:Arivazhagan T - news18-tamil : திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத நிலையில், காங்கிரஸ் வேறு வழிகளை ஆராய்வதாக சொல்லப்படுகிறது.
iதிமுக கூட்டணியில் காங்கிரஸ் 40 முதல் 35 தொகுதிகளை கேட்ட நிலையில், திமுக 25 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக சொன்னதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் டெல்லியில் மேற்கொண்ட ஆலோசனையில் கூட்டணியில் இருந்து வெளியேற திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
குறிப்பாக திமுக, தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
அதிலும், ஆட்சியில் பங்கு, தவெக ஆதரவு கருத்து என தொடர்ந்து பரபரப்புக்கு இடமில்லாமல் பேசிவரும் காங்கிரஸுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது.
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், கடந்த 28ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு, திமுக எம்.பி. டி.ஆர். பாலு தலைமையிலான குழுவுடன் சுமார் 1 மணி நேரம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக