சனி, 17 ஜனவரி, 2015

10 வயது மகளை தனது வீட்டின் பின்புறம் உயிரோடு புதைக்க முயன்ற தந்தை! பெண்குழந்தையை பிடிக்கல்லியாம்?


இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- இந்தியா - வங்காள தேச எல்லையையொட்டியுள்ள திரிபுரா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில், தனது 10 வயது மகளை வீட்டின் பின்புறம் உயிரோடு புதைக்க அபுல் ஹுசைன் திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது மனைவி வீட்டில் இல்லாத போது, வீட்டின் பின்புறம் பள்ளம் ஒன்றை தோண்டினார். பின்னர் தனது மகளின் கைகளை கட்டிவிட்டு உயிரோடு பள்ளத்தில் மார்பளவு புதைத்துள்ளார். அப்போது, தனது மனைவி வீட்டிற்குள் வந்ததை அறிந்த அவர், பிறகு புதைக்கலாம் என்று கருதி ஒரு மூங்கில் கூடை மூலம் மகளின் தலையை மறைத்து வைத்துவிட்டு அவ்விடத்தை விட்டு சென்றார். ஆனால் சந்தேகத்திற்கிடமான சத்தம் எழவே வீட்டின் பின்புறம் சென்று பார்த்த அபுல் ஹுசைனின் மனைவி தனது மகள் உயிரோடு புதைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தனது அண்டை வீட்டில் உள்ளவர்கள் உதவியுடன் புதைத்து வைக்கப்பட்டு இருந்த மகளை மீட்ட அவர், இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதைதொடர்ந்து, அப்துல் ஹுசைன் மீது கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். பெண் குழந்தை பிடிக்காத காரணத்தால்  அபுல் ஹுசைன்  இந்த கொடூர செயலில் ஈடுபட்டார் என தெரிகிறது.dailythanthi.in

கருத்துகள் இல்லை: