வெள்ளி, 31 ஜனவரி, 2025

அமெரிக்காவில் டிக் டொக் போட்ட மகளை பாகிஸ்தானில் வைத்து சுட்டு கொன்ற தந்தை !

Pakistan: Father Kills Daughter Over TikTok Videos in Pakistan | World News  - The Times of India

 தினத்தந்தி :பாகிஸ்தான்: டிக் டாக்கில் வீடியோ போட்ட மகளை சுட்டுக்கொன்ற தந்தை கைது
பாகிஸ்தானில், 'டிக் டாக் வீடியோ' வெளியிட்ட 15 வயது மகளை அவரது தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, 'டிக் டாக்' சமூக ஊடகத்தில் வீடியோ வெளிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த சிறுமியின் குடும்பம் கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.


இந்தநிலையில் சிறுமி, 'டிக் டாக்' வீடியோ போடுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இது அவருடைய தந்தைக்கு பிடிக்கவில்லை. 'டிக் டாக்கில் வீடியோ போடுவதை நிறுத்தும்படி பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் சிறுமி கேட்கவில்லை.

இதனிடையே பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள சொந்த ஊருக்கு சிறுமியின் குடும்பம் கடந்த 15ல் தேதி வந்தனர். அப்போது, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார். எங்கிருந்தோ பாய்ந்து வந்த குண்டுபட்டு சிறுமி இறந்ததாக அவரது தந்தை தெரிவித்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீஸ் நடத்திய விசாரணையில் தந்தையும் அவரது மைத்துனரும் சேர்ந்து சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது. இதனால் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.பாகிஸ்தானில், 'டிக் டாக் வீடியோ' வெளியிட்ட 15 வயது மகளை அவரது தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: