![]() |
tamil.oneindia.com : உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா?
பெண்கள் பாதுகாப்பு என்று மேடைக்கு எம்டி முழக்கத்துடன் அரசியல் களத்தில் குதித்திருக்கும் 'தவெக' விஜய்க்கு, இப்போது சொந்த மனைவியும் குடும்பப் பக்கமுமே பெரும் சவாலாக உருவெடுத்திருப்பதாகத் தகவல்.
குறிப்பாக, நீண்ட நாட்களாகத் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும் விவாகரத்து விவகாரமும், அதில் சங்கீதா மற்றும் ஜேசன் சஞ்சய் எடுக்கப்போகும் முடிவுகளுமே கட்சியின் 'திங்க் டேங்க்' டீமை தூக்கமிழக்கச் செய்துள்ளன.
உளவுத் துறையையும் தாண்டிய அச்சம்
பொதுவாக அரசியல் தலைவர்களுக்கு எதிர்க்கட்சிகளின் வியூகங்கள், உளவுத்துறை கண்காணிப்பு தான் பயத்தை உண்டாக்கும்.
ஆனால், விஜய்யைப் பொறுத்தவரை சங்கீதா மற்றும் சஞ்சய் வாயைத் திறந்தாலே அது தேர்தல் நேரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அவரது நெருங்கிய வட்டாரம் கருதுகிறது.
சங்கீதாவின் மௌனம்: இதுவரை அமைதி காத்து வரும் சங்கீதா, தேர்தல் நேரத்தில் விவாகரத்து தொடர்பான காரணங்களையோ அல்லது விஜய்யின் தனிப்பட்ட மறுபக்கத்தையோ மீடியாக்களிடம் பகிர்ந்தால், அது கட்சியின் நற்பெயருக்கு 'செக்' வைப்பதாக அமையும்.
வாரிசு பாசம்: ஒரு பக்கம் விஜய் தன்னை தூய்மையானவர் என்று காட்டிக்கொள்கிறார். ஆனால் அவர் மகளை கூட 5 வருடங்களாக பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. மகன் படம் வெளியிடக்கூடாது என்று தடுத்தாகவும் கூறப்படுகிறது. விஜயின் மகன் சஞ்சய் ஒருவேளை தன் தாயின் பக்கம் நின்று ஒரு அறிக்கை வெளியிட்டால், அது "பெண்ணுரிமை" பேசும் தவெக-வின் கொள்கைக்கே வேட்டு வைக்கும் என அஞ்சப்படுகிறது.
'டேமேஜ் கண்ட்ரோல்' டீம் ரெடி!
இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக அணுகி வருகிறதாம் கட்சித் தலைமை. சங்கீதா தரப்பில் இருந்து எந்தவிதமான அதிருப்தி அறிக்கைகளும் வராதபடி, "பேச்சுவார்த்தை" நடத்தி சமாதானப்படுத்த ஒரு தனி குழுவே செயல்பட்டு வருவதாகக் கோட்டை வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
"அரசியல் களத்தில் ஆயிரம் விமர்சனங்களை எதிர்கொள்ளலாம், ஆனால் குடும்பத்திற்குள் எழும் விமர்சனம் ஒரு தலைவனின் இமேஜை மொத்தமாகச் சிதைத்துவிடும்" என்பதுதான் இப்போதைய தவெக-வின் கவலை. தேவையின்றி இதற்கு திமுகதான் காரணம் என்று பழியை போட்டாலும் அதற்கும் சங்கீதா கோபம் அடையும் வாய்ப்புகள் உள்ளன.
தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த 'குடும்பப் போர்' சமாதானத்தில் முடியுமா அல்லது விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கு முட்டுக்கட்டையாக மாறுமா என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி!
சங்கீதா மனுவில் சொல்லி இருப்பது என்ன?
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக சங்கீத தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது ஏப்ரல் 2021ம் ஆண்டு எனக்கு தெரியவந்தது. இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள திருமணம் கடந்த உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன்.
திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார்.
நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரிய வந்தது. நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.
நடிகையுடன் உறவை முறித்துக் கொள்வதாக கூறிய விஜய் திருந்தவே இல்லை. 2021ல் தொடங்கி என்னை தனியாக வாழுமாறு நிர்பந்தித்தார்.
விஜய் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை 'அந்த' நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
ஆனால், அந்த பதிவுகளுக்கு விஜய் மறுப்புத் தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரித்தார்.
என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருவது எனக்கும் எனது, பிள்ளைகளுக்கும் அவமானத்தை தருகிறது. தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2வது எதிர்மனுதாரராக சேர்ப்பேன், என்று சங்கீதா மனுவில் கூறி உள்ளார்.
லண்டனில் தனது குடும்பத் தொழிலைப் பார்த்துக்கொண்டு, மீடியா வெளிச்சம் படாமல் இருக்கும் சங்கீதாவின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக