செவ்வாய், 28 ஜனவரி, 2025

இந்திய எம்பி சந்திரா ஆர்யா கனடா பிரதமர் போட்டியில் இருந்து தகுதி நீக்கம்

 ராதா மனோகர் : ஒரு அசல்  ஆர் எஸ் எஸ் சங்கி ஒருவர் கனடா எம்பியாக இன்னும் இருக்கிறார்
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சந்திரா "ஆரியா" 2006 இல் கனடாவுக்கு வந்த குடிவரவாளர்
வந்தேறு குடிகளை பெரிதும் மதித்து பொது மைய நீரோட்டத்தில் அவர்கள் இணைந்து கொள்வதை வரவேற்கும் பண்பு கனடா நாட்டுக்கு உண்டு.
பதிலுக்கு இந்த ஆர்யாவை போன்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்விக்கு என் நன்றி கொன்றற்கும் உய்வுண்டாம் என்ற திருக்குறள்தான் ஞாபகத்திற்கு வருகிறது
இவர் மீது காலத்திற்கு காலம் பல விமர்சனங்கள் எழுந்தது . ஆனாலும் அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு இவரை மூன்றாவது தடவையாகவும் தெரிவு செய்து தங்கள் அறியாமையை வாக்காளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர் (இவரது தொகுதியில் பல இலங்கை தமிழர்களும் உண்டு என்பது அடிஷனல் இஸ்பெஷல்)
காலிஸ்தான் தலைவரை இந்திய உளவு துறை ஆள் வைத்து கனடிய மண்ணிலேயே போட்டு தள்ளிய சம்பவத்தில் முழு கனடாவும் சங்கிகளின் ஒன்றிய அரசுக்கும் அதன் மோடிக்கும் எதிராக கிளர்ந்து எழுந்த போது இவர்  இந்தியா சென்று மோடியையும் இதர ஆர் எஸ் எஸ் பரிவாரங்களும் சந்தித்து தனது சங்கி அரசியலை  வெளிப்படுத்தினார்.


மோடியோடு இவர் அமர்ந்திருக்கும்  படத்தை மிக பெருமையாக பொதுவெளிக்கு காட்சி படுத்தினார்,
கனடாவில் தமிழர் மரபு திங்கள் கொண்டாடுவது போல இந்து பாரம்பரிய மாதமாக நவம்பர் மாதத்தை அறிவிக்க வேண்டும்  ஒரு சங்கித்தீர்மானத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவந்தார்
அதை யாரும் எதிர்க்கவில்லை . பல்லின கலாசாரங்களை மதிக்கும் கனடாவின் உயர் விழுமியம் இது!
இந்த நிகழ்வை கொண்டாடும் முகமாக பாராளுமன்ற வாயில் இவர் சங்கிகளின் ஆர் எஸ் எஸ் கொடியை கையில் வைத்திருந்தார் என்று  கியூபெக் மாநில இந்து மனித உரிமை அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது
இவர் கனடா பிரதமர் தேர்வுக்கு தனது பெயரையும் முன்மொழிந்திருந்தார்
கனடா ஆங்கிலம் பிரஞ்சு ஆகிய இரு மொழிகளையும் தேசிய மொழிகளாக கொண்டிருக்கும் நாடு
இந்த அடிப்படை உண்மை கூட தெரியாமல் தனக்கு பிரெஞ்சு தெரியாது என்பது ஒரு சாதனை போல தொலைகாட்சியில் வாந்தி எடுத்தார்
அது மட்டுமல்ல பிரெஞ்சு மக்களுக்கு மொழியை விட வாழ்வாதாரம்தான் முக்கியமாம்
அடேய் அதை பிரெஞ்சுக்காரன் சொல்லவேண்டும்
கனடா லிபரல் கட்சி இவரை பிரதமர் போட்டிக்கு தகுதி இல்லாதவர் என்று விலக்கி வைத்துவிட்டது  
இப்போது தன்மீது இனப்பாகுபாடு காட்டப்படுகிறது என்று கூவ தொடங்கி உள்ளார்.

In November 2022, Arya's private member bill, which proclaimed that November is Hindu Heritage Month, passed unanimously. When Arya raised a flag on Parliament Hill to celebrate the event,
academics from the Université du Québec à Montréal,
and groups from the Hindus for Human Rights sent letters to Trudeau due to their belief that it appeared that flag represented the Hindu nationalist organization, Rashtriya Swayamsevak Sangh.

கருத்துகள் இல்லை: