புதன், 6 ஆகஸ்ட், 2014

தமிழர்களே தமிழர்களே இந்தி படியுங்கோ ! சொல்வது மார்கண்டேய கட்ஜு ! இனி படிசாப்போலதாய்ன் !

தமிழர்கள் அனைவரும் இந்தி கற்க வேண்டும்' என, இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும் இருந்தவர் மார்கண்டேய கட்ஜு. இவர், தற்போது, இந்திய பிரஸ் கவுன்சில் தலைராக உள்ளார்.
பரபரப்பு :தன், 'பேஸ்புக்' பக்கத்தில், திடீர் திடீரென பல கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருபவர்.இவர் நேற்று தன், 'பேஸ் புக்' பக்கத்தில், தமிழர்கள் இந்தி கற்பது குறித்து, ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார்.அக்கட்டுரையில் கூறியிருப்பதாவது:அனைத்து தமிழர்களும் இந்தி மொழி கற்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன். நான் இந்தியை திணிக்கிறேன் என எடுத்துக் கொள்ளக் கூடாது.நான் எதையும் திணிப்பதை எதிர்ப்பவன். இது ஜனநாயகத்தின் காலம் என்பதால், எதையும் திணிக்க முடியாது. அதான் ரொம்ப வருத்தமோ ? ஹிந்தி பேசும் மக்கள் தமிழ் படிக்க தயாரா?......ஹிந்தி எல்லாம் பள்ளியில் படிக்க அவசியம் இல்லை.....மாலையில், விடுமுறையில் படித்தால் போதும்.....ஹிந்தி மொழியை பள்ளியில் படித்து எவனும் கவிதை, கட்டுரை எழுதப்போவதில்லை.......கொஞ்சம் பேசணும், கொஞ்சம் போர்ட் படிக்கணும்......இதுக்கெல்லாம் பள்ளியில் ஹிந்தி படிக்க தேவையே இல்லை.......தமிழை, ஆங்கிலத்தை நல்லா படித்தால் போதும்......ஹிந்தி படிக்கிறேன் என்று நேரத்தை வீணடிக்க வேண்டாம்.....

ஆனால், இந்தியாவில், இந்தி ஒரு தொடர்பு மொழியாக வளர்ந்துள்ளது என்பதே உண்மை. இந்தி தெரியாது என்பதால், தமிழகத்தை விட்டு வெளியில் செல்லும் தமிழர்கள், அதிகளவு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
இது போன்ற நடைமுறை காரணங்கள் இருப்பதால் தான், தமிழர்கள், இந்தி கற்றுக் கொள்வது அவசியமாகிறது. ஒரு முறை, அண்ணா பல்கலையில் என்னை பேச அழைத்திருந்த போது, அங்கு நான் இதை தெரிவித்தேன்.அங்கு நான் பேசி முடித்த போது, வயதான நபர் ஒருவர் (ஒருவேளை பேராசிரியராக இருக்கலாம்) எழுந்து, 'ஏற்கனவே, இந்தியாவில், ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும் போது, தமிழர்கள் ஏன் இந்தியை கற்க வேண்டும்?' என, கேட்டார்.அதற்கு, இந்தியாவில், 10 சதவீதம் பேர் அல்லது உயர் பிரிவினரில் குறிப்பிட்ட அளவினருக்கே, ஆங்கிலம் தெரியும். ஒரு வேளை, தமிழர் ஒருவர் டில்லிக்கு செல்வார் என்றால், அங்கு அவருக்கு பல பிரச்னைகள் ஏற்படும்.
அதிக சிக்கல்கள் :அங்குள்ள டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால், அவர்களுடனான தகவல் பரிமாற்றத்தில், அதிக சிக்கல்கள் ஏற்படும்.அதே நேரம், இந்தி தாய் மொழியாக இல்லாத, மேற்கு வங்கம், காஷ்மீர், பஞ்சாப், ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்த பெரும்பாலானோர், தங்கள் தாய் மொழி தவிர, பயன்பாட்டு இந்தி மொழியையும் அறிந்து வைத்துள்ளனர்.
உண்மையில், தமிழர்கள், 1960 முதல், இந்தி திரைப்படங்கள், இந்தி பிரசார சபா உள்ளிட்டவை மூலம், இந்தியை கற்று வந்தனர். ஆனால், அதற்குப் பின், குறுகிய கண்ணோட்டம் கொண்ட, சில வடமாநில அரசியல்வாதிகள், இந்தியை திணிக்க முயன்றதால், எதிர்ப்பு கிளம்பியது. இது துரதிருஷ்டவசமானது.ஆனால், அது முடிந்து போன விஷயம்; இனி நாம் முன்னேறி செல்ல வேண்டும். தமிழ் மொழி, இந்தியாவின் தொடர்பு மொழி என, சிலர் கூறி வருகின்றனர். ஆனால், இந்தியாவில், தமிழை அறிந்தவர்களை விட, இந்தியை அறிந்தவர்கள் எண்ணிக்கை, 15 மடங்கு அதிகம் என்பதே உண்மை.
நான், தமிழை விட, இந்தி உயர்ந்த மொழி என, கூறவில்லை. தமிழ் சிறந்த மொழி என்பதுடன், சிறந்த இலக்கிய வளம் கொண்டது. நான், அனைத்து மொழிகளும் இணையானவை என கருதுபவன். ஆனால், நம் நாட்டில், ஏற்கனவே, தொடர்பு மொழியாக வளர்ந்து விட்டதால், தமிழை விட, இந்தி மொழி அறிந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது தான் உண்மை.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தமிழ் படித்த கட்ஜு:மார்கண்டேய கட்ஜு, உத்தர பிரதேச மாநில தலைநகர், லக்னோவில் பிறந்தவர். காஷ்மீர் பண்டிட் இனத்தைச் சேர்ந்த இவர், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பே, தமிழ் படித்தவர் என்பதும், அவரது, 'பேஸ்புக்' கட்டுரை மூலம் தெரியவந்துள்ளது.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
கடந்த, 1963 முதல் 1967 வரை, அலகாபாத் பல்கலையில் படித்துக் கொண்டிருந்தேன், அந்த காலகட்டத்தில், என், 'ரெகுலர்' படிப்புடன், நம் நாடு குறித்து அறிந்து கொள்ளும் வகையில், தமிழ் டிப்ளமோ படிப்பையும் சேர்த்து எடுத்திருந்தேன்.அதன் பின், 1967 ஜூலை மாதம், அண்ணாமலை பல்கலைக்கு வந்து, ஓராண்டு பேச்சுத் தமிழ் தொடர்பான டிப்ளமோ கோர்சில் சேர்ந்து படித்தேன். பேச்சுத் தமிழுக்கும், எழுத்துத் தமிழுக்கும் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன.
அந்த படிப்பு அப்போதே, நிறுத்தப்பட்டு விட்டது என நம்புகிறேன். ஆனால், அந்த படிப்பு, தமிழை அறியாதவர்களுக்காக மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.அங்கு எனக்கு ஆசிரியர்களாக ராஜா மற்றும் பிள்ளை ஆகியோர் இருந்தனர். நான், அங்குள்ள கம்பர் விடுதியில், சில தமிழ் நண்பர்களுடன் தங்கியிருந்தேன். அப்போது, பல்கலையில் இருந்து, 2 கி.மீ., துாரத்தில் உள்ள, சிதம்பரம் கோவிலுக்கு சென்றேன். அந்த பல்கலை தொடர்பான, நினைவலைகளை எண்ணிப் பார்க்கிறேன்.கடந்த, 2004ல், சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதியாக, தமிழ் அறிவுடன் தான் நுழைந்தேன். தமிழை நான் பல ஆண்டுகள் தொடர்ந்து பயன்படுத்தா விட்டாலும், தமிழகத்தின் நிலைமைக்கு நான் பழகிக் கொள்ள உதவியாக இருந்தது.
நான், தலைமை நீதிபதியாக இருந்தபோது, என் உடன் அண்ணாமலை பல்கலை விடுதியில் தங்கியிருந்த, ரெட்டி என்ற நண்பர் என்னை, சென்னையில் இருந்த என் இல்லத்தில் வந்து சந்தித்தார்.நான், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்த போது, அண்ணாமலை பல்கலைக்கு சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும், சென்றேன். அங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அங்கு நான் தங்கியிருந்த கம்பர் விடுதிக்கு சென்ற போது, மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.என்னை கவுரவப்படுத்த ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது, அதில், அப்பல்கலையின் துணைவேந்தராக இருந்தவர், என்னை அந்த பல்கலையின் முன்னாள் மாணவர் என, அறிவித்தார்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.
- நமது நிருபர் - dinamalar.com

1 கருத்து:

Malai சொன்னது…

//அங்குள்ள டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால், அவர்களுடனான தகவல் பரிமாற்றத்தில், அதிக சிக்கல்கள் ஏற்படும்//

அவர்களை முதலில் ஆங்கிலம் கற்க செல்லலாமே. இந்தி படி படினு இப்படி குல்பி ஐஸ் விக்கறவங்க மாதிரி கூவி கூவி விக்கிரீகளே, இது உங்களுக்கு அசிங்கமா தெரியலையா. உங்க மொழிய எதாவது பலன் இருக்கா? எதாவது அறிவியல் சம்பந்தப்பட்ட துறையில் இந்தி பெரிய மொழியா இருக்கா? இல்லை இலக்கியங்கள், இதிகாசங்கள் போன்றவற்றில் இந்தி பெரிய மொழியா இருக்கா? இல்லை இந்தி படிச்சா வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? எதுவுமே கிடையாது. அப்புறம் எதற்கு இந்த அலப்பறை செய்யுறீங்க?

இந்தி என்ற மொழி முதலில் நம்ம இந்திய மொழியே கிடையாது? பாரசீகம், உருது போன்ற மொகலாய மொழிகளுக்கு பிறந்த கலப்பு மொழியை எப்படி இந்திய மொழியாகும்? எழுத்து வடிவம் சம்ஸ்கிருத வடிவில் இருந்தால் அது இந்திய மொழியாகி விடுமா?

பாரசீகம், உருது போன்ற மொழிகளுக்கு பிறந்த ஜாதி இந்தி என்பதால் தான் முஸ்லீம்களும் அதை விரும்பி பேசுறாங்க, இந்தியை எல்லாமே படிக்கணும் என்று சொன்னாலும் அதை வரவேற்குறாங்க. ஏனென்றால் அவர்கள் தோற்றுவித்த மொழி இன்று இந்தியாவை ஆள்கிறது என்ற பெருமை அவர்களுக்கு. ஆனால் இன்று இந்து கட்சிகள் இந்தியை இந்துக்களின் மொழியாக கொண்டாதுவது உண்மையில் சிரிப்புக்குரியது.

பாரசீகம், உருது கலப்பு மொழி இந்தியை உறுதி தன் தாய்மொழியாக கொண்ட பாகிஸ்தானியர்கள் பேசுவது சுலபம், வளைகுடா நாடுகளில் உள்ள அந்நாட்டவர் இந்தி முஸ்லீம்களின் மொழி என்ற கோணத்தில் பாரசீக மொழியில் பிறந்த மொழி என்ற உணர்வில் இந்தியை பேசுகின்றனர். ஆனால் எங்கள் மொழியை வளைகுடா நாடுகள் எல்லாம் பேசுகிறார்கள் என்று பெருமை பீத்துகிண்றீர்களே உண்மையில் உங்களை நினைத்தால் பாவமாக தெரிகிறது.

இந்தியை படிக்க சொல்வதின் காரணமே, சம்ஸ்கிருத மொழியை எளிதாக திணிக்க தான். சம்ஸ்கிருத எழுத்துக்கள் இன்றும் உயிருடன் தான் உள்ளது இந்தி வடிவில். சம்ஸ்கிருத சொற்களும் இந்தியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்தி படித்தவருக்கு சம்ஸ்கிருத மொழியை கற்றுக்கொள்ள எளிதாக இருக்கும். இதை கருத்தில் கொண்டே இன்று இந்தி திணிப்பு வேகமாக நடைபெறுகிறது. உண்மையில் இந்தி என்ற மொழி கோவிலில் நேர்ந்துவிடப்பட்ட பலிகிடா.