வெள்ளி, 4 மார்ச், 2016

விஜயதாரணி மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர்...அகில இந்திய மகிளா காங்கிரஸில் புதிய பதவி

சென்னை; காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆக விஜயதாரணி எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணியை, தமிழக காங்கிரஸ் மகளிர் அணித் தலைவராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் கட்சி மேலிடம் நியமித்தது.< இந்நிலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வாயிலில் மகளிர் காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்ட பேனரில் இருந்த விஜயதாரணியின் படத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் ஆதரவாளர்கள் சேதப்படுத்திய


இம்மோதலை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவனை நீக்கக்கோரி சோனியா, ராகுல் காந்திக்கு விஜய தாரணி கடிதம் எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்து இளங்கோவன், விஜயதாரணியை டெல்லிக்கு அழைத்து கட்சி மேலிடம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில், விஜயதாரணி தமிழக காங்கிரஸ் மகளிர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மறைந்த காங்கிரஸ் தலைவர் ஏ.எஸ்.பொன்னம்மாளின் பேத்தி ஜான்சிராணி நியமிக்கப்பட்டார். தனது பதவி பறிப்பு குறித்து கடும் அதிருப்தி அடைந்த விஜயதாரணி, திடீர் திருப்பமாக சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார் விஜயதாரணி.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  '' என் பதவி பறிக்கப்பட்டது அநியாயம். முதல்வரிடம் தொகுதிப் பிரச்னைகள் குறித்துப் பேசினேன். இதை கட்சி மேலிடத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன். உரிய விளக்கம் கிடைக்காவிட்டால் என்னை அங்கீகரிக்கும் கட்சியில் இருப்பேன்'' என்று தலைமைக்கு இன்னும் அதிர்ச்சி தந்தார் அவர்.
இது  காங்கிரஸ் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத் தொடர்ந்து  டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்துப் பேசினார் விஜயதாரணி.
இந்நிலையில் காங்கிரஸ் மேலிடம் இன்று அவரை அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆக நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக கட்சித்தலைவருடன் முரண்பட்டுள்ள நிலையில் கட்சியின் பிரபலம்  ஒருவரை தேர்தல் நேரத்தில் எதிரணியில் இடம்பெற விடுவது கட்சியின் வெற்றிவாய்ப்பை பாதிக்கும் என உணர்ந்த காங்கிரஸ் தலைமை,  யாருக்கும் எந்த சங்கடங்களும் ஏற்படாதவகையில்  விஜயதாரணியை அகில இந்திய அளவிலான பதவியில் அமர்த்தி இருப்பதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை: