சனி, 9 ஆகஸ்ட், 2014

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன்? தேர்தல் கமிஷனர் சம்பத் வியாக்கியானம் !!

அது சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கப்பட்ட முடிவு. உரிய அனுமதி பெற்றுத் தான் 144 தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டது.
 சம்பத் விளக்கம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம்   மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக நயினார் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தேர்தல் ஆணையர் சம்பத் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும்  அவர் அளித்த பதில்களும்:  அது என்ன வழவழ சூழ்நிலை ? அது என்ன உரிய அனுமதி ?  சம்பத்தும்  பிரவீன் குமாரும்   உலக மகா வல்லவர்கள் . நோபல் ஆஸ்கார் போன்ற  பரிசுகளுக்கு யாராவது  ரெக்கமன்ட் பண்ணுங்க !

 
கேள்வி:-  மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தில் தவறுகள் நடப்பதாக புகார்கள் தெரிவிக்கப் பட்டுள்ளதே?
பதில்:-2009-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இருந்தே மின்னனு  வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த எந்திரங்கள் குறித்து பலர் புகார் கூறி, பல்வேறு நிபுணர்கள் ஆய்வு செய்து தவறு நடக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர். தவறுகள் நடக்க முடியாத நல்ல திட்டம் தான்,
கே: மீண்டும் வாக்குச் சீட்டு முறை அமலுக்கு வருமா?
ப:- மின்னனு எந்திரத்தில் தவறு இருந்தால் தானே இதுபற்றி யோசிக்க வேண்டும்.
கே:- கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் கணக்கை சமர்பித்து விட்டார்களா?
ப:- இது தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தணிக்கை செய்து வருகின்றனர். முறைப்படி தேர்தல் கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.கே:- கடந்த மக்களவை தேர்தலின்போது தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் அவசியம் என்ன?
ப:-அது சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கப்பட்ட முடிவு. உரிய அனுமதி பெற்றுத் தான் 144 தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டது. டெல்லியில் கூட தேர்தலின்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
கே:-தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் தேதி திடீரென நிறுத்தப் பட்டுள்ளது ஏன்?
ப:- வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்பட்ட தால் அதை சரிசெய்த பின்னர் தேதி அறிவிக்கப்படும்.

கருத்துகள் இல்லை: