சனி, 7 மார்ச், 2026

ஆண்டவரே மக்களே என்னை மன்னித்து கொள்ளுங்கள் - நடிகர் விஜய்

 நடிகர் விஜய் : இந்த நிமிடம் வரை திரைப்படங்களில்  என்னை ரசித்து பின்பு எனது அரசியலையும் ஆதரித்து கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு எனது அன்பை தெரிவித்து கொள்கிறேன்.
எல்லாவற்றிலும் மேலாக உங்களிடம் மன்னிப்பு கேட்கும் மனநிலையில்தான் நான் உள்ளேன் என்பதை முதலில் தெரிவினது விடுகிறேன்.
திரையில் எவ்வளவு வெற்றிகரமான ஒரு நடிகனாக என்னால் உயர முடிந்தது என்பது எல்லோரும் அறிந்ததுதான் 
ஆனால் அரசியலில் என்னால் கொஞ்சம் கூட உயர முடியாது என்பதை காலம் கடந்து நான் இப்போது உணர்ந்துள்ளேன்.
அரசியலுக்கும் திரைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது 
இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளாதது எனது தவறுதான்.
இதற்காக யார் மீதும் எனக்கு கோபம் இல்லை.
என்னை பார்க்க வந்து உயிரிழந்த அந்த 41 மனிதர்களுக்கும் இனி எந்த காலத்திலும் என்னால் எந்த பிராயச்சித்தமும் செய்து விடமுடியாது 
இவர்களின் ஆன்மா என்னை இனி ஒரு போதும் நிம்மதியாக தூங்க விடாது 
எல்லாமே ஒரு விளையாட்டு போல கருதி இருந்தேன் 
சத்தியாயமாக் சொல்கிறேன் இப்படி எல்லாம் ஆகும் என்று முன்பே உணர்ந்திருந்தால் இந்த விளையாட்டில் நான்  நிச்சயமாக இறங்கி இருக்க மாட்டேன் 
தெரிந்தோ தெரியாமலோ என்னை உசுப்பேற்றியவர்களின்  ஆலோசனைகள் இன்று என்னை மீளவே முடியாத பாவக்கிடங்கில் தள்ளிவிட்டது!


ஆண்டவரே மக்களே என்னை மன்னித்து கொள்ளுங்கள்.
என்னை ரசித்து ஒரு நடிகனாக ஏற்றுக்கொண்டததற்கு நான் இதுவரை ஒரு கைமாறும் செய்யவில்லை.
இனி அந்த குறையை போக்க முயற்சிப்பேன் என்ற உறுதியை இப்போது உங்களுக்கு வழங்குகிறேன்.
(யாவும் கற்பனையே - ஆனாலும் இதை ஒரு ஆலோசனையாக ஏற்று கொண்டு தனது திரைப்பயணத்தை நடிகர் விஜய் தொடரலாம் )  
 

கருத்துகள் இல்லை: