ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

தேமுதிக ஏரியா விற்பனை மந்தம்...மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை

சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பாக, மாவட்டச் செயலாளர்களுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்து கூட்டணிகளை உறுதி செய்ய தயார் ஆகிவருகின்றன. வேட்பாளர் நேர்காணல், சீட் பேரம் என தேர்தல் களம் படுஜோரக உள்ளது. சில கட்சிகள் கூட்டணி குறித்து முடிவு எடுக்க முடியாமல் தவித்து வருகிறது. சட்டசபையில் எத்தனை சீட்டுக்கள் என்பதைவிட எவ்வளவு சூட்கேசுகள் என்பதில்தான் பெரிய கருத்து வேறுபாடு உள்ளதாக தொழிலதிபர்கள்  மூலம் தெரியவருகிறது. ஆரம்பத்தில் நல்ல விலைக்கு பேசப்பட்ட ஏரியாக்கள் எல்லாம் தற்போது அடிமாட்டு விலைக்கே பெரிய கட்சிகளும் பாஜகவும் பேரம் பேசுவதால் காந்தும் பிரேமாவும் அப்செட்...எல்லாம் சு.சாமியின் பேச்சை கேட்டு ரிலீஸ் தேதியை தள்ளிவச்சதால வந்த வினை..போதாக்குறைக்கு மத்திய அமைச்சு ராஜ்யசபா சீட்டு போன்ற ஏகப்பட்ட டிமாண்டுகளை வைக்க போக சாமி கோஷ்டி அதிமுக பக்கம் சாய்கிறது. ஏதாவது கிடைக்கிறதை வாங்கி கொண்டு சேரலாம் என்றாலும் அதுவும் ரொம்ப குறைஞ்ச விலைக்கு கேக்கிராய்ங்கான்னு பிரேமா உணர்ச்சி வசப்படுகிறாங்க அதாய்ன் ஜெயலலிதாவை அந்த காச்சு காச்சினாங்க...ஆனா அதுவும் பேக் பயராகிடுச்சு. கோபாலபுரம் ரசிகலியாம்...    
Dmdk dist secretaries meeting at party head office இந்த நிலையில் தேமுதிக தங்களது கூட்டணிக்கு வர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார். இதேபோல் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் விஜயகாந்துக்கு எங்கள் கூட்டணிக்கு வந்து விடுவார். அவருக்காக சில சமரசங்களை செய்து கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பாஜக தலைவர்களும் தங்களது பங்கிற்கு லோக்சபா தேர்தலைப் போலவே சட்டசபை தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் தேமுதிக இடம்பெறும் என்று கூறிவருகின்றனர். இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணியை இறுதி செய்ய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை தமிழ்நாட்டிற்கு அனுப்பியுள்ளார் அமித்ஷா. இந்நிலையில் நேற்று மாலை சென்னை வந்துள்ள பாஜக தமிழக பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து கூட்டணி குறித்து முக்கிய பேச்சு நடத்த உள்ளார். அப்போது விஜயகாந்த சில நிபந்தனைகளை விதிப்பார் என்று தெரிகிறது. குறிப்பாக தே.மு.தி.க. தலைமையில் கூட்டணி அமைய வேண்டும், தன்னை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் புதுச்சேரி மாநில கழக பொறுப்பாளர்கள் கலந்துகொண்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு விஜயகாந்த் தலைமை வகித்தார். பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலர் வி.சி.சந்திரகுமார், தலைமை நிலையச் செயலர் பார்த்தசாரதி, இளைஞரணிச் செயலர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் சில முடிவுகளை எடுத்துள்ளதாகவும் அது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் கலந்து ஆலோசிக்க இந்த கூட்டம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தேமுதிக வேட்பாளர் நேர்காணல் முடிந்த பிறகே விஜயகாந்த கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read more at/tamil.oneindia.com/n

கருத்துகள் இல்லை: