மின்னம்பலம் -Mathi : திமுக கூட்டணியில் தங்களுக்கு 30 தொகுதிகள்தான் வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது.
காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் என பைனல் செய்து நேற்று இரவு ப.சிதம்பரத்திடம் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதனையே ப.சிதம்பரமும் டெல்லிக்கு தெரிவித்தார்.
இதனையடுத்து இன்று இறுதி கட்டப் பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் குழு வரும் என திமுக காத்திருக்கிறது. இதுவரை காங்கிரஸ் குழு பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.
இது பற்றி விசாரித்த போது, ”திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 30 தொகுதிகள்தான் வேண்டும் என்பதில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார். ஆனால் ஸ்டாலின் 28 தொகுதிகள்தான் தர முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால் பேச்சுவார்த்தையில் மீண்டும் இழுபறி ஏற்பட்டுள்ளது” என்கின்றனர்
புதன், 4 மார்ச், 2026
ஸ்டாலின் 28! ராகுல் 30! தொடரும் திமுக- காங்கிரஸ் இழுபறி!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக