திங்கள், 29 பிப்ரவரி, 2016

6.46 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்: ராஜேஷ் லக்கானி

வாக்காளர் பட்டியலில் இருந்து 6.46 லட்சம் பெயர்கள் நீக்கப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார். >வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர்கள், இறந்தவர்கள் பெயர்கள், ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ளதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சுமத்தினார்கள்.>இதைதைத் தொடர்ந்து. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியின் உத்தரவின்பேரில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிகள் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் நடத்தப்பட்டன.>இந்த பணி இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து 6.46 லட்சம் பெயர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜேஷ் லக்கானி செய்தியாளரிடம் கூறியதாவது:-க்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணியின் கீழ், இறந்த வாக்காளர்கள், இருமுறை பெயருள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு வருகின்றன.>இறந்த வாக்காளர்கள் என்ற அடிப்படையில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 483 பேரின் பெயர்கள் நீக்கப்பட்ட உள்ளன.வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ள பெயர்கள் என்ற அடிப்படையில், 2 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களும், ஒரே வாக்காளர் எண் கொண்டதாக அறியப்பட்ட 7 ஆயிரத்து 500 பேரின் பெயர்களும், பெயர்களை நீக்குவதற்காக படிவம் 7 ஐ அளித்த 97 ஆயிரம் பேரின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளன.>வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிகளின் அடிப்படையில் மட்டும் இதுவரை 6 லட்சத்து 46 ஆயிரத்து 983 பேரின் பெயர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.<>பெயர்களை நீக்குவதற்காக படிவம் 7 ஐ அதிகளவு அளித்தால், இந்த 6 லட்சத்து 46 ஆயிரம் என்ற எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.>தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.  வெப்துனியா.com

கருத்துகள் இல்லை: