சனி, 7 மார்ச், 2026

பல்லாவரத்தில் வடமாநில சிறுமி கல்குட்டையில் சடலமாக மீட்பு... விசாரணையில் தெரியவந்தது என்ன..

  news18-tamil :  காணாமல்போன வடமாநில சிறுமி மர்மமான முறையில் கற்குட்டையில் அழுகிய நிலையில், சடலமாக மிதந்த சம்பவம் பல்லாவரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாவரம் அருகே காணாமல்போன வடமாநில சிறுமி, அழுகிய நிலையில் கற்குட்டையில் சடலமாக மிதந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறுமிக்கு நேர்ந்தது என்ன? போலீஸ் விசாரணையில் தெரியவந்தது என்ன?
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் 41 வயதான புள்ளுதாஸ். இவரது மனைவி ரிங்கு தேவி. இந்த தம்பதி கடந்த 15 வருடங்களாக பம்மல், நாகல்கேணி ஆதாம் நகர் பகுதியில் 15 வயது மகள் அனிசா உள்ளிட்ட நான்கு பிள்ளைகளுடன் வசித்து வருகின்றனர்.

புள்ளுதாஸ் அதே பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். அவரது மனைவி ரிங்குதேவி அருகில் உள்ள லெதர் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். மகள் அனிசா பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
advertisement
இந்நிலையில், கடந்த மூன்றாம் தேதி கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். மகள் அனிசா வீட்டில் இல்லாததால் பல்வேறு இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால், எங்கு தேடியும் அனிசா கிடைக்காத நிலையில், பயந்துபோன பெற்றோர் மறுநாள் பம்மல், சங்கர் நகர் காவல் நிலையத்தில் மகள் காணவில்லை என்று புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, காணாமல்போன சிறுமியை வலைவீசி தேடி வந்தனர்.

கருத்துகள் இல்லை: