![]() |
![]() |
Kasi Senthivel : 1960 பதுகளின் நடுப் பகுதியில் இலங்கையின் கம்யூனிஸ்ட் இயக்கம் தோழர்கள் நா. சண்முகதாசன், பிரேமலால் குமாரசிறி ஆகியோரின் தலைமையில் புரட்சிகர கம்யூ னிஸ்ட் கட்சியாக முன்செல்ல ஆரம்பித்தது.
அக்கால கட்டத்தில் புரட்சிகரத் தாகம் மிக்க இளம் தலைமுறையினர் இலங்கை முழுவதிலும் இக் கட்சியின் பின்னால் அணிதிரண்டனர்.
அவ்வாறு வடபுலத்தில் அணிதிரண்ட இளைஞர்களில் ஒருவனாகி 1965ல் கட்சியின் முழுநேர ஊழியனாகிக் கொண்டேன்.
அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் கட்சி,வாலிபர் இயக்கம், தொழிற்சங்க இயக் கம் மிக வேகமாக வேலை செய்த காலகட்டம்.
அக் கால கட்டத்தில் யாழ் முதல்வராக இருந்த அல்பிரட் துரையப் பாவை பற்றி மக்களிடையே குறிப்பாக உழைக்கும் மக்கள் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களிடையே அதிகம் விருப்புக்கு உரியவராகக் காணப்பட்டார்.
முஸ்லிம் வட்டா ரத்தில் செல்வாக்குப் பெற்றவ ராகவும் காணப்பட்டார்.
அவர் இலகுவாகவும் இயல்பாகவும் சாதாரண மக்களுடன் பழகு வதைப் பலதடவைகள் நேரில் பார்த்திருக்கிறேன்.
முஸ்லீம் வட்டாரத்தில் அக் காலத்தில் "மொக்கன் கடை" என்றொரு எளிமையான மாட்டிறச்சிச் சாப்பாட்டுக் கடை இருந்தது.
பகல் முழுவதும் ஓடி ஓடி அரசியல் வேலை செய்யும் நாம் அக் கடையில் மலிவாகவும் உருசியாகவும் கிடைக்கும்
மாட்டிறச்சிப் பாகங்களின் கறிகளும் புட்டும் சூடான ஆணமும் எங்ளுக்கு வயிறு நிரம்பக் கிடைக்கும்.
அவ்வாறு அங்கு செல்லும் பலதடவை களில் அல்பிரட் துரையப்பாவை அக்கடை வீதியில் தனது மோட்டார் வாகனத்தை நிறுத்தி விட்டு முஸ்லீம் மக்களுடன் மிக நெருக்கமாக உரையாடுவதை அவதானிக்க முடிந்தது.
அவர் வாக்கு அரசியல் நாம் புரட்சிகர அரசியல்,
அதனால் அவருடன் எமக்கு நட்பும் இல்லை பகையும் இல்லை எனும் நிலையே இருந்து வந்தது.
இருப்பினும் அவர் சாதாரண மக்களின் பக்கத்தில் இருந்து வந்ததால் எமக்கு அனுதாபம் இருந்தது.
ஒரு சம்பவம் குறிப்பிட வேண்டும் 1965ல் டட்லி சேன நாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் அரசாங்கத்தில் பச்சை இனவாதியான கே.எம்.பி. இராஜரட்ணா உட்பட இணைந்த ஏழு கட்சி அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சியும் இணைந்து,
மு.திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராகியதுடன் அன்று அல்பிரட் துரையப்பா முதல் வராக இருந்த யாழ்ப்பாண மாநகர சபையைக் கலைக்கவும் செய்தார்.
இவ் அநீதியை எவரும் அரசியல் ரீதியில் தட்டிக் கேட்க வில்லை.
எமது கட்சி எதிர்த்து அறிக்கை வெளியிட்டதுடன் "கலைப்பு மந்திரி திருச்செல்வமே இராஜினாமச் செய்" எனச் சிகப்பு நிறப் போஸ்ரர் அச்சிட்டு வடபகுதி முழுவதும் ஒட்டப்பட் டது.
யாழ் நகரத்தில் இரண்டாம் நாள் தோழர்கள் ஒட்டும் போது ஆறு பேர் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
மறுநாள் காலையில் கட்சிப் பணிமனையில் வைத்து தோழர் வீ.ஏ.கந்தசாமியும் நானும் கைது செய்து யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து கடும் விசாரணைக்கும் தாக்கு தல்களுக்கும் உள்ளானோம்.
அப்போது எனக்கு 22 வயது.
அதுவே எனது அறுபது வருட முழு நேர அரசியல் செயற் பாட்டில் முதலாவது கைதும் பொலிஸ் நிலையத் தடுப்பும் பொலிஸ் தாக்குதலாகும் என்பதை இவ்வேளை நினைவு கொள்ள முடிகிறது.
அன்றைய எமது அரசியல் செயற்பாடு தமிழரசுக் கட்சியின் அமைச்சர் திருச்செல்வத்திற்கும் அவர் பங்கு கொண்ட ஐ.தே.க. யின் கூட்டரசாங்கத்திற்கும் எதிரான செயற்பாடேயாகும் என்பதை இவ் வேளை நினைவு கொள்கிறேன்.நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக