சனி, 9 ஆகஸ்ட், 2014

பூலான் தேவி கொலை வழக்கில் தீர்ப்பு ! பலாத்காரம் செய்த 17 பேரை கொன்று பழி தீர்த்த நாயகி !


பிரபல கொள்ளைக்காரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய பூலான்தேவி கொலை வழக்கில் ராணா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மற்ற 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
பூலான்தேவி கொலை உத்தரபிரதேச மாநிலத்தில் பிரபல கொள்ளைக்காரியாக விளங்கியவர் பூலான்தேவி. பின்னர் இவர் அரசிடம் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்தார். பொது மன்னிப்பு வழங்கப்பட்ட அவர் பின்னர் அரசியல்வாதியாகி, மிர்சாபூர் தொகுதியின் சமாஜ்வாடி கட்சியின் எம்.பி.யானார்.
2001–ம் ஆண்டு ஜூலை 25–ந்தேதி பூலான்தேவி, டெல்லி அசோகா ரோட்டில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது ஒரு கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளியான ஷேர்சிங் ராணாவும், அவரது கூட்டாளிகள் 11 பேரும் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.  இந்த சின்னஞ்சிறுமியை  வயது வித்தியாசமே இல்லாமல் பாலியல்  பலாத்காரம் செய்த அந்த கொடியவர்களுக்கு பூலன்தேவி கொடுத்த தண்டனை  உண்மையில் இந்திய  வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதே ! பிறந்த தேதி 10 August 1963
பூலன்தேவியின் ஆத்மாவுக்கு அஞ்சலி

பழிவாங்க நடந்த கொலை தனக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை சம்பவத்துக்கு பழிவாங்கும் வகையில் பெஹ்மி கிராமத்தில் 1981–ம் ஆண்டு தாகூர் வகுப்பை சேர்ந்த 17 பேரை வரிசையாக நிற்க வைத்து பூலான் தேவியின் கும்பல் சுட்டுக்கொன்றது. குழந்தையாக இருந்த ஷேர்சிங் ராணா இதனை நேரில் கண்டதாக பின்னர் கூறப்பட்டது. அதற்கு பழிவாங்கும் நோக்கில் பூலான்தேவியை கொன்றதாகவும் கொலையாளிகள் கூறினர்.
பூலான்தேவி கொலை நடந்த அதே நாளில் ஹரித்வார் போலீஸ் நிலையத்தில் தனது பெயரிலேயே குற்றவழக்கு ஒன்றை பதிய ராணா ஏற்பாடு செய்தான். ராணாவின் கையாள் ஒருவனை ராணாவின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து கைது செய்யப்பட்டு ஹரித்வார் சிறையில் அடைக்கப்பட்டான். கொலைக் குற்றத்தில் இருந்து போலீசாரை திசைதிருப்ப ராணா இந்த தந்திரத்தை கையாண்டான். ஆனால் கோர்ட்டில் போலீசார் இதனை நிரூபித்தனர்.
சிறையில் இருந்து தப்பியவன் இடையில் 2004–ம் ஆண்டு ராணா திகார் சிறையில் இருந்து தப்பிஓடினான். தனது நண்பனுக்கு போலீஸ் வேடமிட்டு, ராணாவை விசாரணைக்காக ஹரித்வாருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறி சிறையில் இருந்து தப்பினான். வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் என பல நாடுகளில் அவன் வேறு பெயரில் தங்கியிருந்தான். 2 ஆண்டுகள் டெல்லி போலீசுக்கு கண்ணாமூச்சி காட்டிய ராணா 2006–ம் ஆண்டு கொல்கத்தாவில் பிடிபட்டான்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரதீப் என்பவர் திகார் ஜெயிலில் 2013–ம் ஆண்டு நவம்பர் மாதம் மாரடைப்பால் இறந்துபோனார். ராணா உள்பட மற்ற 11 பேர் மீதும் டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்துவந்தது. சம்பவம் நடந்து 13 வருடங்களுக்கு பின்னர் இந்த வழக்கில் நீதிபதி பாரத் பரஸ்ஹர் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
ராணா குற்றவாளி அப்போது, முக்கிய குற்றவாளி ராணா கொலை மற்றும் கொலை முயற்சி போன்ற பிரிவுகளின் கீழ் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பு கூறினார். மற்ற 10 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். தண்டனை விவரம் 12–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார்.

கருத்துகள் இல்லை: