வியாழன், 7 பிப்ரவரி, 2019

ராமலிங்கம் கொலை .. மிகப்பெரிய ஜாதி மத கலவரத்திற்கு திட்டமிட்டு பிரசாரம் .. மக்களே ஏமாந்து விடாதீர்கள்

Karuna Kumuthan : தஞ்சை பகுதிக்கு உட்பட்ட திருபுவனத்தில் ஒரு முஸ்லீம் மதபோதகருடன், ஒரு இந்து இயக்க நபர் வாய் தகராறில் ஈடுபடுகிறார். அது பாஜக மற்றும் அமமுக, அதிமுக whatsapp குழுக்களில் வேகமாக பரப்பப்படுகிறது.
இன்று அந்த இந்து இயக்க நபர் வெட்டிக்கொலை செய்யப்படுகிறார். இதனால் தஞ்சை பகுதியில் பதற்றம்.
முகநூலிலும் வாட்சப்பிலும் இச்செய்தி பாஜக, அமமுக, பாமக, அதிமுக நபர்களால் தீவிரமாக பகிரப்பட்டு, இதனை #திமுக விற்கு எதிராக, திசைதிருப்பும் வேலையில் இறங்குவதற்கு பார்ப்பனீய அடிமைகள் முயற்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
சாதி ரீதியாக நாம் இணைய வேண்டும்
மத ரீதியாக நாம் இணைய வேண்டும் என்றும் ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த தொடர்ச்சிகளை பார்க்கையில், தேர்தலை ஒட்டியோ, அல்லது அதற்கு முன்னரோ தமிழகத்தில் மிகப்பெரிய ஜாதி அல்லது மத கலவரங்களை ஏற்படுத்த இவர்கள் திட்டமிட்டு செயல்படுகின்றனரோ என்று சந்தேகம் ஏற்படுகிறது.
கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக தர்மபுரியில், திவ்யா என்பவரின் தந்தை மர்ம மரணம், தொடர்ந்த சாதி கலவரங்கள், அதைத் தொடர்ந்து இளவரசன் மர்ம மரணம் போன்ற நிகழ்வுகளை நினைவுபடுத்தி பார்க்கவும்.
அக்கலவரத்தின் வாயிலாக தர்மபுரியில் வெற்றிபெற்று மக்களவை சென்ற அன்புமணி தான் தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் மிக மோசமான உறுப்பினர் என்ற பட்டத்தை பெற்றவர் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
தமிழகத்திற்கு சாதி கலவரம் புதிதல்ல என்றாலும் பெரியளவிலான மதக்கலவரங்கள் நடந்தயேில்லை. குமரியின் மண்டைக்காடு கலவரம் கூட நாடாரல்லாத கிருஷ்ணவக சமூகத்தினரால் செயற்கையாக உருவாக்கப்பட்டது தான் என்று சமீபத்தில் மிகப் பரபரப்பாக பேசப்பட்டது நினைவிருக்கும்.

அதே formulaவை கொண்டு தற்போது அதிமுகவினர் பாமக & பாஜகவுடன் சேர்ந்து கொண்டு மதகலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக அச்சம் ஏற்படுகிறது.
கொல்லப்பட்டவர் பாமக பிரமுகர் என்று சொல்லப்படும் நிலையில் பாமக தலைவர்களிடமிருந்து இந்த நிமிடம் வரை எந்த கண்டனமும் வராத நிலையில் ஊருக்கு முந்திக்கொண்டு எச்.ராஜா கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இவர்களே தங்களில் ஒருவரை ஆள் வைத்து கொல்வதும், அதை காரணம் காட்டி கலவரம் செய்து பிரியாணி, செல்போன் என்று திருடுவதை எல்லாம் நாம் கோவையில் பார்த்திருக்கிறோம்.
எனவே தமிழக நலனில் அக்கறையுள்ளவர்கள் #whatsapp forward , #Facebook பக்கங்களில் "#உடனே_பகிரவும்" என்று அனுப்பப்படும் செய்திகளை எக்காரணம் கொண்டு பரப்பிடாதீர்கள்.
காவல்துறை இருக்கிறது. குற்றவாளிகள் யாராகயிருந்தாலும் எந்த மதம்/சாதியை சேர்ந்தவராகயிருந்தாலும் கண்டுபிடித்து தாராளமாக தண்டனை வாங்கி கொடுக்கட்டும்.
நீங்கள் இந்து மதத்தை நேசிப்பவராக இருக்கலாம், உங்கள் அளவில் சாதிபற்றுடன் கூட இருக்கலாம், அதெல்லாம் உங்கள் தனி உரிமைகள்.
ஆனால் மத ரீதியான, சாதி ரீதியான வன்முறையை தூண்டும் கருத்துக்களை கண்டால், அதனை மறந்தும் கூட ஊக்குவிக்க வேண்டாம். இந்த பாவிகளின் சூழ்ச்சிக்கு தயவு செய்து இரையாகி தமிழகத்தின் நிம்மதியாய் குலைத்திட துணை போக வேண்டாம்.
அதிமுக, அமமூக, பாஜக, பாமக தனித்தனியாக வந்தாலும், சேர்ந்து வந்தாலும் மக்களை நேரடியாக எதிர்நோக்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.
கேரளாவில் ஐய்யப்பனை வைத்து இவர்கள் மூட்ட நினைத்த கலவரம் எப்படி முற்றிலும் முறியடிக்கப்பட்டு மூக்குடைப்பட்டு போனார்களோ அப்படி தமிழகத்திலும் நாம் மூக்குடைக்க வேண்டும்.
மோடி தலைமையிலான காவிகளாலும் அவர் தம் அடிபணிந்து நிற்கும் பாவிகளாலும் எந்த நாளும் எவ்வகையிலும் தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.
தேர்தல் காலம்.
கவனமுடன் இருப்பீர்...

கருத்துகள் இல்லை: