சனி, 23 மார்ச், 2019

தொல்.திருமாவளவன் .. இந்தியாவின் நம்பிக்கை.. Tirumavalavan is a Parliamentarian in all aspects.

Shalin maria lawrence : மக்கள் தலைவர் திருமாவளவன் ஏன் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்?
நாம் நிறைய எம்பிக்களை பார்த்திருப்போம். ஓட்டு கேட்க வருவார்கள், பின்பு தொகுதி பக்கம் பார்க்கவே முடியாது. அவ்வவ்போது சென்னை விமான நிலைய வாசலில் பத்து மைக்குகள் முன்பு பேசுவார்கள். பெரிய பெரிய விழாக்களில் கலந்து கொள்வார்கள். டெல்லிக்கு போய் அங்கே வித விதமாக ஸ்வெட்டர் போட்டு போட்டோவில் நிற்பார்கள். எப்பொழுதாவது மக்களவையில் ஏதாவது ஒரு கேள்வி மேம்போக்காக கேட்டு முடித்துவிட்டு அமர்ந்து உறங்குவார்கள்.
இன்னும் சொல்லப்போனால் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை, பாராளுமன்றத்திற்கு சரியாக செல்லாத, வேலை செய்யாத எம்பிக்கள் பட்டியல் வரும், அதில் சிரித்து கொண்டிருப்பார்கள். இந்த வருடம் அப்படி மிகவும் மோசமான (மாங்கா) எம்பி என்று பெயரெடுத்தவர் ஒருவர் இதே தமிழகத்தில் தான் இருக்கிறார்.
இந்தியாவில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கடமைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
முதலில் பாராளுமன்றதிற்கு ஒழுங்காக செல்லவேண்டும். Attendance.
இரண்டாவது ஆக்கப்பூர்வமான நல்ல பல கேள்விகளை எழுப்ப வேண்டும். Participation.
மூன்றாவது மிக முக்கியமானது பாராளுமன்றத்தில் நடக்கும் முக்கிய விவாதங்களில் தெளிவோடும் முழு மூச்சோடும் கலந்துகொண்டு ஆதாரப்பூர்வமாக அறிவுப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்.

மத்திய அரசாங்கம் கொண்டு வரும் புது சட்டங்கள், சட்ட திருத்தங்கள், தீர்மானங்களை ஆராய்ந்து எது மக்களுக்கு நல்லது சிறந்தது, எது இல்லை என்று விவாதித்து அதற்கேற்றாற்போல் வாக்களிக்க வேண்டும். Function.
பின்பு தங்கள் தொகுதி மற்றும் மாநிலத்திற்கு என்ன தேவை, அந்த மக்களின் பிரச்சனைகள் என்ன என்று அது குறித்து மக்களவையில் விவாதங்களை எழுப்பி அதற்கு தீர்வு காண வேண்டும். Eelctoral responsibility.
இத்தனை குணமும் இருந்தால்தான் அந்த உறுப்பினர் ஒரு சிறந்த பாராளுமன்றவாதியாக கருதப்படுவார். A Good Parliamentarian.
மேலே சொன்ன நல்ல மக்களவை உறுப்பினருக்கான அத்தனை தகுதியும் தலைவர் திருமாவிடம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
Tirumavalavan is a Parliamentarian in all aspects.
ஏன் அப்படி சொல்கிறோம்?
திருமா, ஒரு அயராத உழைப்பாளி. ஒரு நாளைக்கு குறைந்தது 100 கிலோமீட்டர்கள் சாலை வழி பயணம் செய்கிறார். தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சொல்கிறார், மக்களை சந்திக்கிறார், பிரச்சனைகளை கேட்டறிகிறார், தெரிந்து கொள்கிறார். மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராட்டங்கள் நடத்துகிறார். மக்கள் விரோத போக்குகளுக்கு எதிராக கடுமையான கண்டன குரல் எழுப்புகிறார், தூக்கத்தில் இருந்து எழுப்பி தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட ஊரின் பெயரை சொல்லி அங்கே என்ன பிரச்சனை என்று கேட்டால் சொல்வார் அவர்.
சுறுசுறுப்பானவர். கூப்பிட்ட குரலுக்கு சிதம்பரத்தில் வந்து நிற்பார். கூப்பிடும் முன்னே மக்கள் பிரச்சனைகளை முன்கூட்டியே கணித்தும் வருவார். தீர்வு காணுவார்.
டெல்லியும் அவருக்கு தொட்டு விடும் தூரம்தான்.
எளிய மனிதனுக்கு உழைக்க சொல்லி கொடுக்க வேண்டுமா என்ன?
வாத திறமையில் சிறந்தவர் திருமா.
மேடை பேச்சு பலருக்கு வரலாம். ஆனால் அறிவார்ந்த வாத திறமை என்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் அடிவரை சென்று ஆராய்ந்து சாதக பாதகங்களை புரிந்துகொண்டு எது மக்களுக்கு நல்லது, எது நல்லது இல்லை என்று தன் கருத்தை சுத்தியல் அடித்தாற்போல் எடுத்து வைத்து எதிரியை கலங்க செய்வதில் வல்லவர் திருமா. ஆக மக்களவையில் எந்த தீர்மானம், சட்ட திருத்தம் எதுவாக இருந்தாலும் தன் வாத திறமையால் வாக்கு அளிப்பவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய திறன் அவருக்கு இருக்கிறது. ஏற்கனவே பல மக்கள் பிரச்சனைகளை மக்களவையில் எழுப்பி சிங்கம் போல அவர் கர்ஜித்தது மக்களுக்கு ஞாபகம் இருக்கும். சொல் வீச்சும், மொழி ஆளுமையும், கற்ற அறிவும் அவருக்கு பக்க பலம்.
ஒடுக்கப்பட்ட ஒருவருக்கு நியாயத்திற்காக வாதாட சொல்லி கொடுக்கவா வேண்டும்?
தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பிரச்சனைகளை புரிந்து தெளிவோடு இருக்கிறார். தன்னை தமிழ்நாட்டின் பிரதிநியாக மட்டுமல்லாமல் இந்த இந்திய தேசத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட அத்தனை மக்களுக்கும் பிரதிநிதியாக தன் செயல்கள் மூலம் வெளிப்படுத்துகிறார்.
காஷ்மீர் பிரச்சனை என்றால் "காஷ்மீர் பியூட்டிபுள் காஷ்மீர்" என்று முன்னாள் எம்பிக்கள் போல் பாடல் பாடிவிட்டு நேரத்தையும் ஆக்கத்தையும் வீணாக்க மாட்டார். மாறாக காஷ்மீரின் பிரச்னையை வரலாறு, நிகழ்கால அரசியல், எதிர்கால பிரச்சனைகள், மனித உரிமை என்று 360 degree கோணத்தில் விவாதிப்பார் திருமா.
திருமா இந்தியாவின் நம்பிக்கை.
முக்கியமான விஷயம் தொகுதி மக்கள் திருமாவை ஜெயித்த பின்பும் எளிதாக சந்திக்கலாம், பேசலாம், பிரச்சனைகளை விவாதித்து தீர்க்கலாம்.
நாடாளுமன்றத்திற்கு சென்றாலும் மக்களை அரசர்களாக கருத்துபவர் திருமா. மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்கின்ற சித்தாந்தத்தை உணர்ந்து வாழ்வில் நடைமுறை படுத்துபவர் திருமா. அரசியலமைப்பானவர்.
இந்திய அரசியலமைப்பின் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நான்கு தூண்களின் மேல் நம்பிக்கை வைத்து அரசியலில் இறங்கியவர் தலைவர் திருமா. இந்திய அரசியலமைப்பை தன் புனித நூலாக வணங்குபவர்.
தேர்தெடுத்த ஐந்தாண்டு காலத்திற்கும் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பின் துணையோடு மக்கள் அரசியல் பேசுவார், செய்வார்.
இப்படி சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தி அரசியல் வழியே மக்கள் பணி செய்ய வாழும் திருமா போன்றவர்கள்தான் நாடாளுமன்றங்களில் நம் குரலாய் ஒலித்திட வேண்டு

கருத்துகள் இல்லை: