வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

ஸ்டாலின் அதிரடி ! தொண்டர்களை சந்தித்து தனது பலத்தை திரட்டுகிறார் ?

தி.மு.க.,வில், அழகிரி - ஸ்டாலின் இடையேயான பனிப்போர் முற்றி வருகிறது. கட்சியில் மீண்டும் சேர்வதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, சென்னையில் முகாமிட்டு காய் நகர்த்தி வருகிறார். அதை முறியடிக்கும் திட்டத்துடன், தமிழகம் முழுவதும் தொண்டர்களை திரட்ட, பொருளாளர் ஸ்டாலின், நேற்று, தன் சுற்றுப்பயணத்தை துவங்கி உள்ளார்.தி.மு.க.,விலிருந்து, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கு ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், கட்சியில் அழகிரிக்கு ஆதரவாக உள்ளவர்களை, தன் பக்கம் இழுப்பதில், ஸ்டாலின் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
அதிருப்தி:சமீபத்தில், மதுரையில் நடந்த தி.மு.க., கண்டன பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்த ஸ்டாலின், அழகிரியின் ஆதரவாளர், 'மிசா' பாண்டியனை அரவணைத்துக் கொண்டார்.இதனால், கடும் அதிருப்தி அடைந்த அழகிரி, மீண்டும் கட்சியில் சேரும் முயற்சியை தீவிரப்படுத்தியதுடன், ஸ்டாலினுக்கு பாடம் புகட்ட வேண்டும் என, கருதி, சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளார்.  திமுக பலமிழந்து   போனாலும்  பரவாயில்லை  தான் மட்டும்  பலமாக  இருக்க வேண்டும்  என்று ஸ்டாலின்  வளர்க்க பட்டு இருப்பது போல் தெரிகிறது . கழகம் இவ்வளவு பெரும் தோல்வியை  ஸ்டாலின் ஒருவரால் மட்டுமே பெற்ற குற்ற உணர்வு  கொஞ்சம் கூட இல்லாமல் மீண்டும் மீண்டும் தன்னை முன்னிலை  படுத்தியே தளர்பதியின் அரசியல்  பாதை  திமுகவின்  அழிவை நோக்கி செல்கிறது ?

கடந்த ஐந்து நாட்களாக, சென்னையில் தங்கியுள்ள அழகிரி, தன் தங்கை செல்வியின் கணவர், முரசொலி செல்வம் மூலமாக, கருணாநிதியிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளார்.உட்கட்சி தேர்தல் முடிவடைந்ததும், அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு, கருணாநிதி இசைவு தெரிவித்து உள்ளார்.'தேர்தலில், தி.மு.க.,வுக்கு எதிராக பணியாற்றியதற்கு, வருத்தம் தெரிவித்து, அழகிரி கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும்' என, கருணாநிதி தரப்பில் யோசனை கூறப்பட்டுள்ளதாக, தெரிய வருகிறது.
கடும் எதிர்ப்பு :அதே சமயம், அழகிரியை மீண்டும் கட்சியில்சேர்ப்பதற்கு, ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், அதை தடுக்க, அனைத்து வழிகளிலும் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இந்த விவகாரத்தில், கருணாநிதியுடன், ஸ்டாலின் கடும் வாக்குவாதமும் நடத்தி உள்ளார்.அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்த்தால், அழகிரியிடமிருந்து, தன் அணிக்கு தாவிய பிரமுகர்கள், மீண்டும் அவரது பக்கம் ஓடி விடுவர் என்ற அச்சம், ஸ்டாலினுக்கு ஏற்பட்டு உள்ளது.இதனால், கட்சியில் மாவட்ட வாரியாக, தன் விசுவாசிகளை ஒருங்கிணைக்கவும், அவர்களை, எந்த ஒரு மாவட்ட செயலரின் கட்டுப்பாட்டிலும் சென்று விடாமல் தடுக்கவும் திட்டமிட்டு உள்ளார். மேலும், அவர்கள் அனைவரும் முழுக்க, முழுக்க தன் ஆதரவாளர்களாக செயல்பட வேண்டும் என, ஸ்டாலின் விரும்புகிறார்.
எனவே, தொண்டர்களின் தொண்டராக மாறும், 'மாஸ்டர் பிளானின்' அடிப்படையில், நேற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில், தொண்டர்களை நேரில் சந்திக்கும் நேர்காணல்நிகழ்ச்சியை, ஸ்டாலின் துவக்கி உள்ளார்.தி.மு.க.,வில் தற்போதுள்ள, 34 மாவட்டங்களிலும், இரண்டு மாதம் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கட்சியின் ஒவ்வொரு மட்டத்திலும், 20 தொண்டர்கள் கொண்டகுழுவுடன், 45 நிமிடம் கலந்துரையாடல் நடத்துகிறார்.
கட்சியில் எப்பதவியும் வகிக்காத, அடிப்படை உறுப்பினர்களான, 20 தொண்டர்களுடன், மதிய உணவு சாப்பிட்டு, அவர்களுடன் மனம் விட்டு பேசி, கருத்துகளை கேட்க உள்ளார்.ஒவ்வொரு நாளும், குழு விவாதங்கள் நிறைவடைந்த பின், மாலை 6:00 மணிக்கு, கட்சி தொண்டர்கள் அனைவரும் பங்கேற்கும், கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் தொண்டர்கள், தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள இந்த திடீர் சுற்றுப்பயணம், கட்சியில் அழகிரி - ஸ்டாலின் இடையிலான பனிப்போர், உச்சகட்டத்தை எட்டுகிறது என்பதையே காட்டுகிறது.- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: