ஞாயிறு, 26 ஜனவரி, 2025

கல்குவாரிக்கு எதிரான சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை! காவல் ஆய்வாளர் இடை நிறுத்தம்

 tamil.samayam.com : மதுமிதா.M: புதுக்கோட்டை திருமயம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது வழக்கை மெத்தனமாக விசாரித்ததாக கூறி திருமயம் இன்ஸ்பெக்டர் குணசேகரனை இடைநிறுத்தம்  செய்து டிஐஜி வருண் குமார் உத்தரவு.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வசித்து வந்தவர் ஜெகபர் அலி முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலராகவும், திருமயம் தெற்கு ஒன்றிய அதிமுக சிறுபான்மை நலப் பிரிவு செயலாளராகவும், தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளராகவும், சமூக ஆர்வலராகவும் இருந்தார்.



கல்குவாரிகளின் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டிய ஜெகபர் அலி
திருமயம் பகுதியில் இயங்கும் கல்குவாரிகளின் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டிய நிலையில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் கல்குவாரி அதிபர்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அந்த அபராத தொகை வசூலிக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும். எனவும் உதவி கலெக்டரிடம் புகார் மனு
அபராத தொகை வசூலிக்கப்படாதது குறித்து மீண்டும் ஜெகபர் அலி அதிகாரிகளை கேள்வி எழுப்பினார்.டாரஸ் லாரி மூலம் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் அனுமதி இல்லாத இடத்தில் கொட்டப்பட்டுள்ளது எனவும் உதவி கலெக்டரிடம் புகார் மனுவை வழங்கினார்.

அரசு அலுவலர்களிடம் கனிம வள கொள்ளை குறித்து மனு
நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் இரவோடு இரவாக அகற்றும் பணிகள் நடைபெற்றதாக 13ஆம் தேதி ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். செய்தியாளர்களை சந்தித்து பேசும் பொழுது அரசு அலுவலர்களிடம் கனிம வள கொள்ளை குறித்து மனு அளிக்கப்பட்ட நிலையில் எந்த ஒரு பயனும் கிடையாது.

கடந்த 17ஆம் தேதி ஜெகபர் அலியை கொலை செய்தனர்
அதனால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதாகவும் பகிரங்கமாக தெரிவித்த நிலையில் கடந்த 17ஆம் தேதி ஜெகபர் அலி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த பொழுது லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி வாக்குமூலம் அளித்தார்.

திருமயம் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சஸ்பெண்ட்
சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கு குறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் திருமயம் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஜெகபர் அலி கொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக கூறி திருச்சி சரகர் டிஐஜி வருண்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்

கருத்துகள் இல்லை: