ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

இராஜராஜனின் தந்தை சுந்தரச்சோழன் கொடுத்த அன்பில் செப்பேடு... ஏடு கொடுத்தவர் பெயர் சூத்திரனாம்!

May be an image of text

Marirajan Rajan  :  1919 ஆம் வருடம்.  திருச்சி அருகே உள்ள ஒரு கிராமம். அன்பில் என்பது அக்கிராமத்தின் பெயர்..
அக் கிராமத்தில் ஒருவர் தனது வீட்டை பெரிது படுத்துவதற்காக கடைக்கால் தோண்டுகிறார்..
அதென்ன ஒருவர்..?
அவருக்கு பெயர் இல்லையா..?
நிச்சயம் இருந்திருக்கும்..
ஆனால்....?
அவ்வாறு கடைக்கால் தோண்டும்போது.. பூமிக்கடியில் 11 ஏடுகள் கொண்ட செம்பு பட்டயங்கள் கிடைத்தது.. செப்பேட்டில் எழுத்தும் இருந்தது.
இச்செப்பேட்டுத் தொகுதியை அவ்வூரைச் சேர்ந்த. S..L. இலட்சுமண செட்டியார் என்பவரிடம் கொடுத்தார் அந்த ஒருவர்.
லட்சுமணச் செட்டியார் அந்த செப்பேடுகளை உ.வே.சாமிநாத ஐயரிடம் கொடுத்தார்.
உ.வே.சா,  அந்த செப்பேடுகளை தொல்லியல் அறிஞர்
 T.a. கோபிநாத ராவ் அவர்களிடம் கொடுத்தார்..
இங்கு மூன்று நபர்களின் பெயர் பதிவாகிறது. ஆனால் அந்த செப்பேட்டுக்கு உரிமையாளரான அந்த ஒருவரின் பெயர் மட்டும் பதிவாகவில்லை..


செப்பேட்டை வாசித்த கோபிநாத ராவ்.. செப்பேட்டு விபரங்களை
Epigraphia indica vol 15 இல் வெளியிட்டார்..
இந்த செப்பேடுதான் இராஜராஜனின் தந்தை சுந்தரச்சோழன்  கொடுத்த அன்பில் செப்பேடு.
இந்த செப்பேடு தனக்குக் கிடைத்த வழியை கோபிநாதராவ் இவ்வாறு எழுதுகிறார்..
Some decades ago a sudra while digging the foundation of a portion of his house....
ஒரு சூத்திரன் தனது வீட்டைத் தோண்டும்போது இச் செப்பேடு கிடைத்தது..
அந்த ஒருவர் பெயர் சூத்திரன்...
அந்த சூத்திரன், செப்பேட்டை லட்சுமணச் செட்டியாரிடம் தர ,
அவர் உவே.சாமிநாத ஐயரிடம் தர,
 அவர் கோபிநாதராவிடம் தந்தார்..
என்ன இது...?
லட்சுமணச் செட்டியார்.
உ.வே.சாமிநாத ஐயர்.
T.a.கோபிநாத ராவ்..
ஆனால்...
செப்பேட்டுக்குச் சொந்தகாரரின்
 பெயர் சூத்திரன்..
1919 -20 ஆம் ஆண்டு வெளியான எபிகிராபியா தொல்லியல் ஆவணத்தில் அன்பில் செப்பேடு ஒரு சூத்திரனிடமிருந்து கிடைத்தாகவே பதிவு செய்யப்பட்டது.
தனக்கு செப்பேடு கிடைக்க காரணமாயிருந்த மூவரை இவ்வாறு கூறுகிறார்.
1.சூத்திரன் .
2. R.S.L.லட்சுமண செட்டியார்.
3.ஸ்ரீ மகா மகோபாத்தியாய
S.சுவாமிநாத ஐயர்.
ஒரு சில குறிப்பிட்ட சமூகத்தினரைத் தவிர பெரும்பாலான சமூகத்தினரின் பொதுப்பெயர் சூத்திரன்..அவர்களது பெயரை தொல்லியல் துறை கூட பதிவு செய்ய இயலாத நிர்பந்தம்..
தொடர்புடையவர்கள் மொத்தம் நான்குபேர்.
அதில் மூவரின் பெயர்கள் பதிவுசெய்யப்படுகிறது. மற்றொருரை சூத்திரன் என்றே பதிவு செய்யும் அவலம்.
இதுதான்..
1919 ஆம் ஆண்டு
கால  சமூக நீதி..
இன்றும் கூட அந்த செப்பேட்டு உரிமையாளர் பெயர் என்ன தெரியாது.
சூத்திரன் என்று மட்டுமே வரலாற்று ஆவணமாக பதிவு உள்ளது.
 அன்பில் செப்பேடு இன்று இருக்குமிடமும் யாருக்கும் தெரியவில்லை.. அதுவும் ஆவணப்படுத்தல் மட்டுமே.
இன்றைய சூழலில் இதுபோல் சாத்தியமில்லை.  ஆனாலும் அன்றைய சூழல் இதுதான்.
கடந்துபோன கசப்பான நிகழ்வுகளை
மீண்டும் மீண்டும் நினைவு
படுத்துவதான் வரலாறா.?
 என்ற கேள்வி எழுந்தாலும்..
கசப்பான நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்க நினைவூட்டுதலும் அவசியமே..
அன்புடன்..
மா.மாரிராஜன்..

 May be an image of text

கருத்துகள் இல்லை: