tamil.oneindia.com -Vigneshkumar : தெஹ்ரான்: ஈரானை குறிவைத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் மிகத் தீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
இதற்கிடையே கமேனியின் மகள், மருமகன், பேரக்குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துவிட்டதை ஈரானின் அரசு ஊடகமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
ஈரானை சுற்றிலும் கடந்த சில வாரங்களாகவே அமெரிக்கா தனது படைகளைக் குவித்து வந்தது. கடந்த வாரமே ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தும் எனச் சொல்லப்பட்டது.
இருப்பினும், சில காரணங்களால் கடந்த வாரம் தாக்குதல் நடத்தப்படவில்லை.
இதற்கிடையே இந்த வாரம் திட்டமிட்டபடி தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானை சுற்றி அமெரிக்கா தீவிர தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய ராணுவத் தாக்குதல்களில், ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் மகளும் பேரக்குழந்தையும் உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 86 வயதான அந்த கமேனியின் மருமகனும், மருமகளும் தாக்குதல்களில் கொல்லப்பட்டதை ஈரான் ஊடகங்கள் உறுதிப்படுத்தின. எனினும், கமேனியின் நிலை குறித்து ஈரான் ஊடகங்கள் எந்தவொரு தகவலையும் பகிரவில்லை.
முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியலில் பதிவிட்டதில், கமேனி கொல்லப்பட்டதை அறிவித்தார். அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களில் கமேனி கொல்லப்பட்டதாகவும் ஈரானியர்களுக்கு தங்கள் நாட்டின் கட்டுப்பாட்டை மீட்க இதுவரை மிக சிறந்த வாய்ப்பு என்று அவர் கூறினார். வரலாற்றில் மிகவும் கொடூரமானவர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார் என்று குறிப்பிட்ட டிரம்ப், இது ஈரான் மக்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் நீதி என்றார்.
டிரம்புக்கு முன்னதாகவே, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதாவது கமேனி உயிருடன் இல்லை என்பதற்கான பல அறிகுறிகள் உள்ளன என அறிவித்தார். இருப்பினும், அதை அவர் திட்டவட்டமாக உறுதிப்படுத்தவில்லை. அதேநேரம் கமேனியின் வளாகம் அழிக்கப்பட்டுவிட்டது என்று மட்டும் அவர் சொன்னார். இந்தச் சூழலில் தான் கமேனி அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இருப்பினும், முதலில் கமேனி உயிரிழப்பை ஈரான் மறுத்தது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கற்பனையில் உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் ஈரான் தெரிவித்தது. மேலும், கமேனி உயிரிழப்பு என்ற செய்தியையும் அது மறுத்தது. இருப்பினும், டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு ஈரான் தரப்பில் இருந்து இதுவரை பதில் இல்லை.
அதேநேரம் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் மகள், பேரக்குழந்தை, மருமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கொல்லப்பட்டதை ஈரான் ஊடகங்கள் உறுதி செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக