திங்கள், 18 மார்ச், 2019

பா.ம.க வேட்பாளர் பட்டியல் : அன்புமணி தர்மபுரி. வடிவேல் ராவணன் விழுப்புரம் , ஏ.கே. மூர்த்தி அரக்கோணம். சாம் பால் மத்தியச் சென்னை , கோவிந்தசாமி கடலூர்

பா.ம.க - அ.தி.மு.க கூட்டணிvikatan.com : விஷ்ணுராஜ் சௌ மக்களவைத் தேர்தல்கள் நெருங்க உள்ள நிலையில் இந்தியா முழுவதும் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் அடுத்தடுத்து கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். ‘கழகங்களோடு இனி கூட்டணி  இல்லை’ எனச் சொல்லி அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தி கடந்த சட்டமன்ற தேர்தலைச் சந்தித்த பா.ம.க. இந்த மக்களைவைத் தேர்தலில் அ.தி.மு.க உடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றது.
இந்தக் கூட்டணியில் பா.ம.க-வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பா.ம.க முதல் கட்டமாக ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பா.ம.க மாநில இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் தர்மபுரி தொகுதியிலும், விடுதலைச் சிறுத்தைகளும், பா.ம.க நேரடி போட்டியில் உள்ள விழுப்புரம் தொகுதியில் வடிவேல் ராவணன், பா.ம.கவின் துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் ரயில்வே இணை அமைச்சருமான ஏ.கே. மூர்த்தி அரக்கோணம் தொகுதியிலும், சாம் பால் மத்தியச் சென்னைத் தொகுதியிலும், கோவிந்தசாமி கடலூர் தொகுதியிலும்  போட்டியிடுகின்றனர். பா.ம.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 தொகுதிகளில் திண்டுக்கல் மற்றும் ஶ்ரீபெரும்புதூர் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இரண்டாம் கட்டமாக வெளியிட உள்ளனர்.

கருத்துகள் இல்லை: