minnampalam :உலகின்
முதல் பத்து செல்வச் செழிப்பு மிக்க நாடுகளைக் கண்டறிய
ஏ.எஃப்.ஆர். ஆசிய
வங்கி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வு தனிநபர் வருமானத்தின்
அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதில், இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளதாகக்
கண்டறியப்பட்டுள்ளது.
ஏ.எஃப்.ஆர்.ஆசிய வங்கி மேற்கொண்ட ஆய்வில், 62,584 பில்லியன் டாலர்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 24,803 பில்லியன் டாலர்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 19,522 பில்லியன் டாலர்களுடன் ஜப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளன. நான்காவது இடத்தில் 9,919 பில்லியன் டாலர்களுடன் இங்கிலாந்தும், 9,660 பில்லியன் டாலர்களுடன் ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும் உள்ளன. 8,230 பில்லியன் டாலர்களுடன் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.
கனடா (6,393 பில்லியன் டாலர்கள்), ஆஸ்திரேலியா (6,142 பில்லியன் டாலர்கள்), பிரான்ஸ் (6,649 பில்லியன் டாலர்கள்), இத்தாலி (4,276 பில்லியன் டாலர்கள்) உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு அடுத்த நிலையில் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் சொத்து மதிப்பீடு 200 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான தொழில் முதலீட்டாளர்கள், சிறந்த கல்விமுறை, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, மருத்துவத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றின் வளர்ச்சி காரணமாக இந்தியாவின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தப் பட்டியலில் இந்தியா நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தைப் பிடிக்கும் என்றும், ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்து பத்தாண்டுகளில் 2027ஆம் ஆண்டில் சீனாவின் சொத்துக்களின் மதிப்பு 69,449 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவின் சொத்து மதிப்பு 75,101 பில்லியன் டாலர்களாக இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளில், ஆஸ்திரேலியா கனடாவை முந்தி, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ள இடத்திற்கு நிகராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய சொத்துக்களின் மதிப்பு 50 சதவிகிதமாக உயரும். வேகமாக வளர்ந்துவரும் செல்வந்த சந்தைகளில் இலங்கை, இந்தியா, வியட்நாம், சீனா, மொரிஷியஸ் நாடுகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றன எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக