செவ்வாய், 28 ஜனவரி, 2025

உடல்நலம் காக்க ஊண் உண்பதை தவிர்ப்பீர்! வள்ளுவரும் வள்ளலாரும்

May be an image of 1 person, temple and text

Thulakol Soma Natarajan : :   ஊன் உண்ணுதலை தவிர்க்க வேண்டும்
என்பதை உடல் நலம் பேணுபவர் கடைப்பிடிக்க வேண்டும்
பேராசான் திருவள்ளுவரும் இதனை புலான்மறுத்தல் என்கிற
அதிகாரத்தில் (26) வலிமையாக வலியுறுத்தியுள்ளார்
ஆனால், உலக மக்களில், புலான்மறுத்தலை கடைப்பிடிப்பவர்கள் சிறுபான்மையினர்தான்.
எனினும், தற்காலத்தில் அகவை முதிர்ந்தவர்கள் செரிமானக்கோளாறு காரணத்தால்,
புலால் உண்ணுதலைக கைவிட்டுவிடுகிறார்கள்.
அவர்களை வணங்கி வாழ்த்துவோம்
இன்று பேரருட்பேரொளி அருட்பிரகாச வள்ளற்பெருமான் இறைவனுடன் தம்மை ஆட்படுத்திக்கொண்ட தைப்பூசத் திருநாள்.


பேராசானுக்குப்பின், புலான் மறுத்தலை வலியுறுத்தியவர் பேரருட்பேரொளி
வள்ளற்பெருமான் ஆவார்.
இந்நாளில், புலான் மறுத்தலை  நாம்அனைவரும் கடைப்பிடிப்போம்
என்று உறுதியேற்பதே வள்ளுவப் பெருந்தகைக்கும்.
வள்ளற்பெருமானுக்கு நாம் செலுத்தும் பெருநன்றிக் கடனாகும்.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உலகும் தொழும்  - பேராசான் வள்ளுவர்
கங்கையிற் படிந்திட்டாலும்
கடவுளைப் பூசித்தாலும்
சங்கையில்லாத ஞான
சாத்திரம் உணர்ந்திட்டாலும்
*மங்குல்போல் கோடி தானம்
வள்ளலாய் வழங்கிட்டாலும்
பொங்குறு #புலால்_புசிப்போன்
போய் நரகு அவைவன் அன்றோ !
பேரருட்பேரொளி வள்ளலார்.
* மங்குல் = வானம்
        ⚖️   #துலாக்கோல்/28.01.2025  ⚖️

கருத்துகள் இல்லை: