![]() |
மலையோரம் செய்திகள் : இலங்கையில் தமிழர்பகுதியில் நாய்க்கு மரணதண்டனை நிறைவேற்றம்
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் குறித்த ஒருவரின் ஆட்டை பக்கத்து வீட்டு நாய் கடித்ததில் ஆடு இறந்து விட்டது
இதனால் இரு தரப்புக்குள் பிணக்கு ஏற்பட்டு ஆட்டின் உரிமையாளரான குறித்த பெண் இனக்க சபைக்கு சென்று உள்ளார்
இனக்க சபையில் நாயை செல்லப்பிராணியா பாசமாக வளர்த்த பெண் மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பெண்ணாம் அவருக்கு எதிர் தரப்புக்கு பணம் கொடுக்கும் அளவுக்கு வசதி இல்லையாம்
இதனால் அவர் மீது இனக்க சபையில் ( உள்ளூர் பஞ்சாயத்து) புகார் கொடுத்த ஆட்டின் உரிமையாளர் பெண் தனக்கு குறித்த நாயை தரும்படி இனக்க சபை அதிகாரிகளிடம் கேட்க,
அவர்களும் நாயின் உரிமையாளர் பெண்ணிடம் பக்கத்து வீட்டு ஆட்டின் உரிமையாளர் ஆட்டுக்கு பதில் நாயை கேட்க சம்மதித்து,
பக்கத்து வீடு தானே அது வந்து போகும் என்று நினைத்து கொடுத்துள்ளார்
பஞ்சாயத்து சபையில் ஆனால் ஆட்டின் உரிமையாளர் பெண் அந்த நாயை கொண்டு போய் வளர்க்காமல் குறித்த செல்லப்பிராணியை தூக்கில் போட்டு கொலை செய்து அதை புகைப்படம் எடுத்து வேறு தரப்புக்கு அனுப்பி உள்ளார்.
மண்டைக் கிறுக்கு பிடித்த அந்த ஆட்டின் உரிமையாளர் ஈன பிறவி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாயின் உரிமையாளர் கோரியுள்ளார்.

![]() |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக