அவர்கள் மீளக்கடியெழுப்பியாக வேண்டும். ஐ.நா. அறிக்கை ஒரு தகவல் அறியும் நடவடிக்கை; அது ஒரு அறிக்கை. ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? கே: ஓ...! அப்படியென்றால்... அடிப்படையில் தமிழர்களுக்கு கல்வி, அபிவிருத்தி, சுகாதாரம் இவைதான் வேண்டும் என்கிறீர்கள்... இப்போது அவர்கள் வேண்டுவதெல்லாம் இவைதான் என்கிறீர்களா? ப: அட்சரசுத்தமாக அதுதான். கடந்த 2 வருடங்களாக போர் ஓய்ந்து விட்டது. ஆனால் மக்கள் தொடர்ந்து துன்பப்படுகிறார்கள். சரி! எங்களுக்கு பல கசப்பான கடந்த கால அனுபவங்கள் இருக்கின்றனதான். முன்னர் நடந்த பேச்சுக்கள் தோல்விதான். வரலாற்றில் பல விடயங்கள் நடைபெற்றுள்ளனதான். ஆனால் எப்போதுமே முடிந்ததைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க முடியாது. வாழ்க்கையில் சில சமயங்களில் நல்லதும் நடக்கும் கெட்டதும் நடக்கும். நாங்கள் அதனை எதிர்கொண்டுதானாகவேண்டும். இரு தரப்புக்களும் ஒரு தீர்வை எட்ட முடியும் என்ற எதிர்பார்ப்புடன் எல்லாவற்றையும் நாங்கள் எதிர்கொண்டுதானாக வேண்டும். சேர்ந்து வாழ்வதற்கான (இரு இனங்களும்) வழிவகைகளைக் கண்டறிய வேண்டும். நீங்கள் என்ன சொன்னீர்களோ அவற்றைத்தான் உண்மையில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு உணவு தேவை, அவர்களுக்கு வேலை தேவை, அவர்களுக்கு உடுப்புகள் தேவை, அவர்களது குழந்தைகளுக்கு பால் தேவை. அவர்கள் அடிப்படைத் தேவைகளைத்தான் கேட்கிறார்கள். எனவே இவற்றைத்தான் அனைத்துலக சமூகத்திடமும் புலம்பெயர் தமிழர்களிடமும் நானும் கேட்கிறேன். இதன் பின்னர் புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் பற்றியும் அங்கு யார் எல்லாம் இன்னும் தீவிரத்தனத்தோடு செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் விலாவரியாக விளக்குகிறார் கே.பி. தொடர்ந்து... கே: அப்படியானல், மீண்டும் ஆயுத இயக்கத்தை புலம்பெயர் தமிழர்கள் உருவாக்க முயன்றார் அதனை நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள் என்கிறீர்கள்... அப்படித்தானே? ப: நிச்சயமாக! அவர்கள் அப்படிச் செய்ய முயன்றால், இங்கு பிரச்சினைகளை உருவாக்க முயன்றால் அவர்களை நான் விடமாட்டேன். அப்படிச் செய்வதாயின் முதலில் அவர்கள் என்னைக் கொல்ல வேண்டும். கே: போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளின் உயர் தலைமையைக் காப்பாற்றி மீட்கும் நடவடிக்கை ஒன்றுக்கு ஐரோப்பிய நாடுகள் சில முயன்றன என்பது உண்மை இல்லையா? ப: உண்மையிலேயே அப்படித்தான். 2009 ஜனவரியில் போரை நிறுத்துவதற்கு நாம் கடுமையாக முயன்றுகொண்டிருந்தோம். போரை நிறுத்த இரவு பகலாக நான் கடும் பாடுபட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், அதற்கு ஆதரவு கிடைக்கவில்லை; குறிப்பாக எமது தரப்பிடம் இருந்து கடைசிக் கணம் வரை ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் நான் எதிர்பார்ப்புக்களை இழந்து விட்டேன். கடைசித் தருணத்தில், மே மாதம் 16, 17ஆம் திகதிகளில் அல்லது 15ஆம் திகதியாகவும் இருக்கலாம்... அவர்கள் (புலிகளின் தலைவர்கள்) நாட்டைவிட்டு வெளியேறத் தயாராக இருந்தால் தாங்கள் (ஐ.நா. மற்றும் மேற்குலக நாடொன்று) கப்பல் ஒன்றை அனுப்பி வைப்பதாகவும் எங்காவது போகுமாறும் கூறினார்கள். கே: எந்த நாடுகள்? ப: சரியாகச் சொன்னால் ஐ.நாவும் மற்றொரு நாடும். அந்த நாட்டின் பெயரைக் சொல்வதற்கு நான் விரும்பவில்லை. ஆனால் அது ஒரு மேற்குலக நாடொன்று. கே: மீட்டுச் செல்ல அவர்கள் முயற்சித்தார்களா? ப: ஆம்! மீட்டுச் செல்லத்தான் அவர்கள் முயன்றார்கள். ஆனால் எல்லாம் காலம் கடந்திருந்தது. 2009 ஜனவரியில் இருந்து எல்லா விடயங்களிலும் எல்லா வழிகளிலும் நாம் ஒவ்வொரு தருணத்திலும் தாமதித்துக் கொண்டிருந்தோம் என்றே நான் நினைக்கிறேன்.

ராஜீவ் காந்தி கொலைக்கு மன்னிப்பு கோறுகிறார்: கேபி

தமிழீழ விடுதலைப் புலிகள், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தியை படுகொலை செய்ததற்காக அரச தடுப்பில் உள்ள விடுதலைப்புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான முன்னாள் செயலாளர் குமரன் பத்மநாதன் இந்தியாவிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

ஐபிஎன் தொலைக்காட்சிக்கு நேற்றிரவு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தியின் படுகொலை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த படுகொலை பிரபாகரனும் பொட்டுஅம்மானும் மிகவும் நன்றாகத் திட்டமிட்டு நடத்தியதென்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை தான்.

இந்திய மக்களுக்கு குறிப்பாக ராஜிவ்காந்தி குடும்பத்தினருக்கு நான் சொல்ல விரும்புவது, பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்புக் கோருகிறேன்.

தயவுசெய்து எங்களை மன்னித்து விடுங்கள். உங்களை நாம் வேண்டிக் கொள்கிறோம். இதற்காக எல்லோரும் மன்னியுங்கள். ராஜிவ்காந்தியின் மகன் மற்றும் மகளின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்கிறோம்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் ஏற்கனவே அதிக விலை கொடுத்து விட்டார்கள். இனிமேல் எதையும் இழக்கக் கூடாது. தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்றும் குமரன் பத்மநாதன் அந்த செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளார்

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்: புலிகளின் தாக்குதலை பிரதிபலிக்கிறது

இஸ்லாமாபாத், மே.23: பாகிஸ்தானின் பிஎன்எஸ் மெஹ்ரான் கடற்படைத் தளத்தில் தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 2 ரோந்து ஹெலிகாப்டர்களை அழித்தனர். இது விடுதலைப்புலிகள் இலங்கை ராணுவ முகாம்களில் நடத்திய 2 தாக்குதல்களை பிரதிபலிப்பதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
2001 ஜூலை 24-ம் தேதி கொழும்புவின் காட்டுநாயக ராணுவ தளத்தில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையான கறுப்புப் புலிகள் பிரிவைச் சேர்ந்த கமாண்டோக்கள் 14 பேர் தாக்குதல் நடத்தினர். இது இலங்கை ராணுவத்துக்கு எதிரான மிகப்பெரிய கொரில்லா தாக்குதலாக கருதப்படுகிறது. அந்த ராணுவ தளத்தில் தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகள் 2 ஏர்பஸ் உள்ளிட்ட 10 விமானங்களை முழுவதுமாக தாக்கி அழித்தனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை சேதப்படுத்தினர்.
அக்டோபர் 2007-ல் அனுராதபுர ராணுவ தளத்தில் 21 கறுப்புப் புலிகள் தாக்குதல் நடத்தி ஹெலிகாப்டர்கள், ரோந்து விமானங்கள் உள்ளிட்ட 10 விமானங்களை முழுவதுமாக அழித்தனர். மேலும் 10 விமானங்களை சேதப்படுத்தினர்.
இந்தத் தாக்குதல்கள் ஒரு குறிப்பிட்ட வழிமுறையில் நடத்தப்படுகின்றன. தற்கொலைப் படையைச் சேர்ந்த 12-க்கும் மேற்பட்டோர் இந்தத் தாக்குதல்களில் பயன்படுத்தப்படுகின்றனர். வெவ்வேறு திசைகளில் இருந்து ராணுவ முகாம்களுக்குள் புகுந்து அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். ராக்கெட் மூலம் ஏவப்படும் எறிகுண்டுகள் மற்றும் வெடிக்கவைக்கும் கருவிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களை பயன்படுத்தி விமானங்களை தாக்குகின்றனர். இதுபோன்ற தாக்குதல்களில் விமானங்களே முக்கிய இலக்காக இருப்பதால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். (மும்பை தாக்குதல் சம்பவம் வேறு. அந்த தாக்குதலில் ஏகே 47 துப்பாக்கிகளையும், கையெறி குண்டுகளையும் பயங்கரவாதிகள் பயன்படுத்தினர். அவர்களின் முக்கிய நோக்கம் பொதுமக்களின் உயிருக்கு சேதம் விளைவிப்பதாக இருந்தது.)
2001-ல் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் இலங்கையின் பொருளாதாரத்தையும், அதன் ராணுவ பலத்தையும் பாதிக்கச் செய்வதற்காக நடத்தப்பட்டது.
2007-ல் நடத்திய தாக்குதல் விடுதலைப் புலிகளை நோக்கி முன்னேறும் ராணுவ பலத்தை குறைப்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டது.
கராச்சி சம்பவத்தில் அமெரிக்கா வழங்கிய 8 பி3சி ஓரியன் கடலோர ரோந்து மற்றும் தாக்குதல் விமானங்கள் தாக்குதல் இலக்காக இருந்துள்ளதாக கருதப்படுகிறது.
அமெரிக்கப் படைகளால் பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக தாக்குதல் நடைபெறலாம் என்பதால் அனைத்து பாகிஸ்தான் பாதுகாப்பு தளங்களும் உஷாராக இருந்தநிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.