Kandasamy Mariyappan : 2026ல் திமுக வெற்றிபெறுவது உறுதி.
ஆனால்...
திமுகவின் நிரந்தர வாக்கு வங்கி 22%.
அதிமுகவின் நிரந்தர வாக்கு வங்கி 25%ஆக இருந்து இப்போது 20%.
அதிமுக வேண்டாம் என்பவர்களாலும், மக்கள் நலத் திட்டங்களாலும் (Welfare schemes), கூட்டணி பலத்தாலும் 39-45% வாக்குகள் பெற்று திமுக ஆட்சி அமைக்கும்.!
அதேபோல் திமுக வரக்கூடாது என்பவர்களாலும், கூட்டணி பலத்தாலும் மக்கள் நலத் திட்டங்களாலும் (Welfare schemes), 39-45% வாக்குகள் பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்.!
இந்த 22%, 25% வாக்குகளை மட்டுமே நம்பி களத்தில் இருப்பது எந்த நேரத்திலும் மூன்றாவதாக ஒரு சக்தி உருவாகும்போது திமுக அதிமுகவை வீழ்த்தி விட்டு ஆட்சியை பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.!
இரண்டு பெரிய கட்சிகளும் தேர்தல் நேரத்தில் கூடுதல் வாக்காளர்களை கவர பணம் கொடுப்பதும், களத்தில் பணி செய்பவர்களுக்கு பணம் செலவழிப்பதும், உதிரி கட்சிகள் சாதிக் கட்சிகளை அரவணைக்க பணம் வழங்குவதும், மக்களிடம் ஒரு பிம்பத்தை கட்டமைக்க (Perceptional image) ஊடகங்களுக்கு பணம் கொடுப்பதும் என்று தேர்தலில் வெற்றிபெற ஏறத்தாழ 1,000 கோடி முதல் 5,000 கோடிகள் வரை செலவு செய்கின்றன.!
எல்லாவற்றுக்கும் மேலாக, ஓரளவு சுகபோக வாழ்க்கை வாழ்பவர்கள் (Elite group) களப்பணிகள் செய்ய வரமாட்டார்கள் என்பதால், வாகன ஓட்டுநர்கள், கட்ட பஞ்சாயத்து அடிதடி செய்பவர்கள், அடாவடித்தனம் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் போன்றவர்களை இரண்டு கட்சிகளும் பிரதானமாக நம்பி அவர்களை முன்நிறுத்தி கட்சியை வழிநடத்தி தேர்தல் பணிகளை செய்கின்றனர்.!
2000க்கு முன்பு பெருவாரியான மக்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். 2020க்கு பிறகு டிஜிட்டல் உலகில், சாதாரண மக்களால் இது மிகவும் அருவருப்பாக பார்க்கப் படுகிறது.!
அந்த 22%, 25% வாக்குகளை தாண்டிய மக்கள் எதிர்பார்ப்பது ஓரளவு நல்ல நிர்வாகம். உள்ளாட்சி பிரதிநிதிகளின் மக்கள் நலன் சார்ந்த களப்பணிகள். மாநகர, நகர, பஞ்சாயத்து அரசு அலுவர்களின் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கை. காவல்துறை வழங்கும் நம்பிக்கை. வட்டாட்சி அலுவலகம் மற்றும் Revenue department அதிகாரிகளின் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளில் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.!
இந்த மாற்றத்தை ஆட்சிக்கு வந்த முதல் நாளே தொடங்கி, 5 ஆண்டுகள் கடைசியில் ஒரு சீர்திருத்தத்தை வழங்கினால்...
ஒருவேளை அந்த ஆளும் கட்சிக்கு வாக்களிக்க விரும்பா விட்டாலும், அந்த ஆளும் கட்சி மீது கோபம் இருக்காது. அவர்கள் வேறொரு கட்சிக்கும் வாக்களிக்க செல்ல மாட்டார்கள். அடுத்தமுறை ஆட்சிக்கு வந்த பிறகு, மேலும் பல சீர்திருத்தங்களை செய்யும் போது, முந்தைய தேர்தலில் அந்த ஆளும் கட்சிக்கு வாக்களிக்காத பலரும் இப்போது வாக்களிக்க முன் வருவார்கள்.!
அடிதடி, அடாவடி, பணநாயக அரசியல் தொடர்ந்தால்...
நரேந்திராக்கள், அண்ணாமலைகள், சீமான்கள் போன்ற கோமாளிகளிடம் இந்த நாடு சிக்கி சின்னாபின்னமாகி விடும்.!
மக்கள் பிரதிநிதிகளிடமும், அரசு அதிகாரிகளிடமும் Civic sense சுத்தமாக இல்லை என்பது வருத்தமான ஒன்று.!
Hope for the best in future.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக