அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து, மூன்றாண்டுகள் முடிந்து விட்ட நிலையில்,
முதியோருக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பு
வெளியாகவில்லை. சட்டசபையில், முதல்வர் இத்திட்டம் குறித்து அறிவிப்பாரா
என்ற எதிர்பார்ப்பில், முதியோர் காத்திருக்கின்றனர்.
இலவசமாக...'ஆட்சிக்கு வந்தால், முதியோருக்கு, அரசு பஸ்களில் பயணிக்க, இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்' என, அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. இத்திட்டத்தின் படி, 58 வயதுக்கு மேற்பட்ட முதியோர், அரசு பஸ்களில், பிற நகரம் மற்றும் கிராமங்களுக்கு, இலவசமாக சென்று வர முடியும் என்பதால், முதியோர் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்தது.ஆதரவற்ற முதியோர், மருத்துவமனை, கோவில், நுாலகம், உறவினர்கள் வீடு உள்ளிட்ட இடங்களுக்கு, இலவசமாக சென்று வர முடியும் என்பதால், இந்த அறிவிப்பு, முக்கியத்துவம் பெற்றது. வோட்டு போட கொடுத்த ரூ 200 னால் கவிழ்ந்த தமிழக மக்களுக்கு, முதியர், முடியாதவர்கள் மற்றும் விவசாயி பற்றி கவலை எதுக்கு இன்னும் இரண்டு வருடத்தில் எதனை முதிய்யோர் மேலோகம் செல்ல்வர்கள் என்று கணக்கு எடுத்து அடுத்த தேர்தலில் கள்ள வோட்டு போடலாம்
கடந்த, 2012 - -13ல், தமிழக பட்ஜெட் அறிவிப்பில், இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
நம்பிக்கையுடன்...லோக்சபா தேர்தல் வருவதற்குள், தேர்தல் அறிவிப்புகளை செயல்படுத்தும் திட்டம், அரசுக்கு இருந்ததால், 2013 - -14 பட்ஜெட்டிலாவது, இந்த அறிவிப்பு நிச்சயம் வெளியாகும் என, நம்பிக்கையுடன், முதியோர் இருந்தனர். அதிலும் அறிவிக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.போக்குவரத்துத் துறை சார்பில், கடந்த பட்ஜெட்களில், முக்கிய திட்டங்கள் பல அறிவிக்கப்பட்டதால், இத்திட்டம் குறித்த அறிவிப்பு, அடுத்த பட்ஜெட்டில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், நடப்பாண்டு பட்ஜெட்டிலும், இதுகுறித்து அறிவிப்பு வெளியாகாததால், இத்திட்டம் கைவிடப்பட்டதோ என, பலர் கவலை தெரிவித்து உள்ளனர்.
இருப்பினும், சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் பல திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், இத்திட்டம் குறித்தும் அறிவிக்க வாய்ப்புள்ளது என்பதால், முதியோர் காத்திருக்கின்றனர்.இதுகுறித்து, மூத்த குடிமக்கள் முன்னேற்ற கழகத் தலைவர், திருமலை கூறியதாவது:இலவச பஸ் பாஸ் வழங்காததால், கிராமத்தில் வசிப்பவர்கள், நகரத்திற்கு பஸ்சில் வந்து செல்வதில், சிரமம் நீடிக்கிறது; வசதியில்லாதோர், பயணத்தை தவிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
செயல்பாட்டுக்கு வருமா?:இத்திட்டத்தை அறிவிக்க வேண்டி, முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளோம். விரைவில் அறிவித்தால் உதவியாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.இதுகுறித்து, போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது, அரசு முடிவு சம்பந்தப்பட்டது. அரசு தரப்பில் இருந்து, அறிவிப்பு வராத நிலையில், இத்திட்டம், எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பதை சொல்ல இயலாது' என்றார். dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக