வியாழன், 24 மே, 2018

கொல்லப்பட்டவர்கள் 26 பேர்.... ஆட்சியர் அலுவலகத்துக்குள் அழைத்து கொல்லப்பட்டனர் .. 26 உடல்களும் தூத்துக்குடி அரசு மருத்தவமனையில்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கையசைத்து உள்ளே வாருங்கள் என்று அழைத்ததே காவல்துறைதான், நம்பிப்போன மக்கள் பிரதிநிதிகளைத்தான் போலீஸ் சுட்டுக்கொன்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும், 15 பேர் இப்படி சுட்டுக்கொல்லப்பட்டார்கள். 
Troll Trousers 2.0 : தூத்துக்குடி அரசு மருத்துவமனை பகுதியில் இருந்து கிடைத்த அப்டேட்
மதியம் 1 மணி, 24-5-2018
1. துணை ராணுவம் எதுவும் வரவில்லை.
2. மற்றமாவட்ட காவல்துறைப்படைகள் தான் அதிகளவில் குவிக்கப்பட்டிருக்கின்றன.
3. நேற்றிரவு மட்டும் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காவல்துறையினரால் அழைத்துச்செல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் காவல்துறை கணக்கில் 132தான் சொல்லப்படுகிறது. மீதமுள்ள நபர்களை சட்டப்படி கைது செய்யவில்லை, எனவே இந்த சட்டமீறலை நிறுத்தவேண்டும்.
4. காவல்துறை அழைத்துச்சென்றவர்கள் போக, 100க்கும் மேற்பட்ட இளைஞர்களைக் காணவில்லை.
5. ஸ்டெர்லைட்டுக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டாலும், Sterlite நிறுவனமே தனியாக 160மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் யூனிட் வைத்திருக்கிறது. (SESA Sterlite) எனவே இது கண்துடைப்பு.
6. காவல்துறைதான் வதந்திகளை கிளப்புகிறது, நேற்றிரவு காவலர் 2 பேர் வெட்டப்பட்டதாக, குண்டு வீசப்பட்டதாக சொல்வது வதந்தி, அப்படி யாரும் செய்யவில்லை.
7. இணையம் இருந்தால் உண்மை வீடியோக்களைப் பகிரலாம், இல்லாததால் எங்கள் பக்க உண்மைகளைப் பகிர முடியவில்லை, அனைவரும் பயந்துபோய் பதுங்கியிருக்கிறோம்.
8. இறந்தவர்கள் எண்ணிக்கை 26 பேர். 26 உடல்களும் தூத்துக்குடி அரசுமருத்தவமனையில் இருக்கிறது, ஆனால் உறவினர்கள் பார்க்க அனுமதி மறுக்கப்படுகிறது.
9. ஒவ்வொரு பகுதி மக்கள் பிரதிநிதியும் அழைத்துப்பேசினாலே பிரச்சினை நின்றுவிடும், ஆனால் காவல்துறையை நம்பிப்போகமுடியவில்லை.
10. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கையசைத்து உள்ளே வாருங்கள் என்று அழைத்ததே காவல்துறைதான், நம்பிப்போன மக்கள் பிரதிநிதிகளைத்தான் போலீஸ் சுட்டுக்கொன்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும், 15 பேர் இப்படி சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

கருத்துகள் இல்லை: