hirunews.lk : ஈரானின் மினாப் (Minab) பகுதியில் அமைந்துள்ள மகளிர் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் மெஹ்ர் (Mehr) செய்தி நிறுவனம், மினாப் வழக்கு தொடுநரை மேற்கோள்காட்டி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
ஆரம்பத்தில் 53 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.
குறித்த பாடசாலை மீது இன்று மூன்று ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஈரானின் மினாப் பகுதியில் நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதல் அந்தப் பிராந்தியத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பார்க்கவும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக