
வெள்ளைக் கோட், கறுப்பு பேண்ட் அணிந்து நிறவேற்றுமையை
குறிப்பாலுணர்த்தியபடி மேடையில் தோன்றிய ஹாரிஸ், 'நல்ல வேளை, நிகழ்ச்சியைத்
தொகுத்து வழங்குபவர்களை வெள்ளையர்கள் யாரும் தேர்வு செய்யவில்லை. அப்படிச்
செய்திருந்தால் எனக்கு இந்த வாய்ப்புக் கூடக் கிடைத்திருக்காது!' என
அதிரடியாய்ச் சொல்ல, அரங்கம் அதிர்ந்தது.
இந்த ஆஸ்கர் விழாவை பல பிரபலங்கள் புறக்கணித்துவிட்டனர். குறிப்பாக வில்
ஸ்மித், ஜாடா பிங்கெட் ஸ்மித் போன்றோர். காரணம் இந்த நிறவெறிதான். க்றிஸ்
ஹாரிஸ் மட்டும் ஏன் புறக்கணிக்காமல் நிகழ்ச்சி நடந்தது வந்தது ஏன்?
அதற்கு அவர் அடித்த கமெண்ட்: "எப்படியும் ஆஸ்கர் விருது விழா நடக்கத்தான்
போகிறது. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளியும் இருக்காது. கிடைத்த இந்த
வேலையையும் ஒரு வெள்ளைக்காரனுக்கு விட்டுவிட வேண்டாமே என்றுதான் வந்தேன்"
என்றார். Read more /tamil.filmibeat.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக