ஞாயிறு, 17 மார்ச், 2019

மக்களவை , சட்டசபை தேர்தல்களுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு....

zeenews.india.com : மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்......
மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலையும் சந்திக்க திமுக, காங்கிரஸ், ம.தி.மு.க. , கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐ.ஜே.க. ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன.
இதில் திமுக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா இரு தொகுதிகளிலும், இதர கட்சிகள் தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை DMK கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியலை வெளியிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிடவுள்ள திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மாலை வெளியிடவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது மக்களவை தேர்தலில் போட்டியிடவுள்ள திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. திமுக வேட்பாளர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது....
வட சென்னை - கலாநிதி வீராசாமி
தென்சென்னை - த. சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன்
மத்திய சென்னை - தயாநிதி மாறன்
ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு
காஞ்சிபுரம் - செல்வம்
அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்
வேலூர் - கதிர் ஆனந்த்
தருமபுரி - எஸ்.செந்தில்குமார்
திருவண்ணாமலை - அண்ணாதுரை
கள்ளக்குறிச்சி - கவுதமசிகாமணி

சேலம் - எஸ்.ஆர்.பார்த்திபன்
நீலகிரி - ஆ.ராசா
பொள்ளாச்சி - குல.சண்முகசுந்தரம்
திண்டுக்கல் - வேலுச்சாமி
கடலூர் - ரமேஷ்
மயிலாடுதுறை - செ.ராமலிங்கம்
தஞ்சாவூர் - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்
தூத்துக்குடி - கனிமொழி
தென்காசி - தனுஷ்குமார்
திருநெல்வேலி - ஞானதிரவியம்
இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்........ 
பூந்தமல்லி - கிருஷ்ணசாமி
பெரம்பூர் - ஆர்.டி. சேகர்
திருப்போரூர் - எஸ்.ஆர்.இளையவர்மன்
சோழிங்கர் - அசோகன்
குடியாத்தம் - எஸ். காத்தவராயன்
ஆம்பூர் - ஆ. செ. வில்வநாதன்
ஓசூர் - சத்யா
பாப்பிரெட்டிப்பட்டி - மணி
அரூர் - கிருஷ்ணகுமார்
நிலக்கோட்டை - சவுந்திரபாண்டியன்
திருவாரூர் - பூண்டி கலைவாணன்
தஞ்சாவூர் - நீலமேகம்
மானாமதுரை - இலக்கியதாசன்
ஆண்டிப்பட்டி - ஏ. மகாராஜன்
பெரியகுளம் - கே.எஸ். சரவணகுமார்
சாத்தூர் - சீனிவாசன்
பரமக்குடி - சம்பத்குமார்
விளாத்திகுளம் - ஜெயக்குமார்

கருத்துகள் இல்லை: