வெள்ளி, 22 மார்ச், 2019

உலகில் மகிழ்ச்சியான நாடுகளில் இந்தியா 140 வது இடம் ..

தினமணி : மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியலில் இந்த ஆண்டில் இந்தியா 7 இடங்கள் பின்தங்கியுள்ளது. சர்வதேச அளவில் ஒவ்வொரு
நாட்டிலும் மக்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதை மதிப்பீடு செய்து ஐ.நா. சார்பில் ஆண்டுதோறும் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில்
இந்தியா 140-ஆவது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் 67 ஆவது இடத்தில் உள்ளது.
இலங்கை 130-ஆவது இடத்திலும்,
வங்கதேசம் 125-ஆவது இடத்திலும்,
பூடான் 95-ஆவது இடத்திலும் உள்ளன. கடந்த ஆண்டு இந்தப்பட்டியலில் நமது நாடு 133-ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில்
இப்பட்டியிலில் மொத்தம் 156 நாடுகள் உள்ளன. பின்லாந்து, டென்மார்க், நார்வே ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.
பின்லாந்து தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஐஸ்லாந்து, நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன், நியூஸிலாந்து, கனடா, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் முறையே 4 முதல் 10 இடங்களில் உள்ளன. ஆப்கானிஸ்தான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, தெற்கு சூடான் ஆகிய நாடுகள் கடைசி மூன்று இடங்களில் உள்ளன.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் எதுவும் முதல் 10 இடத்தில் வரவில்லை. அமெரிக்கா 19-ஆவது இடத்தையும், பிரிட்டன் 15-ஆவது இடத்தையும், ஜெர்மனி 17-ஆவது இடத்தையும், ஜப்பான் 58-ஆவது இடத்தையும், ரஷியா 68-ஆவது இடத்தையும், சீனா 93-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

கருத்துகள் இல்லை: