வெள்ளி, 31 ஜனவரி, 2025

சீமான் பாணியில் நடிகர் விஜய் அரசியல் .. வசூலுக்காக மட்டுமே இன்னொரு கட்சி

Prakash Raj teams up with Vijay yet ...

ராதா மனோகர் : நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டங்களை விட வியப்பை தருகிறது அவரின் கட்சியில் மாவட்ட பொறுப்புக்கள் பெறுவதற்கு பெருகும் ஆர்வலர்களின் தொகை .
கட்சி பொறுப்புக்களை பெறுவதற்கு எக்கச்சக்கமான பணம் கைமாறுகிறது
இது ஒரு பெரிய சந்தேகத்தை கிளப்புகிறது
தமிழக அரசியலில் வசூல் வேட்டைக்காக மட்டுமே நடத்தப்படும் நாம் தமிழர் கட்சி போல நாம் ஏன் ஒரு கட்சியை நடத்த கூடாது என்ற எண்ணம் நடிகர் விஜய்க்கு உண்டாகி இருக்க கூடும்.
சினிமாக்காரர்களின் ஒரே நோக்கம் எப்போதும் வசூல் மட்டும்தானே?
கொஞ்சம் வாக்கு வங்கியை பெறவேண்டும் அதை வைத்து மேலும் மேலும் இலாபம் பெறுவது என்ற பார்முலா மட்டுமே நடிகர் விஜயின் அரசியல் வருகையாக எனக்கு தெரிகிறது
இது ஒரு தவறான கணிப்பாக கூட இருக்கலாம்.
ஆனால் நிச்சயமாக நடிகர் விஜயின் அரசியல் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கவே முடியாது.என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
எந்த காலத்திலும் மக்கள் நலன் சார்ந்து சிந்தித்திராத ஒரு மனிதரை எப்படி ஒரே நாளில் ஒரு மீட்பராக கருத முடியும்?



மீள்பதிவு : நடிகர் விஜய்க்கு அரசியலை தவிர வேறு ஆப்ஷன் இருப்பதாக தெரியவில்லை!
அடுத்தடுத்து ஊத்திக்கொண்ட படங்கள்
அவற்றை வெற்றி படமாக காட்டுவதற்கு செலவு செய்த பணம் ...
மார்க்கெட்டிங் உத்தியால் மட்டுமே இன்னும் எத்தனை நாளைக்குதான் மாஸ் ஹீரோ இமேஜை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற கவலை
எல்லாவற்றிலும் பார்க்க தலைக்கு மேல் இருக்கும் வருமான வரி அந்நிய செலாவணி சிக்கல் போன்ற பல கோப்புக்கள் (Files)  
வர இருக்கும் சட்ட சிக்கல்களை சமாளிக்க கொஞ்சம் அரசியல் பலம் தேவைப்படுகிறது
ஒன்றிரண்டு வீத வாக்கு வாங்கி இருந்தாலும் பேரம் பேச வசதியாக இருக்கும்
அரை நூற்றாண்டை எட்டி இருக்கும் விஜய் இதுவரை மக்கள் நலன் சார்ந்த அரசியல் கோட்பாடு பற்றி எதாவது உருப்படியாக பேசி உள்ளாரா?
தன்மீது ஒரு தூசி படாமல் .. அங்கிட்டு ஒரு தடவல் இங்குட்டு ஒரு தடவல்
இதுவென்ன அரசியல்?
ஊழல் எளிமை போன்ற பார்முலா  வார்த்தைகளை விட்டு விட்டு  உங்கள் கொள்கை என்ன?
கல்வி சுகாதாரம் வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் உங்கள் கருத்து என்ன?
இவரது வீடே இதுவரை ஒரு மர்ம மாளிகையாகதான் இருக்கிறது
இவரை உயரே தூக்கி விட்ட தயாரிப்பாளரை ( எஸ் ஏ சந்திரசேகர்- அப்பா) இவர் எப்படி மதிக்கிறார்?
அடிப்படை நன்றியே இல்லாத .. ஒரு தற்குறி  .. வகுப்பு எடுக்கிறது   
இந்த இடத்தில நடிகர் பிரகாஷ் ராஜ் பேசும் அரசியலை ஒப்பீடு செய்து பார்க்கவேண்டியது அவசியமாகிறது!
திரையில் கிடைத்த ஊடக வெளிச்சத்தை பயன் படுத்தி மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை  முன் வைக்கும் ஒரே ஒரு சினிமா அரசியல்வாதி பிரகாஷ் ராஜ் மட்டுமே.

பிரகாஷ் ராஜ் விஜய்

கருத்துகள் இல்லை: