ஞாயிறு, 6 நவம்பர், 2016

டொனால்ட் ட்ரம்ப்தான் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி என சீனா குரங்கு ஜோதிடம்


ஷாங்காய், ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவு பெறுவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அமெரிக்காவில் நவம்பர் 8–ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்ட்டியிடும் டொனால்டு டிரம்ப் (வயது 70) ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. அங்கு நடைபெறும் கருத்து கணிப் பில் வெற்றி பெறுவது யார் என்பதில் முக்கிய வேட்பாளர்களான ஹிலாரி யும், டொனால்டு டிரம்பும் மிக குறைந்த அளவு வித்தி யாசத்தில் உள்ளனர். அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என அறி வதில் உலகமே ஆவலாக உள்ளது. இந்த நிலையில் வெற்றி மகுடம் சூடி அதிபராவது யார் என சீனா குரங்கு ஜோதிடம் கூறியுள்ளது. சீனாவில் ஷியாங்கு உயிரியல் சுற்றுலா பூங்கா வில் ‘கெதா’ என்ற குரங்கு உள்ளது. இது இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஐரோப்பிய சாம் பியன் ஷிப் கால்பந்து போட்டி யில் கோப்பையை வெல்லப் போவது யார்? என்பதை துல்லியமாக கணித்து ஜோதிடம் கூறியது.


இது போன்று தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்லப்போவது யார் என்று சுற்றுலா பூங்கா ஊழியர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர். டொனால்டு டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டனின் ஆளுயர கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டன. பின்னர் அங்கு ‘கெதா’ என்ற ஜோதிட குரங்கு வர வழைக் கப்பட்டது.

பின்னர் அது டொனால்டு டிரம்ப் கட் அவுட்டுக்கு முத்தம் கொடுத்து அடுத்த அதிபர் என தேர்வு செய்தது. இத்தகவலை பூங்கா ஊழியர்கள் வெப்சைட்டில் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2010-ம் ஆண்டு நடந்து உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆக்டோபஸ் ஒன்று வெற்றி பெற போகும் அணியை சரியாக கணித்தது குறிப் பிடத்தக்கது.  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: