மின்னம்பலம் - Selvam : சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை இடைமறித்து அச்சுறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சந்துரு அதிமுகவைச் சேர்ந்தவர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (பிப்ரவரி 1) குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “ஜனவரி 25-ஆம் தேதி சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை இடைமறித்து அச்சுறுத்திய சம்பவத்தை திமுகவுடன் தொடர்புபடுத்தி எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.
அந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சந்துரு, அதிமுகவைச் சேர்ந்தவர். இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட மகேந்திரா தார் கார், நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளரின் சகோதரர் மகனுக்கு சொந்தமானது.
அதிமுகவைச் சேர்ந்தவர்கள் செய்கிற குற்றத்தை திமுக மீது பழிபோடுகிறார் எடப்பாடி பழனிசாமி. அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கு, திருப்பூர் மாவட்டம் ஆம்பூர் மெடிக்கல் மாணவி பாலியல் வழக்கு, ராமேஸ்வரம் பெண்கள் உடை மாற்றும் அறையில் நிர்வாண படம் எடுத்த வழக்கு, குன்றத்தூர் ஒன்றிய அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் வாடகை வீட்டில் இருந்த பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு என சொல்லிக்கொண்டே போகலாம். நான் சொல்வது தவறாக இருந்தால் எடப்பாடி என் மீது வழக்கு போடலாம். rs bharathi says ecr car
திமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. இதை எப்படியாவது திசை திருப்புவதற்காக திட்டமிட்டே ஈசிஆர் அருகே நடைபெற்ற சம்பவத்தில் திமுக கொடியை பயன்படுத்தியிருக்கிறார்கள். திமுக என்று சொல்லி அதிமுகவினரே மாறுவேடத்தில் ஊடுருவி இதுபோன்ற தீயசெயல்களில் ஈடுபடுகிறார்கள்” என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக