தி மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை,
மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான, சமரச பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது.
அதன் ஒரு கட்டமாக, சென்னையில் நேற்று முன்தினம், தி.மு.க., தலைவர்
கருணாநிதியை, அழகிரி யின் மகள் சந்தித்து பேசி உள்ளார்.
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், பெங்களூருவுக்கு சென்றிருந்த நேரத்தில், இந்த சந்திப்பு சென்னையில் நடந்துள்ளது. இந்த சந்திப்பு நடந்தபோது, அழகிரியும் சென்னையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தாயார் தயாளுவை சந்திக்க, அழகிரி சென்னை வரும் தகவல், 2ம் தேதி வெளியாகியது. அதன்படி, 3ம் தேதி இரவு, 10:00 மணிக்கு அழகிரி சென்னை வந்தார். 4ம் தேதி காலையில் அவர், தயாளுவை சந்திக்க, கோபாலபுரம் வீட்டுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஸ்டாலினை தளபதி தலைவர் என்றெல்லாம் உசுப்பேத்தி விட்டவர்கள்தான் திமுகவின் முதல் எதிரிகள் . அவர்கள் தொகை கழகத்தில் அதிகமானது கழகத்தின் வரலாற்று சோகம் வாழ்ந்தாலும் ஏசும் வீழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா என்ற பாடல் சரியாக பொருந்துகிறது தி்முக விற்கு
ஆனால், அவர் கோபாலபுரம் செல்லவில்லை. அவருக்கு பதிலாக, அவரது மகள், கோபாலபுரம் வீட்டுக்கு சென்று, தயாளுவை, சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர்,கருணாநிதியை சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பும் பேச்சுவார்த்தையும், அழகிரி தரப்புக்கு உற்சாகத்தை தந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் இந்த நிகழ்வுகள் நடந்த வேளையில், ஸ்டாலின் பெங்களூருவில் தங்கியிருந்தார். அவரது சகோதரி செல்வி வீடு, அங்கே இருப்பதால், பேச்சுவார்த்தைக்காகவே அவர் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.ஆனால், கட்சி வட்டாரத்தில், தனிப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, அவர், பெங்களூரு சென்றிருந்ததாகவும், நேற்று இரவு, சென்னை திரும்பி விட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து, அறிவாலய வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
கட்சியில் சமீபத்திய நடவடிக்கைகளும், கருணாநிதியின் பேச்சும், ஸ்டாலினை அதிருப்தி அடைய செய்துள்ளன. தற்போது நடந்து வரும், உள்கட்சித் தேர்தலுக்கு பின், தலைமைப் பதவி நோக்கி செல்ல,ஸ்டாலின் விரும்பினார்.ஆனால், சென்னையில் கடந்த வாரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, 'தொண்டர்கள் கூடவே இருக்கும் உற்சாகத்தில், இன்னும் 50 ஆண்டு காலம் வாழ்வேன்' என பேசி, அடுத்த பல ஆண்டுகளுக்கும் தானே கட்சியின் தலைவராக நீடிக்க விரும்புவது போல பேசினார்.இந்த நிலைப்பாட்டில்தான் அழகிரியும் இருக்கிறார். அதை ஆமோதிப்பது போலத்தான் கருணாநிதி பேசியுள்ளார். அதேபோல, கே.பி.ராமலிங்கம் மீது நடவடிக்கை எடுக்காத விஷயத்திலும், கருணாநிதி உறுதியாக இருந்தது, அழகிரிக்காகத்தான் என சொல்கின்றனர்.இப்படி, கருணாநிதியின் முடிவிலும், பேச்சிலும் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், விரைவில் அழகிரியுடன் சமரசக் கொடிபறப்பதற்கான அறிகுறி.இவ்வாறு, அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக