வெள்ளி, 6 மார்ச், 2026

திமுக மீண்டும் வெற்றி பெற்று விடும் என்று ஆர் எஸ் எஸ் பயப்படுகிறது - கட்டுரை

 சோழன்   ஸ்டாலின் எவ்வளவு டேஞ்சரான அரசியல்வாதி என்று நாம் உணர்வில்லை 
எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது மீண்டும் திமுக ஜெயித்து விடுமோ என்று...
திமுகவின் 
நுண் அரசியலின்
தேர்தல் வியூகத்தின் வீரியத்தை நாம் உணர வேண்டும் என்ற நோக்கில் எழுதுகிறேன்...
தேமுதிகவை திமுக சும்மா ஆதாயம் இல்லாமல் சேர்க்கவில்லை 
ஒரு சட்டமன்றத் தொகுதியில் சராசரியாக 350 (பூத்) வாக்குச்சாவடிகள் வரை இருக்கலாம். 
ஒரு பூத்துக்கு சராசரியாக 1000 - 1500 வாக்காளர்கள் உள்ளனர்...
தமிழகம் முழுவதும் பரவலாக 100சதவீதம் பூத் கமிட்டி போட்டது இரண்டே கட்சி திமுக அதிமுக இரண்டு மட்டுமே,
அடுத்து 90 சதவீதம் பூத் கமிட்டி போட்டது பாஜக, தேமுதிக இரு கட்சிகள்தான்
பாஜக அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்தால் திமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று உளவுத்துறை ரிப்போர்ட்டையும், "பென்" நிறுவனம் எடுத்து கொடுத்த கள நிலவர கணிப்பையும் பார்த்து தான் தேமுதிகவை ஸ்டாலின் கூட்டணியில் சேர்த்தார்... 


ஒரு பூத் கமிட்டிக்கு ஐந்து பேர் என்றால் கூட
ஒரு தொகுதியில் 1750 தேமுதிக நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்று உறுதியாகும் 
ஒரு நிர்வாகி கூடுதலாக தன் குடும்பத்தில் உள்ள நான்கு ஓட்டங்களை விழ வைத்தால் கூட ஒரு தொகுதியில் 5 ஆயிரம் டூ 7 ஆயிரம் ஓட்டுகள் தேமுதிகவால் எளிதாக திமுகவுக்கு கூடுதலாக கிடைக்கும்
இன்னும் சில தொகுதிகளில் தேமுதிக நிர்வாகிகள் தற்போதைய தேர்தல் கூட்டணி உற்சாகத்தில் நன்றாக வேலை செய்வார்கள் அந்த கணக்கில் ஒரு நிர்வாகி பத்து ஓட்களை பெற்று விட்டாலே 15 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும்
அதாவது ஒரு பூத்தில் 10 டூ 50 ஓட்டு வரை தேமுதிகவுக்கு இருந்தால் கூட ஒரு தொகுதியில் 3 ஆயிரம் ஓட்டு முதல் 17 ஆயிரம் ஓட்டுகள் வரை தேமுதிக கூட்டணியால் திமுகவுக்கு புது வரவு ஆகலாம் என்று கணித்துள்ளனர்
இது புரியாமல் அதிமுகவினர் தேமுதிகவுக்கு எங்க ஓட்டு இருக்குனு கிண்டல் பண்ணிகொண்டு திரிவது வேதனை
வருகிற தேர்தலில் 
500 ஓட்டுகளுக்குள் வெற்றி தோல்வி மாறும் தொகுதிகள் எண்ணிக்கை 3 டூ 5ஆக கணிக்கப்பட்டுள்ளது 
500 டூ 1000ம் ஓட்டுகளுக்குள் வெற்றி தோல்வி மாறும் தொகுதிகள் எண்ணிக்கை
4 டூ 6 ஆக கணிக்கப்பட்டுள்ளது 
1000ம் டூ 2ஆயிரம் ஓட்டுகளுக்குள் வெற்றி தோல்வி மாறும் தொகுதிகள் எண்ணிக்கை 5 டூ 8ஆக கணிக்கப்பட்டுள்ளது 
2 ஆயிரம் டூ 3ஆயிரம் ஓட்டுகளுக்குள் வெற்றி தோல்வி மாறும் தொகுதிகள் எண்ணிக்கை 8 டூ 12 ஆக கணிக்கப்பட்டுள்ளது 
4ஆயிரம் டூ 5ஆயிரம் ஓட்டுகளுக்குள் வெற்றி தோல்வி மாறும் தொகுதிகள் எண்ணிக்கை 15 டூ 20 ஆக கணிக்கப்பட்டுள்ளது 
6ஆயிரம் டூ 8ஆயிரம் ஓட்டுகளுக்குள் வெற்றி தோல்வி மாறும் தொகுதிகள் எண்ணிக்கை 18டூ 24 ஆக கணிக்கப்பட்டுள்ளது 
8ஆயிரம் டூ 10ஆயிரம் ஓட்டுகளுக்குள் வெற்றி தோல்வி மாறும் தொகுதிகள் எண்ணிக்கை 25 டூ 30 ஆக கணிக்கப்பட்டுள்ளது 
தேமுதிக வரவால் திமுக கிட்டத்தட்ட 500 டூ 10 ஆயிரம் ஓட்டுகளுக்குள் இழுபறி உள்ள 55 டூ 80 தொகுதிகளில் தேமுதிகவால் அந்த குறைந்தபட்ச வாக்குகள் கிடைக்கும் என்றும்
தென் மாவட்டங்களில் சுமார் 50 தொகுதிகளில் ஓபிஎஸ் அனுதாப தாக்கம் 2 சதவீதம் வாக்குகளை திமுகவுக்கு பெற்று தரும் என்றும்
வைத்திலிங்கம் மனோஜ்பாண்டியன் தனியரசு, போன்ற அந்தந்த பகுதி ஆளுமைகளால் அந்த பகுதியில் உள்ள இரண்டு மூன்று தொகுதிகளில் ஒரு சதவீதம் வாக்குகளை கூட்டி தரும் என்றும்
சபரீசன் வைத்துள்ள தேர்தல் வியூகம் "பென்" நிறுவணம் கணித்துள்ளது
இதுதான் திமுகவின் தேர்தல் நுண் அரசியல்
சிறுதுறும்பும் பல் குத்த உதவும் 
சிறு துளி பெருவெள்ளம் ஆகும்
என்ற இந்த இரு பல மொழிகள் அடிப்படையில் தான் திமுக 22 கட்சிகளுடன் கூட்டணியை கட்டமைத்துள்ளது...
திமுக ஏற்க்கனவே 2019, 2021,2024 தேர்தல்களில் வெற்றிவாகை சூடிய கூட்டணி கட்சிகளை மனம் நோகாமல் கட்டி காத்து வைத்துள்ளது
ரெண்டு சதவீதம் வாக்குகள் உள்ள காங்கிரஸ் கட்சி காட்டிய வெட்டி வீராப்புக்கும் வளைந்து கொடுத்து கூட்டல் கழித்தல் கணக்கு பார்த்து 28+1 தொகுதிகளை வாரி வழங்கி காங்கிரஸை தக்கவைத்துக் கொண்டது..
அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக கட்சி மற்றும் இன்னும் சிறு சிறு கட்சிகள் 7க்கும் மேற்பட்ட கட்சிகளை தலைக்கு ஒரு சீட் என பேசி திமுக கூட்டணியில் இணைத்துள்ளது
அதிமுகவில் இருந்த ஓபிஎஸ் வைத்தியலிங்கம் அன்வர் ராஜா மைத்ரேயன் போன்ற அனுபவம் மிக்க பெரிய நிர்வாகிகளை திமுக உள்ளே இழுத்துக் போட்டுள்ளது
கட்சியையும் பலப்படுத்தி கூட்டணி கட்டமைப்பையும் பலப்படுத்தியுள்ளார்கள்
இதற்கு நேர்மாறாக ஏற்கனவே இருந்த தேமுதிக மற்றும்
ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்ற கழகம், முத்தரையர்களின் தமிழர் தேசிய கட்சி,  பார்வர்ட் பிளாக், கர்ணாஸ் கட்சி தனியரசு கட்சிகளை எல்லாம் அதிமுக சரியான முறையில் மதித்து  பேச்சுவார்த்தை நடத்தாமல் விரட்டி அடித்துள்ளது 
தன் அதிமுகவில் இருந்த செங்கோட்டையன் போன்றவர்களை அனுசரித்து போகாமல் தொரத்திவிட்டுள்ளது
அதிமுகவில் மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ் சை அவமானப்படுத்தி விரட்டி யுள்ளார்கள்
வைத்திலிங்கம் மனோஜ்பாண்டியன் போன்ற அந்தந்த பகுதி ஆளுமைகளை மதிக்காமல் விரட்டிள்ளனர்
இன்னும் காத்திருக்கும் புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி அவர்களை அழைத்து பேசாமல் எப்படி ஜெயிக்க போறாங்க?
இந்து விரோதி திமுக வெற்றிபெற்று விடுமே என்ற கவலையில் தான் எடப்பாடி மீது வெறுப்பு அடைகிறேன் 
இதையும் மீறி அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் அது பாஜக வகுக்கும் வியூகத்தால் மட்டுமே என்று கணவு கண்டு வருகிறேன்
அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் அதற்கு முழு காரணம் பாஜக தான்
ஒரு சமயம் தோல்வி அடைந்தால் எடப்பாடியின் ஆணவம் தான் காரணம்

கருத்துகள் இல்லை: