வெள்ளி, 25 மே, 2018

சீமான் .. தப்பித்தவறிக் கூட பேசாத வார்த்தை லைக்கா

Shankar A : தம்பிகளை அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி ?
ப்ரொபைல் போட்டோவுல முறுக்கா நிப்பாங்க.
கவர் பிக்சரா, ஈழ படுகொலை போட்டோ, இல்லன்னா, விழித்தெழு தமிழா இது போன்ற வாசகங்கள் இருக்கும்.
பழைய சித்த வைத்திய குறிப்புகளை போட்டு, முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்லன்னு போஸ்ட் போட்ருப்பாங்க.
மவுண்ட் ரோட்ல ஒரு பஸ் இடிச்சு ரெண்டு பேரு செத்துட்டாங்கன்னு செய்தி வந்தாக் கூட, நிச்சயம் அந்த ட்ரைவர் வடுக வந்தேறியாத்தான் இருப்பான். தமிழினம் அழிக்கப்படுகிறதுன்னு சொல்லுவாங்க.
எதுத்து பேசறவன் எவனா இருந்தாலும் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பாங்க.
சீமானின் உரை வீடியோக்களை பகிர்ந்து, திமுக காரனுங்க இதோட செத்துடுங்கடான்னு போட்ருப்பாங்க.
தமிழன் ஏமாந்தது போதும். இத்தோடு ஒழியட்டும் போலி திராவிட அரசியல்னு அடிக்கடி போடுவாங்க.
இன்னும் தீவிரமான தம்பிகள், பெருஞ்சித்திரனார் படம் வைச்சிருப்பாங்க.
பிரபாகரனைப் பத்தி யாரு எங்க நல்லா போஸ்ட் போட்ருந்தா, அவன் ஒருவன்தான் வீரன். தமிழினத்தை வாழ்விக்க வந்தவன் னு கமென்ட் போடுவாங்க.
நாம் தமிழர் ஒன்றே மாற்றுன்னு அடிக்கடி போஸ்ட் போட்டு அவங்களே திருப்தி பட்டுக்குவாங்க.
சீமானை பத்தி யாரு தப்பா போஸ்ட் போட்டாலும், நேரா அந்த போஸ்டுக்கு போயின்னு வண்டை வண்டையா திட்டுவானுங்க. திட்டி முடிச்சிட்டு, அவங்க பேஜுக்கு போயி, தமிழ்க் கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்பதுன்னு ஹாயா பேசிக்கிட்டு இருப்பாங்க.

பஸ்சுல லேசா கண்ணசந்தா கூட, சீமான் கோட்டையில கொடியேத்துற மாதிரியே கனவு காணுவாங்க.
சில அப்பாவி தம்பிகள், மாடு மேய்த்து முடித்து விட்டு, வங்கியில் அரசு ஊதியம் பெறுவதாக கனவு காணுவார்கள்.
இன்னும் கொஞ்சம் மொரட்டுத்தனமான தம்பிங்க, சீமான் தலைமையில் கர்நாடகத்து மேல தமிழ் ராணுவம் போர் தொடுக்கப் போறதா கனவு காணுவாங்க. அந்த போரில் ஏகே 74 துப்பாக்கி மட்டுமே பயன்படுத்தப்படும்.
ஸ்டெர்லைட்டை தமிழ் மண்ணில் இருந்து வேரோடு அகற்ற வேண்டும்னு ஆவேசமா போஸ்ட் போடுவாங்க.
ஸ்டெர்லைட் மாதிரியே பூமியை பாழ்படுத்துற வைகுண்டராஜனைப் பத்தி பேசுனா பம்முவானுங்க.
டீ கடையில் டீ குடித்து விட்டு, தமிழனால ஒரு சாதாரண டீக்கடை கூட வைக்க முடியலை. அதையும் மலையாளிதான் வைக்கிறான்னு பேசிக் கொள்வார்கள்.
பேங்களுர் அய்யங்கார் பேக்கரியைப் பார்த்தாலே முறைப்பார்கள்.
கர்நாடகா பேங்க்கைப் பார்த்து, இது போல நாம் என்று தமிழ் வங்கியை கர்நாடகாவில் திறப்பது என்று பேங்க் வாசலிலேயே நின்ற 10 நிமிடம் யோசிப்பார்கள்.
தம்பிகளுக்கு அலர்ஜியான வார்த்தை நோட்டா.
தம்பிகளுக்கு வெறுக்கும் வார்த்தை டெப்பாசிட்.
பிடித்த உணவு ஆமைக்கறி
தர்மசங்கடப்படுத்தும் வார்த்தை முன்ஜாமீன்.
அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை ஈழம்.
தப்பித்தவறிக் கூட பேசாத வார்த்தை லைக்கா

1 கருத்து:

Dravidian சொன்னது…

அருமையான பதிவு Shankar A-அவர்களே, சீமான் தம்பிகளை சரியாக புரிந்து வைத்திருக்கிறீர்கள்,