வெள்ளி, 4 மார்ச், 2016

பேரம் படிந்தது: 8 ம் தேதி முறைப்படி கூட்டணி அறிவிப்பு !

தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி பேச்சில் நீடித்த இழுபறிக்கு, கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தலையீடு காரணமாக, தீர்வு கிடைத்துள்ளது. அதனால், வரும், 8ம் தேதி, கருணாநிதியை, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்  முறைப்படி சந்தித்து, கூட்டணியை உறுதி செய்கிறார். சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., தலைமையில் அமையும் கூட்டணிக்கு, தே.மு.தி.க.,வை இழுக்க, கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும், முன்னாள் அமைச்சர்கள் சிலரும் தொடர் பேச்சு நடத்தினர். ஆனாலும், எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்தது.
இந்நிலையில், சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேடகர், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசினார். அப்போது, பா.ஜ., உடன் கூட்டணி அமைக்க விஜயகாந்த் தரப்பில், மூன்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதாவது,
* அ.தி.மு.க.,வுடன் எந்த உறவும் கிடையாது என, பா.ஜ., மேலிடம் அறிவிக்க வேண்டும் அதெப்படிங்க முடியும் ஏராளமான கொடுக்கல் வாங்கல்கள் இருக்கு...அவிங்ககிட்ட  41 எம்பீக்கள் இருக்கிறாய்ங்க, பகைசுகிட்டா மோடியால  ஆட்சியே  நடத்த முடுயாதுலே? இதெல்லாம் தெரிஞ்சுகிட்டே சும்மா கட்சிய  ஏலம்  விட்டீங்க.ஏரியா விற்பனை ஜோர் ..சரியான காரிய  கோமாளி நீங்க .

* என்னை முதல்வர் வேட்பாளராக, பிரதமர் மோடி அறிவிப்பதுடன், என்னை ஆதரித்து, தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும்
* எனக்கு விருப்பம் உள்ள கட்சியுடன் கூட்டணி அமைக்க அனுமதிக்க வேண்டும்.

இந்த மூன்று நிபந்தனைகளை முழுமையாக ஏற்க, பா.ஜ., தரப்பில் தயக்கம் காட்டப்பட்டது.
இதையறிந்த தி.மு.க., தரப்பு, மீண்டும்கூட்டணி பேச்சை தீவிரப்படுத்தியது. இம்முறை, கருணாநிதியின் குடும்ப உறுப்பினரும், தொழிலதிபருமான ஒருவரை களம் இறக்கினர். அந்த தொழிலதிபரும், விஜயகாந்தும், சென்னையில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் சந்தித்து, முதல் கட்ட பேச்சு நடத்தினர். இரண்டாம் கட்ட பேச்சு, படப்பையில் உள்ள தொழிலதிபரின் விருந்தினர் இல்லத்தில் நடந்தது.

மூன்றாம் கட்டமாக, பொருளாளர் ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர், தொழிலதிபரின் சகோதரர், விஜயகாந்த் ஆகியோர் கும்மிடிப்பூண்டி அருகில், 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள பண்ணை வீட்டில் சந்தித்து பேசியதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.வரும், 5ம் தேதி திருப்பதி செல்லும் விஜய காந்த், அங்கு தரிசனம் முடித்து சென்னை திரும்பியதும், கூட்டணி அறிவிப்பை வெளியிட உள்ளார். அனேகமாக, வரும், 8ம் தேதி நிறைந்த அமாவாசை நாள்என்பதால், அன்றைய தினம் கூட்டணியை உறுதி செய்ய, கருணாநிதியை முறைப்படி, விஜயகாந்த் சந்திப்பார் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

59 தொகுதிகள் உறுதி: தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:தி.மு.க., 150 தொகுதிகளில், போட்டியிட வேண்டும் என்பதில் கருணாநிதி உறுதியாக உள்ளார். அப்போது தான், 120 தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்பது, அவரது கணக்கு. இந்த கணக்கிலிருந்து ஒரு தொகுதியை கூட குறைக்க முடியாது.

காங்கிரஸ் கட்சிக்கு, 25 தொகுதிகள் வரை கொடுப்பதாக பேசப்பட்டு உள்ளது. எனவே, 175 தொகுதிகள் போக, மீதம், 59 தொகுதிகள் தான் உள்ளன. அதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமீம் அன்சாரி கட்சி, புதிய தமிழகம் கட்சிக்கு, 'சீட்' ஒதுக்க வேண்டியுள்ளது.

அதனால், உங்களுக்கு, 59 தொகுதிகளை ஒதுக்கி விட்டு, காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து, சிலவற்றை எடுத்து, மற்ற கட்சிகளுக்கு கொடுக்கிறோம் என, விஜயகாந்திடம் கூறப்பட்டுள்ளது. முன்னர், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற, பா.ம.க.,வுக்கு, ஒரு ராஜ்யசபா, 'சீட்' வழங்கியது போல, தே.மு.தி.க.,வுக்கும் தர முடிவாகி உள்ளது.

- நமது நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை: