tamil.oneindia.com - Nantha Kumar R : டெல்லி: ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து போரை தொடங்கி உள்ளது. இதற்கு பதிலடியாக ஈரான், அமெரிக்காவின் நட்பு நாடுகளை குறிவைத்து தாக்கி வருகிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ரஸ், கத்தார், பஹ்ரைன், ஓமன், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்கள் சிக்கலில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் மத்திய கிழக்கில் இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தீவிரமாக போர் புரிந்து வருகின்றன. ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிகொல்லப்பட்டுள்ளார். மேலும் தொடர்ந்து போர் தீவிரமாகி நடந்து வருகிறது. நாளுக்கு நாள் போரின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஏனென்றால் ஈரானும் பதிலடி தாக்குதலை தொடங்கி உள்ளது.
தன்னை தாக்கும் இஸ்ரேல் மட்டுமின்றி டிரம்பை பழிவாங்கும் வகையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவதளம், கடற்படை தளம், விமானதளம் இருக்கும் நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. சவுதிஅரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஓமன் உள்பட பல நாடுகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் அட்டாக் நடத்தி வருகிறது.
இந்தியாவின் நிலைப்பாடு
தற்போது போர், மோதல் நடக்கும் நாடுகளில் நம் நாட்டை சேர்ந்தவர்கள் ஏராளமாக பணியாற்றி வருகின்றனர். இதனால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடந்து வரும் தாக்குதல்களை நம் நாடு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதுமட்டுமின்றி போர் நடவடிக்கையை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
மோடி அவசர ஆலோசனை
இதையடுத்து தான் நேற்று முன்தினம் மதுரை பயணத்தை முடித்து டெல்லி சென்ற பிரதமர் மோடி பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவை கூட்டினார். இந்த குழு தான் நாட்டின் உச்சபட்ச பாதுகாப்பு சார்ந்து விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டது. இதில் மத்திய
Recommended For You
ஈரானை தாக்க சொன்னதே சவுதி தான்.. டிரம்புக்கு, பட்டத்து இளவரசர் கொடுத்த அழுத்தம் – ஷாக் தகவல்
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இந்திய போர்க்கப்பல்கள்
இந்த கூட்டத்தில் மத்திய கிழக்கில் நடக்கும் போர், மோதல் பற்றி விவாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இந்தியாவுக்கு ஏற்படும் தாக்கம், அதனை சமாளிப்பது பற்றியும், அரபு நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. அதிகாரிகள் இதுபற்றி முழுமையாக எடுத்துரைத்தனர். இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. போருக்கு நடுவே மத்திய கிழக்கில் இந்திய போர்க்கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டு தகவல் வெளியாகி உள்ளது.
பின்னணி என்ன?
இதுபற்றி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ''சங்கல்ப் நடவடிக்கையின் கீழ் இந்திய கடற்படையின் 2 கப்பல்கள் (ஒரு போர்க்கப்பல், ஒரு டெஸ்ட்ராயர் கப்பல்) ஏற்கெனவே ஏடன் மற்றும் ஓமன் வளைகுடாக்களில் உள்ளது. இந்த கப்பல்கள் கடற்கொள்ளையர் விரட்டியடிப்பது மற்றும் வணிக கப்பல்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தேவைப்பட்டால் இந்த கப்பல்கள் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும். இத்தகைய பணிகளில் கடற்படைக்கு முன் அனுபவம் உள்ளது'' என்றார்.
அதேபோல் ஐஎன்எஸ் சூரத் பஹ்ரைன் பிராந்தியத்தில் கடற்படை சார்ந்த பணிகளை மேற்கொண்டுள்ளது. தற்போது பஹ்ரைன் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் விரைவில் ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலும் நிவாரணம் மற்றும் மீட்பு பணிக்கு பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இஸ்ரேல், ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட பல நாடுகளில் இந்தியர்கள் ஏராளமாக பணியாற்றி வருகின்றனர்.
மக்களை மீட்கவும்...
தற்போதைய போர் சூழலால் விமான போக்குவரத்து பல இடங்களில் தடைப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் விமானங்களில் நாடு திரும்ப முடியாத நிலை உள்ளதுது. இதற்கிடையே தான் இந்தியர்களை போர்க்கப்பல்கள் மூலம் மீட்கப்படுவது பற்றி மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக பல்வேறு நெருக்கடிகளின்போது பொதுமக்களை பத்திரமாக மீட்டது, நிவாரண பொருட்களை வழங்கியது உள்ளிட்ட பணிகளில் இதற்கு முன்பு நம்முடைய கடற்படை கப்பல்கள வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் சொன்ன தகவல்
இதுபற்றி மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி முக்கிய விஷயத்தை கூறினார். இபற்றி அவர், ''ஈரான், இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்திய மக்களை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய அரசு முழுமையாக தயாராக உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்து.
உக்ரைனில் போர் தொடங்கியபோது அங்கிருந்து இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். அதேபோல் எங்கு இருந்தாலும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு மத்திய அருசு முன்னுரிமை கொடுக்கும். தற்போதைய சூழலில் போர் நடப்பதால் விமான பயணம் ஆபத்து. இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நிபுணர்களின் அறிவுரை பெறப்பட்டு வருகிறது'' என்றார். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் இந்தியர்களை போர்க்கப்பல் மூலமாக மத்திய அரசு மீட்க உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக