சனி, 17 ஜனவரி, 2015

மக்டொனால்ட்ஸ் ! ஏழை சிறுவனை வெளியே இழுத்து தள்ளிய McDonalds throws street kid trying to buy snack

புனே நகரிலுல்ள மெக்டொனால்ட் ரெஸ்டாரண்டிற்கு குளிர்பானம் வாங்க வந்த ஏழை சிறுவனை ஊழியர் வெளியே இழுத்து வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது. புனே ஜேஎம் ரோடு பகுதியிலுள்ள மெக்டொனால்ட் ரெஸ்டாரண்ட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு தோழிகளுடன் சாப்பிட சென்றுள்ளார் இளம் பெண் ஒருவர். அப்போது ரெஸ்டாரண்ட் வெளியே நின்றிருந்த நடைபாதை குடியிருப்பில் வசிக்கும் ஏழை சிறுவன், எனக்கும் ஏதாவது குளிர்பானம் வாங்கித்தாருங்கள் என்று கேட்டுள்ளான்.  எனவே சிறுவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்ற அந்த பெண், ஆர்டர் செய்வதற்காக கியூ வரிசையில் சிறுவனோடு காத்திருந்தார். இதைப் பார்த்த மெக் டொனால்டு ஊழியர் ஒருவர் ஓடிவந்து, அந்த சிறுவனை பிடித்து வெளியே இழுத்துச் சென்றுள்ளார். இதைப்பார்த்ததும் அந்த பெண், தான்தான் சிறுவனை அழைத்து வந்ததாக கூறியுள்ளார். ஆனால், 'இதுபோன்றவர்களுக்கு' ரெஸ்டாரண்டில் இடமில்லை என்று ஹோட்டல் ஊழியர் கூறி சிறுவனை வெளியே தள்ளிவிட்டாராம்.
இருப்பினும், சிறுவனுக்காக பான்டா பிளாட் குளிர்பானத்தை வாங்கிச் சென்ற அந்த பெண் ஹோட்டலுக்கு வெளியில் வைத்து அவனுக்கு பருக கொடுத்துள்ளார். மேலும், சிறுவனோடு இருக்கும் போட்டோவையும் எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார் அந்த பெண். 'இதுபோன்றவர்களுக்கு இடமில்லை' என்பதற்கான அர்த்தம் எனக்கு தெரியவில்லை. சமத்துவ சமூகத்தில்தான் நாம் வாழுகிறோமா என்ற சந்தேகம் இந்த சம்பவத்தால் எனக்கு எழுந்தது என்று அப்பெண் கூறியுள்ளார். இந்த தகவல் இப்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்த ரெஸ்டாரண்ட் கடந்த ஆறு மாதங்களில் இதேபோல இரண்டாவது முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த விவகாரம் பற்றி மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிசிடம் நிருபர்கள் கேட்டபோது, அச்சம்பவம் குறித்து உரிய முறையில் தனக்கு இன்னும் தகவல் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: