![]() |
Thulakol Soma Natarajan : தமிழகமும் திராவிடமும் ஒன்னு ! - இதை
அறியாதவர் தலையில் இருப்பது மண்ணு !
தமிழ்த் தேசியர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் செயல்பாடுகள் இப்போது உறைநிலையில் இருக்கிறது.
பூடகமாக செயல்படுகிறோம், அவற்றை எல்லாம் வெளியில சொல்லமுடியாது
என்று கூறித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம் .
எங்களையும் ஏமாற்ற நினைக்க வேண்டாம்..
சீமான், பெ.ம. போன்றவர்கள் இப்போது வெளிப்படையாகவே சங்கிகளின்
ஊதுகுழல்களாகச் செயல்படுகிறார்கள் என்பது,
அவர்கள் தொடர்ந்து, திராவிடத்தை பெரியாரை இழிவுபடுத்தும் இழிசெயலில் ஈடுபடுவதிலிருந்து வெட்ட வெளிச்சமாகிக் கொண்டிருக்கிறது.
"உண்மையான தமிழ்த் தேசியர்கள் நாங்கள் " என்று கூறிக் கொண்டிருப்பவர்கள் இதைக் கண்டிக்காது வாளாவிருக்கின்றனரே ஏன் ?
திராவிடர் , திராவிடம் என்று பெரியார் குறிப்பிட்டுப் பாடுபட்டதெலலாம் தமிழர் நலம் குறித்துத் தான் என்பதைப் பிற்காலத்தில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதை "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற நூலில் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.
இனி .தமிழ்த் தேசியம், தமிழினம் என்று தனித்ததான சொல்லாடல்கள் 20 ஆம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் தான் புழக்கத்திற்கு வந்தன.
அதற்கு முன்பு, இவவிரு சொல்லாடல்கள் எந்த இடத்திலும் காணபட்டவில்லை.
சங்ககால இலக்கியங்களில் ,
தமிழகம் என்ற மொழி வழி நிலப்பரப்பு மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளதேயன்றி,
தமிழ்த்தேசியம், தமிழினம் என்ற குறிப்பு எங்கும் இல்லை.
சங்க இலக்கியங்களில்,,,,,
வரலாற்றில் சேர, சோழ, பாண்டிய இனம்தான் (வம்சம்தான்) குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் தங்களை ஒட்டுமொத்தமாகத் தமிழினம் என்று எங்கும் அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை.
மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சோழர்களுடன், தெலுங்கு வடுகர்கள்
கன்னடச் சாளுக்கியர்கள் கலப்பு ஏற்பட்டு போலிச் சோழர்கள் உருவானார்கள்.
பின்னர் அவர்களே தெலுங்கர்கள், கன்னடர்கள் ஆனார்கள்.
ஆந்திர, கருநாடகம் என்று தாங்கள் வாழ்ந்த நிலப்பரப்பை அடையாளப்படுத்திக்
கொண்டார்கள்.
தங்களின் மொழிகளையும் நலுங்கு, கன்னடம் சேரர்கள்,
வடபுலச் சமஸ்கிருதப்பண்டிதர்களின் கலப்பால் மலையாளிகள் ஆனார்கள்.
தாங்கள் வாழ்ந்த நிலப்பரப்பை மலையாள தேசம் என்றும் பின்னர் கேரளம்
என்றும் மொழியை மலையாளம் என்றும் அடையாளப் படுத்திக்கொண்டார்கள்.
தமிழ் மொழி பேசும் பாண்டியர்கள் மட்டும் தனித்து நின்று தங்களைப் பாண்டியர்கள்
என்றே அடையாளப்படுத்திக் கொண்டார்கள் !
வரலாற்றில் தமிழர்கள், தமிழினம் என்ற தனித் தொகுப்பு இல்லாத நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழி பேசும் இவர்கள் எல்லாரையும்,
திராவிடர்கள் என்று குறிப்பிட வேண்டிய கட்டாயம் உருவானது.
ஐந்து, ஆறாம் நூற்றாண்டிலேயே திராவிடசிசு என்று திருஞானசம்பந்தனையும்,
திராவிடவேதம் என்று திருவாய்மொழியையும் குறிப்பிட்டார்கள்.
திராவிடமும் திராவிட மொழிகளும் தான் வடவர்களிடமிருந்து, தென்னகத்தாரை
வேறுபடுத்திக் காட்டும் தனி வாழிடம் என்று இதனால் உறுதிப்பட்டது.
இதைத்தான், இந்திய நாட்டுப்பண்ணில் "திராவிட" என்று குறிப்பிட்டு,
அதற்கு, இந்திய அரசமைப்பின் அங்கீகாரமும் அளிக்கப்பட்டது.
எனவே, திராவிடம்,
திராவிடஇனம் என்ற சொல்லாடல் நம்மை வடவர்களிடமிருந்து வேறுபடுத்தி,
தென்னகத்தாரை ஒன்றிணைக்கும் மந்திரச் சொல்லாக விளங்குகிறது.
திராவிட அடையாளத்தை ஒரு போதும் நாம் இழக்கக்கூடாது !
தமிழ்த் தேசியம் என்று போலித்தனமான வெற்றுக் கூச்சல், கவைக்குதவாத சொல்லாடல் என்பதை
உணருங்கள். தெளிவடையுங்கள்.
தற்போது, தமிழ் கூறும் நல்லுலகம்தான் திராவிடமாகத் திகழ்கிறது. அதை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் அறிவார்ந்த செயல் வெல்க திராவிடம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக