மொசூல்: உலகமே காஸாவை காப்பாற்றுங்கள் என்று முழக்கமிட்டுக்
கொண்டிருக்கும் நேரத்தில் ஈராக்கில் மதம் மாற மறுத்த கிறிஸ்துவர்களை
ஆயிரக்கணக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் படுகொலை செய்து வருவதாக திடுக்கிடும்
தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈராக்கில் யாஜிதி இன மக்கள் மிகவும் சிறுபான்மையினர். இவர்கள்
கிறித்துவர்கள். ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசின் கட்டுப்பாட்டில்
இருந்த பெரும்பாலான நகரங்களை சன்னி முஸ்லிம்களின் ஆயுத அமைப்பான
ஐ.எஸ்.ஐ.எஸ் கைப்பற்றியது.
மதம் மாற மறுக்கும் கிறித்துவர்களின் தலைகளை வெட்டிக் குவிக்கும்
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்!
அத்துடன் சிரியா, ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய பிரதேசங்களை ஒன்றிணைத்து
இஸ்லாமிய தேசம் என்று தனிநாடாக பிரகடனம் செய்தது. தங்களது இயக்கத்தின்
பெயரையும் இஸ்லாமிய தேசம் என்றே மாற்றியது.
இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றிய சிஞ்சார் நகரில் ஒரே நாளில் 2
ஆயிரம் கிறித்துவர்கள் படுகொலை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல்கள்
வெளியாகி இருக்கிறது. இவர்கள் செய்த ஒரே குற்றம், இஸ்லாத்துக்கு மதம் மாற
மறுத்தது என்பது மட்டுமே.
சிரியாவிலோ இப்படி மதம் மாற மறுப்போரின் தலைகளை வெட்டி எடுத்து கம்புகளில்
நட்டு வைக்கின்றனர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர். இதேபோல் துருக்கியர்கள்,
சபாக்ஸ் ஆகிய சிறுபான்மையினரையும் இலக்கு வைத்து ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர்
வேட்டையாடுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக