வியாழன், 14 செப்டம்பர், 2023

லிபியாவில் வெள்ளம் 5,300 பேர் பலி, 10,000 பேரை காணவில்லை - என்ன நடந்தது? - BBC News தமிழ்

bbc.com : லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். குறைந்தது 5,300 பேர் உயிரிழந்ததாகவும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போனதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.
கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கடலுக்குள் இருந்து மேன்மேலும் சடலங்கள் வெளியேறிக் கொண்டே இருப்பதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமையன்று டேர்னா நகரில் டேனியல் புயல் தாக்கியபோது 2 அணைகளும் 4 பாலங்களும் இடிந்து நகரின் பெரும்பகுதி நீரில் மூழ்கிவிட்டன.

எகிப்து உட்பட சில அண்டை நாடுகளில் இருந்து சில உதவிகள் வரத் தொடங்கியுள்ளன, ஆனால் லிபியாவின் அரசியல் சூழ்நிலையால் மீட்பு முயற்சிகள் தடைபட்டுள்ளன. நாட்டில் இரண்டு போட்டி அரசாங்கங்கங்கள் ஆட்சி செய்து வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஈரான், இத்தாலி, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உதவிகளை அனுப்புவதாகக் கூறியுள்ளன.
நகரத்தின் வழியாக வெள்ளத்தின் நதி ஓடுவதைக் பார்க்க முடிகிறது. வெள்ளத்தில் ஏராளமான கார்கள் மிதந்து சென்றன.

ஏராளமான மக்கள் கடலுக்குள் அடித்துச் சென்ற கொடூரமான சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. மற்றவர்கள் வீட்டின் மேல் தளங்களிலும் மொட்டை மாடிகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

"நான் பார்த்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன், இது ஒரு சுனாமி போன்றது" என்று லிபியாவின் கிழக்குப் பகுதி அரசைச் சேர்ந்த ஹிஷாம் சிகியோவாட் கூறினார்.

டேர்னாவின் தெற்கே உள்ள அணைகளில் ஒன்று உடைந்ததால் விழுந்ததால் நகரின் பெரும் பகுதிகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாக அவர் பிபிசியிடம் கூறினார்.

"ஒரு பெரிய ஊர் அழிந்துவிட்டது - ஒவ்வொரு மணி நேரமும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது"

சேதம் காரணமாக நகரத்திற்குள் நுழையும் பெரும்பாலான முக்கிய பாதைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன

உடல்களை மீட்க மீட்புக் குழுக்கள் போராடி வருவதாகவும், கடற்படை மற்றும் நீர்மூழ்கிக் மீட்புக் குழுவினர் கடலில் இருந்து உடல்களை மீட்க முயற்சித்து வருவதாகவும் அல்-திபீபா கூறினார்.

பேய்டா நகரத்தில் உள்ள உதவிப் பணியாளரான காசிம் அல்-கதானி,, "சேதம் காரணமாக நகரத்திற்குள் நுழையும் பெரும்பாலான முக்கிய பாதைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன என்பதால் மீட்புப் பணியாளர்கள் டேர்னாவை அடைவது கடினம்.” என்று பிபிசியிடம் கூறினார்.

“வெள்ளம் ஏன் இத்தகைய பேரழிவை ஏற்படுத்தியது என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது, டேர்னா மற்றும் கிழக்கு நகரமான பெங்காசியை மீண்டும் கட்டியெழுப்ப ரூ.4,500 கோடி வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.

சௌசா, அல்-மர்ஜ், மிஸ்ரட்டா ஆகிய நகரங்களும் ஞாயிற்றுக்கிழமை புயலால் பாதிக்கப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு,

பெங்காசிக்கு கிழக்கே கடற்கரையோரம் 250 கிமீ தொலைவில் உள்ள டேர்னா, வளமான ஜபல் அக்தர் பகுதியின் அருகிலுள்ள மலைகளால் சூழப்பட்டுள்ளது.

டேர்னா நகரத்திலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள மேல் அணை முதலில் உடைந்தது. அதன் நீரை இரண்டாவது அணையை நோக்கி அனுப்பியதாக நீர் பொறியியல் வல்லுநர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். இந்த அணை டேர்னாவுக்கு அருகில் உள்ளது. .

"முதலில் நாங்கள் கனமழை என்று நினைத்தோம், ஆனால் நள்ளிரவில் ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டது, அது அணை உடைந்தது," என்று தனது மனைவி மகளுடன் உயிர் பிழைத்த ராஜா சசி என்பவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பெங்காசிக்கு கிழக்கே கடற்கரையோரம் 250 கிமீ தொலைவில் உள்ள டேர்னா, வளமான ஜபல் அக்தர் பகுதியின் அருகிலுள்ள மலைகளால் சூழப்பட்டுள்ளது.

கடாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு, லிபியாவில் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் இந்த நகரம் இருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, கிழக்கு அரசு நிர்வாகத்துடன் தொடர்புடைய கலீஃபா ஹப்தாருக்கு விசுவாசமான படைகளால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: