அதற்கு பதிலளித்து பேசும்போது, புராணக்
கதையில் வரும் மகிசாசுரனை, துர்க்கை கொன்ற கதையை விளக்கினார் ஸ்மிருதி இரானி. துர்க்கையை நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர். ஆனால், மகிசாசுரனுக்கு ஆதரவாக, மாணவர்கள் சிலர், 2004ல் நிகழ்ச்சி நடத்தியதாக, அப்போது வெளியிடப்பட்டதுண்டு பிரசுரங்களை காட்டி பேசினார்
ஸ்மிருதி.இந்தப் பிரச்னையை, அடுத்த ஆண்டு நடக்க உள்ள உத்தர பிரதேச தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிரான பிரசார கனையாக பயன்படுத்த, மாயாவதி யின் பகுஜன் சமாஜ் கட்சி திட்டமிட்டுள்ளது.
மகிசாசுரனை, உத்தர பிரதேசம் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள சில பழங்குடியின மக்கள் வணங்கி வருகின்றனர். தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக பா.ஜ., செயல்படுவதாக பிரசாரம் செய்யப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.
மார்ச், 15ம் தேதி, கட்சியின் நிறுவனர் கன்சிராமின் பிறந்த நாள்கொண்டாட்டத்தின்போதே, இதற்கு முன்னோட்டமாக, பா.ஜ.,வுக்கு எதிரான பிரசாரம் தொடங்கும் என கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
'வெறும் வாயையே மெல்லும் மாயாவதி, அவல் கிடைத்தால் சும்மா இருப்பாரா' என, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர் தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக