வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

நான்கு கிலோவில் தங்க சட்டை மும்பை அரசியல் பிரமுகரின் ஆசை !

பங்கஜ் பராக் அவரது வெற்றியின் அடையாளமாக தூய தங்கத்தால் ஆன சட்டை ஒன்றை செய்திருக்கிறார். இந்த நான்கு கிலோ எடை கொண்ட தங்க சட்டையை தயாரிக்க 1.30 கோடி செலவு ஆனது. திரு பராக், பள்ளிப் படிப்பை 8ம் வகுப்பில் நிறுத்திய பிறகு, ஆடை தொழில் மூலமாக செல்வத்தை உருவாக்கியவர். இவர், மும்பையில் இருந்து சுமார் 260 கி.மீ தொலைவில் உள்ள யெலொ(Yeloa)வில் நகராட்சி உறுப்பினராக உள்ளார்.
பங்கஜ் பராக் அவர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) 45வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த விஷேச ஆடையை அணிந்திருக்கிறார். இவரது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா சுற்றுலாத்துறை அமைச்சர் சகன் புஜ்பல் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, என்று பராக் கூறியுள்ளார்.


'என்னுடைய ஐந்து வயதில் நான் படித்துக்கொண்டிருக்கும் போதே தங்கத்தை பற்றிய ஆர்வம் எனக்கு அதிகமாக இருந்தது. சில ஆண்டுகளில், நான் இந்த ராயல் மெட்டல் மீது ஆர்வம் மிகுந்தவனாக மாறிவிட்டேன். இன்று வெள்ளிக்கிழமை எனது 45வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த சிறப்பு சட்டையை நான் அணிந்துள்ளேன்.' என்று திரு பராக், கூறியுள்ளார்.

இந்த சட்டை 85 கி.மீ. தொலைவில் உள்ள நாசிக்கில் வடிவமைக்கப்பட்டது, பின்னர் மும்பையில் உள்ள நகைக்கடையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 20 கைவினைஞர்களை கொண்டு கடந்த இரண்டு மாதங்களில் 3,200 மணி நேரம் செலவு செய்து 'தைத்து', உருவாக்கப்பட்டது. திரு பராக், இந்த தங்க சட்டையை அணிந்து மும்பையில் உள்ள பிரபல சித்திவிநாயகர் கோயில் தரிசனம் செய்ய வந்திருந்தார் dinakaran.com

கருத்துகள் இல்லை: